
துரிதமாக வளர்ச்சியடைந்து வரும் இன்றைய நுகர்வோர் சந்தையில், வர்த்தகங்கள் சந்தையில் எழும் கேள்விகளுக்கமைய தமது பொருட்களையும் சேவைகளையும் மாற்றியமைக்க வேண்டியது கட்டாயமானதாகும். இந்த நிலையை எய்துவதற்கு, நிறுவனங்கள் தொடர்ச்சியான கற்றல் நடவடிக்கைகளை முன்னெடுத்தல் வேண்டும். இதன் மூலமாக ஊழியர்கள் தமது பொருட்கள் தொடர்பான தொழில்நுட்ப அறிவை விருத்தி செய்து கொள்ள முடியும். அத்துடன், நுகர்வோரின் தேவைகள் குறித்தும் அறிந்து கொள்ள முடியும். தமது தொழில்சார் வல்லுநர்களுக்கு சிறப்பான சேவைகளை ஆற்றுவதற்கு அவசியமான பயிற்சிகளை வழங்க வேண்டியதன் அவசியத்தை நன்கறிந்த நிறுவனம் எனும் வகையில், லீப்செட் அனைத்து பிரிவுகளுக்காகவும் விசேடமாக அமைந்த பயிற்சிகளை வழங்கி வருகிறது. இந்த பயிற்சிகள் கலிபோர்னியாவின் சிலிக்கன் வெலியை தளமாக கொண்டனவாக அமைந்துள்ளன.
லீப்செட் நிறுவனத்தின் பங்காளரான ஷனில் பெர்னான்டோ இந்த பயிற்சி குறித்து கருத்து தெரிவிக்கையில், 'சிலிக்கன் வெலி பகுதியில் இடம்பெறும் நடவடிக்கைகளுக்கும், இலங்கையில் எமது ஊழியர்கள் பின்பற்றும் நடவடிக்கைகளுக்கும் இடையில் பாரிய தொழில்நுட்ப ரீதியான இடைவெளி காணப்படுகிறது. லீப்செட்டில் நாம் மாற்றத்துக்கு வழிகோலும் கண்டுபிடிப்புகளை ஊக்குவிக்கும் வகையில் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறோம். இந்த முறைமை இலங்கையில் நடைமுறையில் இல்லை. எமது நிறுவனத்தின் வெற்றிப்பாதையில் வழிநடத்திச் செல்வதற்கு இந்த மாற்றத்துக்கான கண்டுபிடிப்புகளுக்குரிய பயிற்சி திட்டங்கள் வழிகோலியுள்ளன. எமது ஊழியர்கள் மத்தியிலும் சிறந்த செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கான உதவியுள்ளன. இலங்கையை தளமாக கொண்டு தொழில்புரியும் ஊழியர்களுக்கு சிலிக்கன் வெலி பகுதியில் பணியாற்றும் சூழல் மற்றும் அங்கு செயற்பாடுகள் இடம்பெறும் விதம் குறித்து நேரடியாக அனுபவிக்கக்கூடிய வாய்ப்பு ஏற்படுத்தப்படுகிறது. இது தொழில்நுட்ப ஆளுமைகள் என்பதை மட்டுமே குறிப்பனவாக காணப்படுபவை அல்ல. இவை நுகர்வோரின் மாறுபட்ட தேவைகளை கண்டறிந்து அதற்கேற்ற வகையில் புதிய வர்த்தக கட்டமைப்புகளை கட்டியெழுப்புவது குறித்தனவாக அமைந்துள்ளன. இலங்கையை சேர்ந்த ப்ளு சிப் நிறுவனங்களின் சபைகளை ரெட்வுட் நகரில் நிறுவி, அங்கு பயிற்சிகளையும், மாற்றத்துக்கான கண்டுபிடிப்பு திட்டங்கள் இடம்பெறும் பகுதிகளுக்கான விஜயங்களும் ஒழுங்கு செய்திருந்தோம். எமது ஊழியர்களுக்கு இந்த திட்டம் குறித்து அனுபவிப்பதற்கான சிறந்த வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது' என்றார்.
