2025 செப்டெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

மத்தல விமான நிலையத்தின் விரைவில் ‘டியுட்டி ஃபிரீ’

Menaka Mookandi   / 2013 ஒக்டோபர் 17 , மு.ப. 09:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

மத்தல விமான நிலையத்தில் டியுட்டி ஃபிரீ சொப்பிங் வசதிகள் இரண்டு மாத காலப்பகுதியினுள் ஆரம்பிக்கப்படவுள்ளன.

இந்த டியுட்டி ஃபிரீ சலுகைகள் சுவிஸ் நாட்டைச் சேர்ந்த டுஃவ்ரி எனும் நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுள்ளது. இலங்கையின் பேர்பெட்டு ஹோல்டிங்ஸ் நிறுவனத்தின் அங்கத்துவ நிறுவனமாக இது இயங்கி வருகிறது.

நிறுவனம் பொருத்தமான கடைத்தொகுதிகளை நிர்மாணித்து வருகிறது. இன்னும் இரண்டு வார காலப்பகுதியினுள் இந்த கடைத்தொகுதிகள் ஆரம்பிக்கப்படலாம் என இலங்கை விமான போக்குவரத்து மற்றும் விமான நிலைய சேவைகளுக்கான தலைமை அதிகாரி பிரசன்ன விக்ரமசூரிய கருத்து தெரிவித்தார்.

புதிதாக ஆரம்பிக்கப்படவுள்ள டியுட்டி ஃபிரீ தொகுதியில் மதுபானங்கள், புகையிலை தயாரிப்புகள், வாசனை திரவியங்கள், இனிப்பு பண்டங்கள் போன்றன விற்பனை செய்யப்படவுள்ளதுடன், இலத்திரனியல் மற்றும் நினைவுச்சின்ன பொருட்களை விற்பனை செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .