2025 செப்டெம்பர் 25, வியாழக்கிழமை

புதிய பகுதிகளில் இறப்பர் செய்கை

A.P.Mathan   / 2013 ஜூலை 09 , மு.ப. 07:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையின் பாரம்பரிய இறப்பர் பயிர்ச்செய்கை பகுதிகளை தவிர்த்து, கிழக்கு மற்றும் வடக்கு பிராந்திய பகுதிகளில் இறப்பர் செய்கை மேற்கொள்வதற்கான நடவடிக்கைகளை இலங்கை அரசாங்கம் மேற்கொண்டுள்ளது.
 
இந்த செய்கையை மேற்கொள்வதற்கான ஆரம்பகட்ட பரீட்சார்த்த செய்கை வெற்றிகரமான விளைச்சல்களை வழங்கியுள்ளதாக இலங்கை இறப்பர் ஆராய்ச்சி நிலையத்தின் பணிப்பாளர் காமினி செனவிரட்ன தெரிவித்துள்ளார்.
 
கிழக்கு மாகாணத்தை பொறுத்தமட்டில் பதியத்தலாவ, அம்பாறை மாவட்டத்தின் மஹாஓய மற்றும் மட்டக்களப்பு மாவட்டத்தின் செங்கலடி ஆகிய பகுதிகளில் இந்த பரீட்சார்த்த செய்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
 
வடக்கு மாகாணத்தை பொறுத்தமட்டில் படையினரின் உதவியுடன் இந்த பரீட்சார்த்த செய்கைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன. 
 
இந்த பகுதிகளில் இறப்பர் செய்கை மேற்கொள்ப்பட்டால், மாதாந்தம் 25,000 ரூபா வரை ஓர் ஏக்கர் பயிர்ச்செய்கையின் மூலம் உற்பத்தியாளர்களுக்கு திரட்டிக்கொள்ள முடியும். சந்தையில் இறப்பரின் விலை 300 – 400 ரூபாவுக்கு இடைப்பட்டதாக காணப்பட வேண்டும் என அவர் குறிப்பிட்டார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .