.jpg)
சிலோன் பிஸ்கட் நிறுவனத்தின் துணை நிறுவனமான பிளென்டி ஃபூட்ஸ் பிரைவட் லிமிடெட் நிறுவனத்தின் பெருமைக்குரிய தயாரிப்பான சமபோஷ வர்த்தகநாமம் ISO 22000, HACCP மற்றும் GMP எனும் மூன்று தரச் சான்றிதழ்களை பெற்றுள்ளது. இதன் மூலம் வெளிநாட்டு சந்தை வாய்ப்பு மேலும் அதிகரித்துள்ளது. இத் தரச் சான்றிதழ்கள் மூலம் சமபோஷ தயாரிப்பானது போட்டிகரமான வெளிநாட்டு சந்தையை எதிர்கொள்ள முடிவதுடன், தேசிய தானிய ஆகார தயாரிப்புகளில் முன்னணியில் விளங்குகிறது.
அண்மையில் இலங்கை நியமங்கள் நிறுவனத்தின் மூலம் சிலோன் பிஸ்கட் லிமிடெட் நிறுவனத்தின் சமபோஷ வர்த்தகநாமத்திற்கு மூன்று தரச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. உணவு உற்பத்தி செயற்பாடுகள் மற்றும் பயன்படுத்தப்படும் மூலப்பொருட்களின் தரம் மற்றும் தூய்மை காரணமாக இத் தரச் சான்றிதழ்கள் சமபோஷ வர்த்தகநாமத்திற்கு கிடைத்துள்ளன.
இந் நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த CBL குழுமத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் சியாமளி விக்ரமசிங்க, 'CBL நிறுவனம் மற்றும் அதன் துணை நிறுவனங்கள் உணவு உற்பத்தி துறையில் உயர் தரம் வாய்ந்த வியாபார உத்திகளை பயன்படுத்தி தரமான தயாரிப்புகளையே வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வருகின்றது. இதன் மூலம் வாடிக்கையாளர்களின் நம்பிக்கை மேலும் உயர்வடைந்துள்ளது. அந் நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்வதற்கு தொழில்நுட்ப நிபுணர்கள், ஆய்வு மற்றும் அபிவிருத்தி அதிகாரிகள் மற்றும் நிறுவனத்தின் பணியாளர்கள் பெரும் பக்கபலமாக இருந்தனர்' என தெரிவித்தார்.
தானிய ஆகார தயாரிப்புகளில் முன்னோடியாக திகழும் சமபோஷ வர்த்தகநாமமானது பிளென்டி ஃபூட்ஸ் நிறுவனத்தின் முன்னணி தயாரிப்பாக விளங்குவதுடன், 100% தேசிய விவசாயிகளிடமிருந்து பெறப்படும் அரிசி, சோயா, பயறு மற்றும் சோளம் ஆகிய தானியங்கள் கொண்டு உற்பத்தி செய்யப்படுகிறது. கடந்த பல வருடங்களாக வயது வித்தியாசமின்றி மில்லியன் கணக்கான மக்களின் போசணை மட்டம் குறித்து கவனம் செலுத்திய சமபோஷ வர்த்தகநாமத்திற்கு கிடைத்த இச் சான்றிதழ்கள் மூலம் வெளிநாட்டு சந்தையில் உறுதியாக கால்தடம் பதிக்க முடிந்துள்ளது என பிளென்டி ஃபூட்ஸ் நிறுவனத்தின் பணிப்பாளரும், பிரதம நிறைவேற்று அதிகாரியுமான ஷம்மி கருணாரத்ன தெரிவித்தார். மேலும் அவர், 'CBL தயாரிப்புகள் ஏற்கனவே பல நாடுகளில் விற்பனை செய்யப்பட்டு வருவதுடன், சமபோஷ தயாரிப்பின் தனித்துவமான சுவை மற்றும் அதன் போசணை காரணமாக வெளிநாட்டு சந்தையில் நிலையான பெயரினை பெற்றுள்ளது. விசேடமாக உற்பத்தி செயற்பாடு மற்றும் அதன் மூலப்பொருட்களின் தூய்மை மற்றும் தரத்தின் அடிப்படையிலேயே தரச் சான்றிதழ்கள் வழங்கப்படுகின்றன. எனவே, எமது தயாரிப்புகளுக்கு உயர் தரத்திலான மூலப்பொருட்களை வழங்கும்; தேசிய விவசாயிகளே எமது வெற்றிக்கு மூலக்காரணமாகும்' என்றார்.
இந்நாட்டு குழந்தைகளின் போஷாக்கு குறித்து தொடர்ச்சியாக அக்கறை செலுத்தி வரும் சமபோஷ தயாரிப்பில் 9 விற்றமின்கள் மற்றும் கனியுப்புகள் அடங்கியுள்ளன. சமபோஷ உற்பத்திக்கு அவசியமான தானியங்களின் தரம் பயிரிடப்பட்ட காலம் முதல் அறுவடை காலம் வரையிலும் கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. அறுவடை மற்றும் தானிய வகைப்படுத்தலின் போது உயர் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது. பிளென்டி ஃபூட்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமாக மடாடுகம பிரதேசத்தில் விசேட விவசாய சேவை மத்திய நிலையம் மற்றும் தானிய களஞ்சியசாலை உள்ளது. இதற்கு மேலதிகமாக பிளென்டி ஃபூட்ஸ் நிறுவனத்தின் மூலம் முன்;னுதாரணமான விளைநிலங்களை மேற்கொண்டு அதன் மூலம் உயர் தர தானியங்களை உருவாக்கும் ஆராய்ச்சிகளை முன்னெடுத்து வருகின்றது.