
ஹேமாஸ் மனுபக்டரிங் நிறுவனத்தின் முன்னணி சலவைத்தூளான தீவா மூலம் முன்னெடுக்கப்பட்ட 'தீவா புதையலுடன் காணி' மாபெரும் வாடிக்கையாளர் ஊக்குவிப்பு திட்டத்தின் 2013ஆம் ஆண்டின் அதிர்ஷ்டசாலிகளாக தெரிவு செய்யப்பட்ட நான்கு வெற்றியாளர்களுக்கு காணி உறுதிப்பத்திரம் வழங்கும் வைபவம் அண்மையில் கொழும்பில் வெகுவிமர்சையாக இடம்பெற்றது. இந் நிகழ்வில் தீவா முகாமைத்துவ பணிப்பாளர் ரோய் ஜோசப், சந்தைப்படுத்தல் பணிப்பாளர் ராகேஷ் கோஸ்லா, மனிதவள முகாமைத்துவ பிரிவின் பொது முகாமையாளர் நிரஞ்சன் பெரேரா, விற்பனை பிரிவின் பொது முகாமையாளர் டெரன்ஸ் ஏப்ரகாம், சந்தைப்படுத்தல் முகாமையாளர் ஃபியோனா முனசிங்க, வர்த்தகநாம முகாமையாளர் ஷானக பெர்னாண்டோ ஆகியோர் விருந்தினர்களாக கலந்து கொண்டிருந்தனர். மேலும் இந் நிகழ்வில் 90 நாட்கள் இடம்பெற்ற ஊக்குவிப்பு திட்டத்தில் நாளாந்த வெற்றியாளர்களாக தேர்ந்தெடுக்கப்பட்ட 90 வாடிக்கையாளர்கள் மற்றும் வியாபாரிகளுக்கு வெகுமதிகள் வழங்கப்பட்டன.
'தீவா புதையலுடன் காணி திட்டமானது கடந்த 3 ஆண்டுகளாக தீவா நாட்காட்டியின்; மிக முக்கிய நுகர்வோர் மையப்படுத்திய செயற்திட்டமாக அமைந்திருந்தது. இந்த ஆண்டில்; கிராமங்கள் மற்றும் நகர்ப்புறப் பகுதிகளிலிருந்து 100,000 இற்கும் அதிகமான விண்ணப்பங்கள் குவிந்திருந்தன. இந்த ஊக்குவிப்பு திட்டத்தின் மூலம் நான்கு அதிர்ஷ்டசாலிகளுக்கு கொழும்புக்கு அருகாமையில் ஒவ்வொன்றும் 1 மில்லியன் ரூபா பெறுமதியான காணியை வெல்லும் வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டிருந்தது. வாடிக்கையாளர் விண்ணப்பங்களிலிருந்து மூன்று வெற்றியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டதுடன், ஃபுட் சிட்டி வலையமைப்பின் தீவா வாடிக்கையாளர்களுக்கான மாத்திரம் இடம்பெற்ற போட்டியிலிருந்து 4ஆவது வெற்றியாளர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இத் திட்டத்தின் முதல் வெற்றியாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட பாலர் பாடசாலை ஆசிரியையும், ஒரு குழந்தைக்கு தாயுமான பிலியன்தலை பி.டி.நதீஷா பிரியங்கி கருத்து தெரிவிக்கையில், 'நான் நீண்டகாலமாக தீவாவை பயன்படுத்தி வருவதுடன், இத் தயாரிப்பின் தொடர்ச்சியான பல முன்னேற்றங்களை கண்டுள்ளேன்;. என்னைப் போன்று பரபரப்பான வாழ்க்கையை கொண்டிருக்கும் இல்லத்தரசிகளுக்கு தீவா சிறப்பான மதிப்பை சேர்ப்பதுடன், நமது பணத்தையும், நேரத்தையும் சேமிக்கிறது. இவ் வர்த்தகநாமம் மேலும் வளர்ச்சியடைந்து, அதன் வாடிக்கையாளர்களுக்கு பலவித அனுகூலங்களையும், வெகுமதிகளையும் வழங்கும் என எதிர்பார்க்கின்றேன்' என்றார்.
