2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

செலான் வங்கியின் நிறைவேற்றுத் தரமற்ற புதிய பணிப்பாளராக டபள்யூ.டி.கே.ஜயவர்தன

A.P.Mathan   / 2013 ஒக்டோபர் 29 , பி.ப. 03:52 - 0     - {{hitsCtrl.values.hits}}


2013 ஓகஸ்ட் 01ஆம் திகதியில் இருந்து நடைமுறைக்கு வரும் வகையில், செலான் வங்கியின் நிறைவேற்றுத் தரமற்ற பணிப்பாளராக டபள்யூ.டி.கே. ஜயவர்தனவை நியமனம் செய்வது தொடர்பில் செலான் வங்கி பி.எல்.சி. அறிவித்துள்ளது. வங்கியின் பணிப்பாளர் சபையில் ஏற்கனவே அங்கம் வகித்த திரு. அஜித் எல். தேவசுரேந்தர அப்பதவியில் இருந்து இராஜினாமா செய்தமையால் பதவி வெற்றிடம் ஏற்பட்டதையடுத்தே இந்நியமனம் வழங்கப்பட்டுள்ளது. 
 
நிதியியல் முகாமைத்துவத்தில் முதுமாணி (MBA) பட்டத்தைப் பெற்றவரான ஜயவர்தன, வங்கியியலாளர் நிறுவகத்தின் சக உறுப்பினராக திகழ்கின்ற அதேநேரம், லண்டனை தளமாகக் கொண்டியங்கும் செலவு மற்றும் நிறைவேற்று கணக்காளர்கள் நிறுவகத்தின் ஒரு இணை உறுப்பினராகவும் செயற்பட்டு வருகின்றார். 
 
LOLC நிறுவனத்தில் இணைந்து கொள்வதற்கு முன்னதாக இவர், 1998 தொடக்கம் 2007ஆம் ஆண்டு வரை Citibank NA வங்கியில் இலங்கை மற்றும் மாலைதீவுகள் ஆகிய நாடுகளிற்கான தலைமை அதிகாரியாகவும் பிரதம நிறைவேற்று அதிகாரியாகவும் பணியாற்றினார். முதலீட்டு வங்கியியல், கணக்காய்வு, உறவுமுறை முகாமைத்துவம், கூட்டாண்மை நிதி மற்றும் திறைசேரி முகாமைத்துவம் போன்ற விடயங்களில் இவர் பல்வகைப்பட்ட அனுபவத்தை கொண்டிருக்கின்றார். 
 
ஜயவர்தன, 2003/04 ஆண்டில் இலங்கை வங்கிகள் ஒன்றியத்தின் (SLBA) தலைவராக நியமிக்கப்பட்டார். இவர் இலங்கையிலுள்ள அமெரிக்க வர்த்தக சம்மேளனத்தின் தலைவராக (2006/07 ஆண்டில்) சேவையாற்றியதுடன், நிதித் துறை மறுசீரமைப்பு குழுவிலும் (FSRC) நியமனம் பெற்றிருந்தார்.  
 
பொருளாதார அபிவிருத்திக்கான தேசிய மன்றத்தின் (NCED) ஒரு அங்கத்தவராக கடமையாற்றிய இவர், ஐக்கிய அமெரிக்கா - இலங்கை புல்பிரைட் ஆணைக்குழுவின் பணிப்பாளர் சபை உறுப்பினராகவும் சேவையாற்றியுள்ளார். 
 
ஜயவர்தன, LOLC குழும முகாமைத்துவப் பணிப்பாளராகவும் பிரதம நிறைவேற்று அதிகாரியாகவும் 2007 இல் இணைந்து கொண்டதுடன், LOLC குழுமத்தின் பிரதான பணிப்பாளர் சபையின் ஒரு உறுப்பினர் என்ற வகையில் LOLC குழுமத்தின் அனைத்து விதமான வணிக மற்றும் தொழிற்பாட்டு நடவடிக்கைகளுக்கும்; தலைமை வகித்துச் செயற்பட்டார். 
 
பின்வருகின்ற கம்பனிகளில் இவர் தற்போது தலைவராகவும், பணிப்பாளராகவும் பதவி வகிக்கின்றார் - லங்கா ஒரிக்ஸ் லீசிங் கம்பனி பி.எல்.சி. குழும முகாமைத்துவ பணிப்பாளர் / பிரதம நிறைவேற்று அதிகாரி, லங்கா ஒரிக்ஸ் பினான்ஸ் கம்பனி பி.எல்.சி. நிறுவனத்தின் தலைவர், லங்கா ஒரிக்ஸ் இன்சூரன்;ஸ் கம்பனி லிமிட்டெட் தலைவர், லங்கா ஒரிக்ஸ் செக்கியுரிட்டீஸ் லிமிட்டெட் நிறுவன தலைவர், ஏடென் ஹோட்டல் பி.எல்.சி. நிறுவனத்தின் தலைவர், ஸ்பீட் இற்றாலியா பிரைவேட் லிமிட்டெட் தலைவர், யுனைட்டட் டென்ட்ரோ எனேர்ஜி சொலியுசன் பிரைவேட் லிமிட்டெட் நிறுவன தலைவர், பாம் கார்டன்ஸ் ஹோட்டல் பி.எல்.சி. நிறுவனத்தின் தலைவர், லங்கா ஒரிக்ஸ் மைக்ரோ கிரெடிட் லிமிட்டெட் நிறுவனத்தின் பணிப்பாளர், கொமர்ஷல் லீசிங் அன்ட் ஃபினான்ஸ் பி.எல்.சி. நிறுவன பணிப்பாளர், பிரவுண் அன்ட் கம்பனி பி.எல்.சி. பணிப்பாளர் மற்றும் பிரவுண்ஸ் இன்வெஸ்ட்மென்ற்ஸ் பி.எல்.சி. நிறுவனத்தின் பணிப்பாளர் போன்ற பதவிகளாகும். 
 
செலான் வங்கியானது தனது வெளிப்புற அடைவு மட்டத்தையும் சந்தைப் பங்கினையும் விஸ்தரித்து வருகின்ற அதேநேரம் தன்னுடைய உறுதிமிக்க மூலதன தளத்தை அடிப்படையாகக் கொண்டு முன்னேற்றமடைந்து வரும் ஒரு முக்கியத்துவமிக்க காலப்பகுதியில் - நிதியியல் துறையில் பரந்துபட்ட அளவிலான அனுபவத்தை தன்னகத்தே கொண்டவரான திரு. ஜயவர்தன, செலான் வங்கியின் பணிப்பாளர் சபையை மேலும் பலப்படுத்துபவராக இருப்பார். 

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .