2025 செப்டெம்பர் 25, வியாழக்கிழமை

எகிப்தில் ஏற்பட்டுள்ள அமைதியற்ற நிலையை தொடர்ந்து மசகு எண்ணெய் விலை அதிகரிப்பு

A.P.Mathan   / 2013 ஜூலை 04 , மு.ப. 11:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

எகிப்தில் ஏற்பட்டுள்ள அமைதியற்ற நிலையை தொடர்ந்து மசகு எண்ணெய்யின் விலை அதிகரித்துள்ளதாக சர்வதேச செய்திகள் அறிவிக்கின்றன. ஓகஸ்ட் மாதம் விநியோகிக்கப்படுவதற்கான மசகு எண்ணெய்யின் விலை பீப்பா ஒன்று 101.82 அமெரிக்க டொலர்களாக நேற்றைய தினம் நியுயோர்க் மேர்கன்டைல் எக்ஸ்சேன்ஜ் இல் பதிவாகியிருந்தது. கடந்த ஆண்டு மே மாதத்தின் பின்னர் பதிவாகிய உயர்ந்த பெறுமதியாக இது அமைந்திருந்தது.
 
எகிப்த், எண்ணெய் உற்பத்தியில் ஈடுபடாத நாடாக கருதப்பட்ட போதிலும், சுயெஸ் கால்வாயின் கட்டுப்பாட்டை தன்னகத்தே கொண்டுள்ளது. இந்த கால்வாயின் மூலமாகவே பெருமளவு எண்ணெய் சரக்கு கப்பல்கள் பயணங்களை மேற்கொள்கின்றமை குறிப்பிடத்தக்கது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .