2025 செப்டெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

தேசிய விவசாயம்சார் வர்த்தக விருதுகளுக்கு அமானா வங்கி அனுசரணை

A.P.Mathan   / 2013 நவம்பர் 03 , மு.ப. 04:57 - 0     - {{hitsCtrl.values.hits}}


இலங்கையில் விவசாயம்சார் வர்த்தகத்தின் அபிவிருத்திக்காக வர்த்தகத் துறையினரால் வழங்கப்பட்டு வரும் பங்களிப்பையும், செயலாற்றுகையையும் கருத்திற் கொண்டு தேசிய விவசாயம்சார் வர்த்தக மன்றத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட தேசிய விவசாயம்சார் வர்த்தக மற்றும் விவசாயிகளுக்கான விருது விழாவுக்கு அமானா வங்கி அண்மையில் அனுசரணை வழங்கியது. விவசாயம்சார் வர்த்தகத் துறையில் சம்பந்தப்பட்டுள்ள தனிநபர்கள் மற்றும் நிறுவனத்துக்குரிய விசேட தேவைப்பாடுகளை நிறைவேற்றிக் கொள்வதற்காக விரிவான நிதித் தீர்வுகளை வழங்கி ஆதரவளிக்கும் ஒரு பலமான ஆதரவாளராக அமானா வங்கி விளங்குகின்றது. இந்தத் துறைக்கு ஆதரவளிக்கும் வகையில் இந்த வங்கி சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சிக்கான வங்கிச் சேவைப் பிரிவினை கொண்டுள்ளது.  
 
கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகர்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற தேசிய விவசாயம்சார் வர்த்தகத் துறைக்கான விருது வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய வங்கியின் முகாமைப் பணிப்பாளர்/பிரதம நிறைவேற்று அதிகாரி பைசல் சாலி அவர்கள் ' பொதுவாக வங்கிகள் விவசாயிகளுக்கு நிதியுதவி அளிப்பதிலிருந்து விலகியிருந்தன. பல்வேறு காலநிலைத் தாக்கங்களால் அறுவடை பாதிக்கப்படுவதால் ஏற்படும் வியாபாரத் தளம்பல் நிலையே இதற்கான காரணமாகும். இவ்வாறான ஆபத்துக்களில் இருந்து தம்மைப் பாதுகாத்துக் கொள்வதற்காக வங்கிகள் விவசாயிகளுக்கு சொந்தமான தங்கங்கள் மற்றும் ஆபரணங்களையே பாரம்பரியமாக நம்பி வந்துள்ளன. நிதி திரட்டுவதற்கான ஒரு வழிமுறையாக விவசாயிகளுக்கு இந்த நகை அடகு முறைதான் காணப்பட்டது. ஆனால், அண்மைக் காலமாக தங்கத்தின் விலை பாரியளவில் வீழ்ச்சி கண்டிருப்பதால், இவ்வாறு நிதி திரட்டும் வழிமுறையும் குறைந்துள்ளது' என்றார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட பைசல் சாலி அவர்கள் ' விவசாயத் துறை என்பது பொருளாதாரத்தின் ஒரு முக்கியமான துறையாகும். அதனால், வங்கிகள் தற்போது பாரம்பரிய நிதி வழங்கும் முறைகள் குறித்து மீளாய்வு செய்து எமது பயிர் நிலங்களை வளப்படுத்தும் மக்களின் தேவைகளுக்கு ஆதரவளிக்கக் கூடிய தகுந்த முறைகளை இனங்காண வேண்டியிருப்பதாக குறிப்பிட்டார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .