
ஹட்ச் - கார்கில்ஸ் ஃபுட் சிட்டியுடன் இணைந்து தனது வாடிக்கையாளா்களுக்கு வெகுமதிகளை வழங்கும் வகையில் ஜூன் மாதம் முழுவதும் ஊக்குவிப்பு திட்டத்தை முன்னெடுத்து வருகிறது. ஹட்ச் முற்கொடுப்பனவு மற்றும் பிற்கொடுப்பனவு வாடிக்கையாளர்களுக்கு நாளாந்தம் 10,000ரூபா பெறுமதியான அன்பளிப்பு வவுச்சர்களை வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இந்த நாளாந்த பரிசளிப்பு திட்டத்துக்கு தகுதி பெற ஹட்ச் வாடிக்கையாளர்கள் செய்ய வேண்டியது, கார்கில்ஸ் சுப்பர் மார்க்கெட் ஒன்றில் பொருட்களை கொள்வனவு செய்வது அல்லது ரீலோட் ஒன்றை மேற்கொள்வது அல்லது பிற்கொடுப்பனவு இணைப்புக்கான கொடுப்பனவை மேற்கொள்வது போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்வது போதுமானதாக அமைந்துள்ளது.
ஹட்ச் எலையன்சஸ் மற்றும் IDD வர்த்தகங்களின் உதவி பொது முகாமையாளர் சௌமித்ரா குப்தா கருத்து தெரிவிக்கையில், 'எமது அனைத்து வாடிக்கையாளர்களுக்காகவும் நாம் நாளாந்த அன்பளிப்பு ஊக்குவிப்பு திட்டமொன்றை முன்னெடுப்பதையிட்டு மகிழ்ச்சியடைகிறோம். ஒவ்வொரு வழிமுறையிலும் நாம் எமது வாடிக்கையாளர்களுக்கு உதவிகளை வழங்க எதிர்பார்த்துள்ளோம். கார்கில்ஸ் உடனான உடன்படிக்கையின் மூலம், வாடிக்கையாளர்களுக்கு மற்றுமொரு சிறந்த வெகுமதியை வழங்க எம்மால் முடிந்துள்ளது' என்றார்.
இந்த ஊக்குவிப்பு திட்டத்தில் பிலியந்தலையைச் சேர்ந்த நதீஷா சந்திமாலி குமாரி வெற்றி பெற்றிருந்தார். இவர் தனது பிற்கொடுப்பனவு கட்டணப்பட்டியலை கார்கில்ஸ் புட் சிட்டியில் செலுத்தியிருந்த போது, அவர் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டிருந்தார். தனது மாதாந்த கட்டண பட்டியலை கார்கில்ஸ் புட் சிட்டியில் செலுத்துவதை வழக்கமாக கொண்டுள்ளதாகவும், இது தனக்கு மிகவும் இலகுவானதாக அமைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
பண்டாரவளையை சேர்ந்த சிரியா தமயந்தி முதல் நாளின் வெற்றியாளராக தெரிவு செய்யப்பட்டிருந்தார். தான் இந்த பணத்தை வெற்றி கொண்டமை மிகவும் மகிழ்ச்சியளிப்பதாகவும், இந்தளவு பெரிய தொகையை தாம் வெற்றி பெறுவேன் என எதிர்பார்க்கவில்லையெனவும், சாதாரண 50 ரூபா ரீலோட் மூலம் தனக்கு இந்தளவு பெரிய தொகையை வெற்றி பெற கிடைத்தமையானது மிகவும் மகிழ்ச்சியளிப்பதாகவும் குறிப்பிட்டார். பல வெற்றியாளர்கள் தாம் தமது கட்டணப்பட்டியல்களை செலுத்தும் வேளையிலும், ரீலோட்களை செலுத்தும் வேளையிலும் வெற்றியாளர்களாக அறிவிக்கப்பட்டிருந்ததாக தெரிவித்திருந்தனர்.
கொடுக்கல் - வாங்கல்களில் எந்தவிதமான ஆகக்குறைந்த வரையறைகளும் இல்லை. ஹட்ச் வாடிக்கையாளர்கள் அனைவரும் இந்த திட்டத்தில் பங்குபற்ற முடியும் என குப்தா தெரிவித்திருந்தார்.
நாட்டின் அனைத்து பகுதிகளையும் சேர்ந்த ஹட்ச் வாடிக்கையாளர்கள் இந்த திட்டத்தில் பங்குபற்ற முடியும். நாடு முழுவதிலுமுள்ள 204 கார்கில்ஸ் புட் சிட்டிகளில் இந்த ஊக்குவிப்பு திட்டம் முன்னெடுக்கப்படுகிறது. ஒவ்வொரு ரீலோட் மற்றும் கட்டணப்பட்டியல் கொடுப்பனவின் போதும் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பொன்று கிடைக்கும்.
வெற்றி பெறும் அன்பளிப்பு வவுச்சர்களை எந்தவொரு கார்கில்ஸ் புட் சிட்டியில் அல்லது எக்ஸ்பிரஸ் விற்பனை நிலையங்களிலும் பயன்படுத்தி பொருட்களை கொள்வனவு செய்து கொள்ளலாம்.