2026 ஏப்ரல் 23, வியாழக்கிழமை

சாரதிகள், உதவியாளர்களுக்கு ஒன்றுகூடல் வைபவத்தை ஏற்பாடு செய்திருந்த லபார்ஜ் நிறுவனம்

A.P.Mathan   / 2013 ஜூன் 25 , பி.ப. 05:03 - 0     - {{hitsCtrl.values.hits}}


சீமெந்து ஏற்றிச் செல்லும் சாரதிகள் ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பு தொடர்பில் கவனம் செலுத்த வேண்டியதன் அவசியத்தை சாரதிகள் மற்றும் உதவியாளர்களுக்கு லபார்ஜ் மகாவலி சீமெந்து நிறுவனம் தெளிவுபடுத்தியுள்ளது.  
 
லபார்ஜ் நிறுவனம் மூன்றாவது தடவையாகவும் ஏற்பாடு செய்திருந்த சாரதிகள், உதவியாளர்களுக்கான ஒன்றுகூடல் வைபவம் கொழும்பு வெள்ளவத்தை சபாயர் ஹோட்டலில் அண்மையில் நடைபெற்றதுடன் 300இற்கும் அதிகமான சாரதிகள் மற்றும் உதவியாளர்கள் கலந்துகொண்டனர். 
 
ஊழியர்கள் தமது நாளாந்த பணிகளில் ஈடுபடும்போது பாதுகாப்பாக செயற்படுவது எவ்வாறு என்பது தொடர்பான பாதுகாப்பு ஆலோசனைகள் இதன்போது ISEC நிறுவனத்தின் சுகாதார மற்றும் பாதுகாப்பு ஆலோசகர் ஜனக்க சம்மிக்கவினால் வழங்கப்பட்டது.  
 
ஒன்றுகூடல் வைபவத்தில் நாடு தழுவிய ரீதியிலிருந்து வருகை தந்திருந்த சாரதிகள் மற்றும் உதவியாளர்களுக்கு தமது சகபணியாளர்களுடன் நேரத்தை செலவழித்து அவர்களுடன் உரையாடி மகிழ சந்தர்ப்பம் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டிருந்தது.  
 
'சாரதிகளாகிய நாங்கள் தொடர்ச்சியாக பணியாற்றுகின்றபோதிலும் எங்களால் ஒன்றாக இணைவதற்கு சந்தர்ப்பம் கிடைப்பதில்லை.அநேக தருணங்களில் நாங்கள் தனிமையிலேயே எமது நடவடிக்கைகளை முன்னெடுக்கின்றோம். இந்த ஒன்றுகூடல் வைபவம் எமது சக பணியாளர்களை சந்தித்து அவர்களுடன் நேரம் செலவழிக்க கிடைத்த சந்தர்ப்பமாக அமைந்துள்ளது' என லபார்ஜ் நிறுவனத்தில் சாரதியாக பணியாற்றும் பாணந்துறையைச் சேர்ந்த லசந்த பீரிஸ் குறிப்பிட்டார்.
 
மத்துகமவைச் சேர்ந்த ஓ.வி.தீபால் கருத்து தெரிவிக்கையில், 'சாரதிகளாகிய நாங்கள் எமது காலத்தில்  பெரும்பாலான பகுதியை வீதிகளிலேயே செலவிடுகின்றோம். ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்துக்கு பயணிப்பதிலேயே எமது நேரம் பெரும்பாலும் செலவாகின்றது. இதன்போது எமது பாதுகாப்பு முக்கியமானது.  பாதுகாப்பானதும் அமைதியானதுமான வாழ்க்கை வாழ்வதே எமது குறிக்கோள். ஆகையால் வீதி பாதுகாப்பு முக்கியமானது' என்றார்.
 
'அநேக நிறுவனங்களில் உயர் அதிகாரிகளை இலக்கு வைத்தே ஒன்றுகூடல் நிகழ்ச்சிகளில் ஏற்பாடு செய்யப்படுகின்றன. எனினும் சாரதிகளுக்கும் உதவியாளர்களுக்கும் ஒன்றுகூடல் நிகழ்ச்சியினை லபார்ஜ் ஏற்பாடு செய்துள்ளமை புது முயற்சியாகும். இந்த ஒன்றுகூடல் எமக்கு பொழுதுபோக்கு அம்சமாக அமைந்தது. அத்துடன் ஏனைய நிறுவனங்களுக்கும் முக்கிய தகவல் இதன்மூலம் சென்றிருக்கும்' என மத்துகமவைச் சேர்ந்த ராமசந்திர தெரிவித்துள்ளார்.
 
லபார்ஜ் நிறுவனத்தின் நடவடிக்கைகளுக்கு சாரதிகள் மற்றும் உதவியாளர்களின் பங்களிப்பு இன்றியமையாதது. அத்துடன் எமது வர்த்தகம் சாரதிகள் மற்றும் உதவியாளர்களில் தங்கியுள்ளது. எமது நிறுவனத்தில் அவர்களின் பங்களிப்பு உயர்ந்தது. ஆகவே அவர்களின் நலன்புரி தொடர்பில் கவனம் செலுத்த வேண்டியது எமது பொறுப்பாகும் என லபார்ஜ் நிறுவனத்தின் சந்தைப்படுத்தல் மற்றும் விற்பனை பிரிவின் பிரதானி சுசந்த பெரேரா தெரிவித்தார்.
 
இந்த ஒன்றுகூடல் வைபத்தின்போது கடந்த 5 மாத காலப்பகுதியில் அதிகளவில் சீமெந்து ஏற்றிச்சென்ற சாரதிகள் மற்றும் உதவியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்கு பரிசில்கள் வழங்கப்பட்டது.   எதிர்காலத்திலும் இத்தகைய மதிப்பீடுகளை மேற்கொண்டு அவர்களை ஊக்குவிக்க எதிர்பார்ப்பதாக லபார்ஜ் நிறுவனம் தெரிவித்தது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .