2025 செப்டெம்பர் 25, வியாழக்கிழமை

பங்குச்சந்தை மற்றும் தங்கம், வெள்ளி விலை நிலைவரங்கள்

A.P.Mathan   / 2013 ஓகஸ்ட் 11 , மு.ப. 07:15 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ச.சேகர்
 
திங்கட்கிழமை
திங்கட்கிழமை கொடுக்கல் வாங்கல்களின் போது ஆகக்குறைந்தளவு புரள்வு பெறுமதி பதிவாகியிருந்தது. மொத்த புரள்வு பெறுமதியாக 288 மில்லியன் ரூபா பதிவாகியிருந்தது. இதில் அக்சஸ் என்ஜினியரிங் (58 மில்லியன்), செவ்ரோன் லுப்ரிகன்ட்ஸ் (40மில்லியன்), சிலோன் டொபாக்கோ (35மி்ல்லியன்) போன்றன பங்களிப்பை வழங்கியிருந்தன. அதிகளவு வியாபாரமான பங்குகளாக லோஃவ்ஸ் காஸ், சணச டிவலப்மன்ட் பாங்க், நேஷன் லங்கா ஃபினான்ஸ் போன்றன காணப்பட்டன. மொத்த வெளிநாட்டு பங்களிப்பு 45வீதமாக அமைந்திருந்தது. நிகர வெளிநாட்டு விற்பனை பெறுமதி 29மில்லியன் ரூபாவாகும். 
 
செவ்வாய்க்கிழமை 
செவ்வாய்க்கிழமை பங்குப் பெறுமதிகள் உயர்வாக நிறைவடைந்திருந்தன. நெஸ்லே லங்கா, ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் மற்றும் புக்கிட் தாரா போன்ற நிறுவனங்களின் பங்குகள் உயர்வான பெறுமதியை பதிவு செய்திருந்தன. சந்தை புரள்வு பெறுமதி 532 மில்லியன் ரூபாவாக பதிவாகியிருந்தது. இதில் ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ்  164 மில்லியன், செவ்ரோன் லுப்ரிகன்ட்ஸ் 63 மில்லியன் மற்றும் நெஸ்லே 63 மில்லியன் ரூபா பங்களிப்பை வழங்கியிருந்தன. இதேவேளை டெக்ஸ்சர்ட் ஜேர்சி, சென்ரல் இன்வெஸ்ட்மன்ட் அன்ட் ஃபினான்ஸ் மற்றும் நேஷன் லங்கா ஃபினான்ஸ் போன்றன அதிகளவு விற்பனையாகிய பங்குகளாக பதிவாகியிருந்தன. வெளிநாட்டு முதலீட்டாளர்களின் பங்களிப்பு 54 வீதமாக சந்தையில் பதிவாகியிருந்தது. 
 
புதன்கிழமை
புதன்கிழமை கொடுக்கல் வாங்கல்கள் நேர் பெறுமதியை பதிவு செய்து நிறைவடைந்திருந்தன. இதில் நெஸ்லே லங்கா, ஸ்ரீலங்கா ரெலிகொம் மற்றும் டிஸ்ரிலரீஸ் போன்றன பதிவாகியிருந்தன. சந்தை புரள்வு பெறுமதியாக 725 மில்லியன் ரூபா பதிவாகியிருந்தது. இதில் செவ்ரோன் லுப்ரிகன்ட்ஸ் 181 மில்லியன், டிஸ்ரிலரீஸ் 89 மில்லியன் மற்றும் லங்கா ஐஓசி 80 மில்லியன் ஆகிய பெறுமதிகளை பதிவு செய்திருந்தன. சணச டிவலப்மன்ட் பாங்க், அக்சஸ் என்ஜினியரிங், டெக்ஸ்ச்சர்ட் ஜேர்சி மற்றும் நெஸ்லே லங்கா போன்ற நிறுவனங்கள் அதிகளவு விற்பனையாகிய பங்குகளாக பதிவாகியிருந்தன. வெளிநாட்டு முதலீட்டாளர்களின் பங்களிப்பு 40 வீதமாக பதிவாகியிருந்தது. 
 
வியாழக்கிழமை
வியாழக்கிழமை கொடுக்கல் வாங்கல்களின் போது சந்தை கலப்பு வெளிப்பாடுகளை பதிவு செய்திருந்தது. மொத்த சந்தை புரள்வு பெறுமதி 285 மில்லியன் ரூபாவாக பதிவாகியிருந்தது. இதில் டிஸ்ரிலரீஸ் 42 மில்லியன் ரூபாவையும், லங்கா செரமிக் 36 மில்லியன் ரூபாவையும், டெக்ஸ்சர்ட் ஜேர்சி 22 மில்லியன் ரூபாவையும் பதிவு செய்திருந்தன. குறிப்பிடத்தக்க பங்கு கை மாற்றமாக டிஸ்ரிலரீஸ் நிறுவனத்தின் 0.2 மில்லியன் பங்குகள் கைமாறியிருந்தன. 
 