நிறுவனத்தின் ஊழியர்களுக்கு சிலிக்கன் வெலி பகுதியில் அமைந்துள்ள உயர் நுட்பம் வாய்ந்த நிறுவனங்களுக்கு விஜயம் செய்து ஒரு பல்கலைக்கழகத்தின் மூலம் பெற்றுக் கொள்ளக்கூடிய அனுபவத்தை பெற்றுக் கொள்ளும் சந்தர்ப்பமும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இவ்வாறான பல நேரடித்தொடர்பாடல்கள் செயற்பாடுகளின் மூலம் ஊழியர்களுக்கு நவீன தொழில்நுட்ப அபிவிருத்திகளுடன் ஒன்றிணைந்து கருமமாற்றும் சூழல் ஏற்படுத்தப்படுகிறது.
'மென்பொருள் விநியோகம் மற்றும் இதனுடன் தொடர்புடைய சேவைகளை விநியோகிக்கும் நடவடிக்கைகள் இலங்கையிலிருந்து முன்னெடுக்கப்படுவதால், எமது ஊழியர்களுக்கு அமெரிக்காவை தளமாக கொண்டியங்கும் குழுவினருடன் ஒன்றிணைந்து செயலாற்றுவது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்துள்ளது. இலங்கையில் பணியாற்றும் லீப்செட் நிறுவனத்தின் ஊழியர்கள், சிலிக்கன் வெலி பகுதியைச் சேர்ந்த பொருட்கள் முகாமைத்துவ மற்றும் தொழில்நுட்ப குழுவினருடன் ஒன்றிணைந்து செயலாற்றி வருவதுன் மூலம், நவீன தொழில்நுட்பங்கள் குறித்த அறிவை இலகுவாக பெற்றுக் கொள்ளக்கூடியதாகவுள்ளதுடன், வெளியுலகில் நடைபெறும் அபிவிருத்தி நடவடிக்கைகளின் அனுபவத்தை பெற்றுக் கொள்ளக்கூடிய வாய்ப்பும் கிடைக்கிறது' என லீப்செட் நிறுவனத்தின் பொது முகாமையாளர் ரசிக கருணாதிலக தெரிவித்துள்ளார்.
லீப்செட் நிறுவனத்தின் மற்றுமொரு முன்னணி குழுநிலை அங்கத்தவரான இந்திக தான்திரிகொட, லீப்செட் நிறுவனத்தின் தலைமையகத்தில் இரண்டு மாதங்களை வெற்றிகரமாக பூர்த்தி செய்திருந்தார். இந்த விஜயத்தின் போது, வாடிக்கையாளர் ஒருவர் எவ்வாறு பொருட்களின் மூலம் எவ்வாறு அனுகூலமடைகிறார் என்பது குறித்து நன்கு அறிந்து கொள்ள இந்திகவுக்கு வாய்ப்பு கிடைத்திருந்தது. அத்துடன், ரெட்வுட் நகரிலுள்ள குழுவினருடன் நெருக்கமாக செயலாற்றுவதற்கும் வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டிருந்தது. 'அமெரிக்காவில் கிடைத்த அனுபவம் மிகவும் உன்னதமானது. தொழில்நுட்ப அறிவை விட மேலான விடயங்களை அறிந்து கொள்ள முடிந்துள்ளது. அமெரிக்க குழுவினர் மிகவும் உதவி புரியக்கூடியவர்கள். நான் அங்கு தங்கியிருந்த காலப்பகுதியில் எனக்கு மிகவும் சிறந்த அனுபவத்தை வழங்கியிருந்தனர்' என அவர் தெரிவித்திருந்தார்.
ஊழியர்களை மாற்றி இயங்க வைக்கும் முறை குறித்து ஷனில் பெர்னான்டோ கருத்து தெரிவிக்கையில், 'இந்த ஏற்பாட்டின் மூலம், எமது இலங்கையை சேர்ந்த குழுவினர் மத்தியில் சிறந்த சிந்தனைதிறனை ஊக்குவித்துள்ளதுடன், புதிய பொருட்கள் குறித்த விஸ்தரிப்பு பங்களிப்பு வழிகோலியுள்ளது. எமது குழுவினர் தொடர்ச்சியான மாறுதலுக்குள்ளாகி வரும் தொழில்நுட்பத்துக்கேற்ப தம்மை மாற்றிக் கொள்ள முடிந்துள்ளதுடன், எதிர்பார்ப்புகளை தொடர்ச்சியாக நிவர்த்தி செய்யும் வகையிலும் அமைந்துள்ளன' என்றார்.