தீவா, உள்நாட்டு சந்தையின் அறிமுகம் செய்யப்பட்ட முதலாவது சலவைத்தூள் வர்த்தகநாமமாகும். சலவைத்தூளாக அறிமுகம் செய்யப்பட்ட தீவா, தற்போது தனது உற்பத்தி வரிசையில் தீவா டிடர்ஜன் சவர்க்காரம் மற்றும் சலவை இயந்திரங்களுக்கான தீவா வைட் டிடர்ஜன் பவுடர் போன்றவற்றை கொண்டுள்ளது. இவ் வர்த்தகநாமமானது இல்லத்தரசிகளுக்கு தங்களது குடும்பத்தினரின் நன்மைக்கான ஆற்றல் மற்றும் நேரத்தை அணிதிரட்டிக் கொள்ள வழிவகுத்துள்ளது.
இந் நிகழ்வில் தீவா வர்த்தகநாம முகாமையாளர் ஷானக பெர்னாண்டோ கருத்து தெரிவிக்கையில், 'ஹேமாஸ் மனுபக்டரிங் நிறுவனத்தின் கடந்த 2003 ஆம் ஆண்டு இலங்கையில் அறிமுகம் செய்யப்பட்ட தீவா வர்த்தகநாமமானது, எமது வாடிக்கையாளர்கள் செலுத்தும் பணத்திற்கு பெறுமதி சேர்க்கும் நோக்கில்; பலவித ஃபோர்மியுலாக்கள் மற்றும் மாற்றங்களுக்கு உட்படுத்தி விசேடமாக தயாரிக்கப்பட்டுள்ளன' என்றார். தமது விசுவாசமிக்க வாடிக்கையாளர்களை கௌரவிக்கும் வழிகளில் இத் திட்டமும் ஒன்றாகும் என பெர்னாண்டோ தெரிவித்தார்.
நதிஷா பிரியங்கிக்கு மேலதிகமாக, 2013 'தீவா புதையலுடன் காணி' திட்டத்தின் மூலம் அம்பேபுஸ்ஸவைச் சேர்ந்த கே.ஆர்.டி.கசுன் தங்கல்ல மற்றும் ஹட்டனைச் சேர்ந்த பி.பி.தேவிகா ஆகியோர் வெற்றியாளர்களாக தெரிவு செய்யப்பட்டனர். 18 வயது பாடசாலை மாணவர் கசுன் மற்றும் மூன்று குழந்தைகளின் தாயான தேவிகா ஆகியோர் காணியை சொந்தமாக்கிக் கொள்ளும் தமது கனவை நனவாக்கிக் கொண்டுள்ளனர். இம் மூன்று வெற்றியாளர்களுக்கு மேலதிகமாக, ஃபுட் சிட்டி சுப்பர் மார்கெட்டுகளில் முன்னெடுக்கப்பட்ட குலுக்கல் முறை தெரிவில் ஹோமாகம பிரதேசத்தைச் சேர்ந்த நிதி முகாமையாளர் ஐ.டீ.மனதுங்க வெற்றியாளராக தெரிவு செய்யப்பட்டார்.
வர்த்தகநாமம் மீதான வாடிக்கையாளர்களின் விசுவாசம் மற்றும் போட்டி மீது காட்டிய பங்களிப்பினை பாராட்டிய ஹேமாஸ் நிறுவனத்தின் சந்தைப்படுத்தல் முகாமையாளர் ஃபியோனா முனசிங்க கருத்து தெரிவிக்கையில், 'எமது வாடிக்கையாளர்களின் வாழ்க்கையில் உண்மையான மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய வெகுமதிகள் வழங்குவதே தீவாவின் குறிக்கோளாகும்' என்றார். வாடிக்கையாளர்களிடமிருந்து கிடைக்கப்பெற்ற அமோக வரவேற்பு, உள்நாட்டு அலுவல்கள் அமைச்சு, ஊடகங்கள் மற்றும் ஹேமாஸ் வலையமைப்பு பங்காளர்கள் ஆகியோரிடமிருந்து கிடைத்த ஆதரவின் மூலம் இத்திட்டம் மாபெரும் வெற்றியடைந்துள்ளது என மேலும் அவர் தெரிவித்தார்.