கடந்தவார இறுதிப்பகுதியில் உள்நாட்டு சிறு முதலீட்டாளர்களின் அதிகளவு சந்தை ஈடுபாட்டின் காரணமாக பங்குச்சந்தையின் பிரதான சுட்டிகள் உயர்வடைந்த நிலையில் பதிவாகியிருந்தன. ஆனாலும் கடந்த வெள்ளிக்கிழமை, வியாழக்கிழமையுடன் ஒப்பிடுகையில் பிரதான சுட்டெண் 0.78 புள்ளிகள் சரிவடைந்து எதிர்பெறுமதியில் நிறைவடைந்திருந்ததுடன், S&P ஸ்ரீலங்கா 20 சுட்டி 13 புள்ளிகள் அதிகரித்து நிறைவடைந்திருந்தது. வெளிநாட்டு முதலீட்டாளர்கள் அதிகளவு பங்கு விற்பனையில் கடந்த வாரம் ஆர்வம் செலுத்தியதை அவதானிக்க முடிந்ததுடன், சிலோன் டுபாக்கோ, ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ், வட்டவளை பிளான்டேஷன், கொமர்ஷன் வங்கி, சம்பத் வங்கி, சன்சைன் ஹோல்டிங்ஸ், எயிட்கன் ஸ்பென்ஸ் போன்ற நிறுவனங்களின் பங்குகளின் கடந்தவாரம் பெருமளவு ஆதிக்கம் செலுத்தியிருந்தன. 
 
கடந்த வியாழக்கிழமை பங்குச் சந்தை நடவடிக்கைகள் நிறைவடையும் பொழுது, அனைத்து பங்கு விலைச் சுட்டெண் 6,151.92 ஆகவும், S&P ஸ்ரீலங்கா 20 சுட்டி 3470.16 ஆகவும் அமைந்திருந்தன. 
 
ஓகஸ்ட் 05ஆம் திகதியுடன் ஆரம்பமான கடந்த வாரத்தின் இறுதியில் மொத்த பங்கு புரள்வு பெறுமதியாக ரூ. 1,830,598,700 அமைந்திருந்தது. கடந்த வாரம் மொத்தமாக 16,182 பங்கு கொடுக்கல் வாங்கல்கள் இடம்பெற்றன. இதில் உள்நாட்டு கொடுக்கல் வாங்கல்கள் 15,309 ஆகவும் வெளிநாட்டு கொடுக்கல் வாங்கல்கள் 873 ஆகவும் பதிவாகியிருந்தன.
 
கடந்த வார கொடுக்கல் வாங்கல் நடவடிக்கைகளில் மொரிசன்ஸ், நெஸ்லே, லேக் ஹவுஸ் பிரின்., ஹூனாஸ் ஃபோல்ஸ் மற்றும் ஏசிஎல் பிளாஸ்ரிக்ஸ் போன்றன முதல் ஐந்து சிறந்த இலாபமீட்டிய பட்டியலிடப்பட்ட கம்பனிகளாக பதிவாகியிருந்தன. 
 
என்வி றிசோர்சஸ் (உரிமை) (0.70), பிசி பார்மா, சென்ரல் இன்டஸ்., என்வி றிசோர்சஸ்(உரிமை) (1.60) மற்றும் பிசிஎச் ஹோல்டிங்ஸ் போன்ற நிறுவனங்களின் பங்குகள் அதிகளவு நஷ்டமீட்டியதாக பதிவாகியிருந்தன.

தங்கம் மற்றும் வெள்ளி விலை 
கடந்த வாரம் 24 கெரட் தங்கத்தின் சராசரி விலை 45,000 ரூபாவாகவும், 22 கெரட் தங்கத்தின் விலை 41,200 ரூபாவாகவும் அமைந்திருந்ததாக தங்க நகை வியாபார வட்டாரங்களிலிருந்து அறிந்து கொள்ள முடிந்தது. 
 
நாணய மாற்று விகிதம்
கடந்த வாரம் டொலருக்கு நிகரான ரூபாவின் சராசரி விற்பனை பெறுமதி 133.19 ஆக பதிவாகியிருந்தது. ஐக்கிய இராச்சிய பவுணுக்கு நிகரான சராசரி விற்பனை பெறுமதி 206.71 ஆக காணப்பட்டிருந்தது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .