2026 ஏப்ரல் 23, வியாழக்கிழமை

'கிழக்கில் முதலீடு செய்ய இந்தோனேசியா விருப்பம்'

Super User   / 2013 ஜூன் 25 , மு.ப. 10:53 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன், தேவ அச்சுதன்


இந்தோனேசியா முதலீட்டாளர்கள் கிழக்கு மாகாணத்தில் முதலீடு செய்வதற்கு விருப்பத்துடன் உள்ளனர் என கொழும்பிலுள்ள இந்தோனேசியா தூதுவராலயத்தின் முதலாவது செயலாளர் அல்பட் அப்டி தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்ட வர்த்தக கைத்தொழில் விவசாய சம்மேளன பிரதிநிதிகளை மட்டக்களப்பிலுள்ள அலுவலகத்தில் சந்தித்தபோதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இந்தோனேசியா தூதுவராலயத்தின் முதலாவது செயலாளர் அல்பட் அப்டி இன்று மட்டக்களப்புக்கு விஜயம் செய்து மட்டக்களப்பிலுள்ள வர்த்தக கைத்தொழில் விவசாய சம்மேளன பிரதிநிதிகளை சந்தித்து கலந்துரையாடினார்.

இதன்போது புடவை மற்றும் காகிதாதிகளை இந்தேனேசியாவிலிருந்து இறக்குமதி செய்தல் இந்தோனேசியாவின் முதலீட்டாளார்கள் கிழக்கு மாகாணத்திற்கு வருகை தந்து முதலீடுகளை மேற்கொள்ளுதல் போன்றவைகள் தொடர்பாக இந்த சந்திப்பின் போது கலந்துரையாடப்பட்டன.

இந்த சந்திப்பின்போது மட்டக்களப்பு மாவட்ட வர்த்தக கைத்தொழில் விவசாய சம்மேளனத்தின் தலைவர் வி.ரஞ்சிதமூர்த்தி நிருவாக உத்தியோகத்தர் எஸ்.குகதாஸ், மற்றம் சம்மேளன பிரதிநிதிகள், மட்டக்களப்பிலுள்ள வர்த்தகர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .