2026 ஏப்ரல் 29, புதன்கிழமை

மத்திய முகாமில் இலங்கை வங்கியின் கிளை திறப்பு

Super User   / 2013 ஒக்டோபர் 11 , மு.ப. 10:50 - 0     - {{hitsCtrl.values.hits}}



-ஏ.எஸ்.எம்.முஜாஹித்


இலங்கை வங்கியின் 616ஆவது கிளை நாவிதன்வெளி, மத்திய முகாம் பிரதேசத்தில் இன்று வெள்ளிக்கிழமை திறந்துவைக்கப்பட்டது. இந்த கிளையானது கிழக்கு மாகாணத்தில் 55ஆவது கிளை என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

மத்தியமுகாம் வங்கி கிளை முகாமையாளர் எம்.ஐ.எம்.ஏ.நஸீர் தலைமையில் நடைபெற்ற திறப்பு விழா நிகழ்வில் சிரேஷ்ட அமைச்சர் பி.தயாரத்ன, நாவிதன்வெளி பிரதேச சபை தவிசாளர் என்.குணரெட்ணம் மற்றும் இலங்கை வங்கியின் கிழக்கு மாகாண உதவி பொது முகாமையாளர் கே.பி.ஆனந்த நடராஜா உட்பட பலர் கலந்துகொண்டனர்.

கடந்தகால யுத்தத்தின் காரணமாக வங்கிகளின் செயற்பாடு இல்லாதிருந்த இப்பிரதேசத்தில், தற்போது இலங்கை வங்கி திறக்கப்பட்டமை பிரதேச மக்களுக்கு பெரும் வரப்பிரசாதமாகும்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .