2026 ஏப்ரல் 23, வியாழக்கிழமை

'செலிங்கோ இன்சூரன்ஸ்' களுவாஞ்சிக்குடி கிளைக்கான புதிய கட்டிடம்

Kogilavani   / 2013 ஜூலை 10 , மு.ப. 11:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

 
வடிவேல் சக்திவேல்


களுவாஞ்சிகுடியில் இயங்கிவந்த செலிங்கோ இன்சூரன்ஸ் நிறுவனத்தின் 153 வது கிளைக்கான புதியக் கட்டிடம் களுவாஞ்சிக்குடியில் திறந்துவைக்கப்பட்டது.

கடந்த 2007 ஆம் ஆண்டு தொடக்கம் களுவாஞ்சிகுடியில் பிறிதொரு கட்டிடத்தில் இயங்கி வந்த செலிங்கோ இன்சூரன்ஸ் நிறுவனம் தற்போது புதிக கட்டிடத்தில் இன்றிலிருந்த பரிணாமம் பெறுகின்றது.

செலிங்கோ இன்சூரன்ஸ் களுவாஞ்சிகுடி கிளை முகாமையாளர் ஆர்.மயூரன் தலைமையில நடைபெற்ற இப்புதிய கட்டிடத்திறப்பு விழாவில், செலிங்கோ இன்சூரன்ஸ் நிறுவனத்தின் சிரேஷ்ட வியாபார அபிவிருத்தி முகாமையாளர் ரி.விஜயநாத், கிழக்குப் பிராந்திய உதவி வியாபார முகாமையாளர் ம.சுமந்திரன், களுவாஞ்சிகுடி கிராமத் தலைவர் கந்தவேள், களுவாஞ்சிகுடி வர்த்தக சம்மேளனத் தலைவர் திருவிளங்கம்,; விசேட அதிரடிப்படை அதிகாரி கயான் , உட்பட அதிகாரிகள் உத்தியோகஸ்தர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

செலிங்கோ இன்சூரன்ஸ் களுவாஞ்சிகுடி கிளையானது கடந்த 6 வருடகாலத்திற்குள் இப்பிரதேசத்தில் ஒருகோடியே 44 இலட்சம் மரண இழப்புக் காப்பீட்டினையும் 10 இலட்சம் ரூபா வைத்திய இழப்பீட்டினையும்  இப்பகுதி பொதுமக்களுக்கு வழங்கியுள்ளதாக இக்கிளையின் முகாமையார் தெரிவித்தார்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .