2025 செப்டெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

திங்க் கிரீன் நிறுவனத்துடன் கைகோர்க்கும் ஜனசக்தி

A.P.Mathan   / 2013 ஒக்டோபர் 31 , மு.ப. 11:01 - 0     - {{hitsCtrl.values.hits}}


ஜனசக்தி நிறுவனமானது தாம் முன்னெடுத்து வரும் பசுமை வியாபார நடைமுறைகளுக்கான அர்ப்பணிப்பை வெளிப்படுத்தும் வகையில், நாடுபூராகவும் பாதுகாப்பான மற்றும் நம்பகத்தன்மை கொண்ட நிலையாண்மை மற்றும் மின்னணு கழிவு முகாமைத்துவம் ஊடாக பசுமை வியாபார நடைமுறைகளை முன்னெடுத்து வரும் திங்க் கிரீன் நிறுவனத்துடன் கைகோர்த்துள்ளது. இதன் மூலம் திங்க் கிரீன் நிறுவனமானது ஜனசக்தி நிறுவனத்தின் இலத்திரனியல் கழிவுகளை முகாமைத்துவம் செய்யவுள்ளதுடன், சுற்றுச்சூழல் சம்பந்தப்பட்ட வியாபார நடைமுறைகளை  பின்பற்றுவதற்கான வழிகாட்டல்களையும் வழங்கவுள்ளது. 
 
'இந்த இணைவானது எமது நிலையாண்மையை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்வதற்கான ஒரு படியாகும். பொறுப்பு வாய்ந்த காப்புறுதி வழங்குநர் எனும் ரீதியில், சுற்றுச்சூழல் மற்றும் சமூகத்தின் மீது சாதகமான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய கோட்பாடுகள், கொள்கைகள் மற்றும் நடைமுறைகளை நாம் செயற்படுத்தி வருகிறோம். திங்க் கிரீன் நிறுவனமானது எமது நிறுவனத்தின் மின்னணு கழிவுகளை மீள்சுழற்சி செய்யவும், கார்பன் தடத்தை குறைப்பதற்கான வாய்ப்பினையும் வழங்குகிறது. 'இந் நிறுவனத்தின் பசுமை வியாபார நடைமுறைகள் தொடர்பான அனுபவத்தின் மூலம் எமது நிலையாண்மை மற்றும் சுற்றுச்சூழல் மீதான எமது சாதகமான வணிக அடையாளத்தை மேம்படுத்தி இலக்கினை வெற்றி கொள்வதற்கு வழிவகுத்துள்ளது' என ஜனசக்தி நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் பிரகாஷ் ஷாஃப்ட்டர் தெரிவித்தார்.
 
திங்க் கிரீன் நிறுவனத்தின் மூலம் நாடுமுழுவதும் உள்ள பெருநிறுவனங்களுக்கு மின்னணு மீள்சுழற்சி, கார்பன் முகாமைத்துவம் மற்றும் மீள்சுழற்சி தீர்வுகள் வழங்கப்படுகிறது. திங்க் கிரீன் நிறுவனமானது இலங்கை மத்திய சுற்றாடல் அதிகார சபையின் அங்கீகாரத்தை பெற்றுள்ளது. 
 
ஜனசக்தி நிறுவனமானது காலநிலை மாற்றம் குறித்த செயல்பாடுகளின் தாக்கத்தை குறைத்தல் மற்றும் அதன் செயற்பாடுகள் மற்றும் சேவைகள் குறித்த சூழலியல் தாக்கத்தை கண்காணித்து அறிக்கையிட்டு சுற்றுச்சூழல் மீதான தாக்கத்தை குறைப்பது தொடர்பில் முன்னுரிமை வழங்குவதுடன், வாடிக்கையாளர்கள் மற்றும் வணிக பங்காளர்களுக்கு சாதகமான நிலைமையை ஏற்படுத்தவுள்ளது.  
'நிலையான தலைமைத்துவத்தின் மூலம் வணிகத்தின் இலக்குகளை சரிவர அடையாளம் கண்டுகொள்ளவும், வாடிக்கையாளர்களுக்கு சிறந்த சேவையையும் வழங்க முடியும். இத் தேவையை பல வணிகங்கள் உணர்ந்துள்ளதுடன், 'திங்க் கிரீன்' நிறுவனத்தை சேர்ந்த நாம், நிலையான வியாபார நடைமுறைகளை செயற்படுத்துவதற்கான வழிகாட்டல்களை வழங்கி வருகிறோம்' என திங்க் கிரீன் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி சிவஹர் முத்துராமலிங்கம் தெரிவித்தார்.
 
ஜனசக்தியானது அதன் சமூக பொறுப்புணர்வு திட்டத்தின் கீழ் புதுமையான பசுமை நடைமுறைகள் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு திட்டங்களிற்கு ஆதரவளித்து வருகிறது. இதன் ஓர் அங்கமாக, அண்மையில் லங்கா ஜலனி அமைப்பின் மூலம் முன்னெடுக்கப்பட்ட மா ஓய ஆற்றுநீர் வடிகால் அமைப்பு திட்டத்திற்கு நிதியுதவிகளை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .