2025 செப்டெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

செலான் வங்கி கிளையினால் மாணவர்களுக்கான சேமிப்பு பிரிவு ஆரம்பிப்பு

Kogilavani   / 2013 ஒக்டோபர் 23 , மு.ப. 03:56 - 0     - {{hitsCtrl.values.hits}}


எஸ்.சசிக்குமார்


செலான் வங்கியின் திருகோணமலை கிளையினால்  பாடசாலைகளில் சேமிப்பு பிரிவுகள் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளன.
இதன் அங்குராரப்பண வைபவம் ஸ்ரீ சண்முகா இந்துமகளீர் கல்லூரியில் நேற்று காலை நடைபெற்றது.

இந்நிகழ்வில், வங்கியின் பிரதி பொது முகாமையாளர் கலாநிதி பி.நிரஞ்சன்,  பிராந்திய முகாமையாளர் முத்திசா முரளி,  திருகோணமலை கிளை முகாமையாளர் எரிக் கிருபைராஜா ஆகியோர் கணக்குகளை ஆரம்பித்து வைத்தனர்.

இதனைத் தொடர்ந்து சிங்கள மத்திய மகா வித்தியாலயம், புனித மரியாள் கல்லூரி என்பனவற்றிலும் வங்கி கணக்குகள் ஆரம்பித்து வைக்கப்பட்டன.

148 சேமிப்பு கண்க்குகள் இப்பிரிவுகளில் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளன.  ஸ்ரீ சண்முகா இந்து மகளீர் கல்லூரியில் 64, சிங்கள மத்திய மகா வித்தியாலயம் 18. புனித மரியாள் கல்லூரி 66 கண்ககுள் மூலம் பத்து இலட்சத்து இருபத்து ஐந்தாயிரம் ரூபாய் சேமிப்பில் இடப்பட்டுள்ளது.  

கணக்கு ஆரம்பித்தவர்களின் வைப்புத் தொகைக்கேற்ப பரிசுகளும் வழங்கி வைக்கப்பட்டன.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .