2025 செப்டெம்பர் 25, வியாழக்கிழமை

இந்தோனேஷிய வர்த்தக கண்காட்சியில் கிழக்கு உற்பத்திகளை காட்சிப்படுத்த கோரிக்கை

Super User   / 2013 ஜூன் 28 , மு.ப. 06:01 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன்


எதிர்வரும் ஒக்டோபர் மாதம் இந்தோனேஷியாவில் நடைபெறவுள்ள வர்த்தக கண்காட்சியில் கிழக்கு மாகாண உற்பத்தி பொருட்களை காட்சிப்படுத்துமாறு கோரிக்கைவிடுக்கப்பட்டுள்ளது.

இந்த கோரிக்கை கொழும்பிலுள்ள இந்தோனேஷிய தூதுவராலயத்தின் முதலாவது செயலாளர் அல்பட் அப்டி விடுத்துள்ளார். காத்தான்குடியிலுள்ள வர்த்தகர்களை நேற்று வியாழக்கிழமை பொது நூலக கேட்போர் கூடத்தில் சந்தித்தபோதே இந்த கோரிக்கையினை விடுத்துள்ளார்.

காத்தான்குடி நகர சபை தலைவர் எஸ்.எச்.அஸ்பர் மற்றும் பிரதேசத்திலுள்ள வர்த்தகர்கள் இந்த சந்திப்பில் கலந்துகொண்டனர். இதன்போது தொடர்ந்து கருத்து தெரிவித்த் அல்பட் அப்டி,

"அக்டோபர் 16ஆம் திகதி தொடக்கம் 20ஆம் திகதி வரைக்கும் இந்த வர்த்தக கண்காட்சி இந்தோனேஷியாவில் நடைபெறவுள்ளது. இதில் கிழக்கு மாகாணத்தை சேர்;ந்த வர்த்தகர்கள் மற்றும் உற்பத்தியாளர்கள் பங்கு கொள்ளமுடியும். அதேபோன்று இந்த வர்த்தக கண்காட்சியினை வர்த்தகர்கள் பார்வையிடவும் முடியும்.

அதற்கான அழைப்பு நான் விடுக்கின்றேன். இலங்கையின் பொருளதார அபிவிருத்திக்கும் அதன் முன்னேற்றத்திற்கும் இந்தோனேசியா உதவ ஆயத்தமாக இருக்கின்றது. தமது வர்த்தக உற்பத்திப் பொருட்களை இந்தோனேஷியாவுக்கு ஏற்றுமதி செய்வதற்கான சந்தர்ப்பத்தினை வழங்க ஆயத்தமாகவுள்ளோம்" என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .