2025 செப்டெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

அமில் இன்டஸ்ரிஸின் சுழலும் படலை கதவுகள்

A.P.Mathan   / 2013 நவம்பர் 05 , பி.ப. 02:52 - 0     - {{hitsCtrl.values.hits}}


இலங்கையில் ரோலர் கதவுகளை தயாரிப்பதில் முன்னோடிகளாக திகழும் அமில் இன்டஸ்ரிஸ் நிறுவனத்தின் மூலமாக இலங்கை சந்தையில் மற்றுமொரு புதிய சுழலும் படலை கதவுகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. தன்னியக்க கட்டுப்பாட்டின் மூலம் இயங்கக்கூடிய இந்த படலைக்கதவுகள் வீட்டின் எந்தப்பகுதியில் இருந்தவாறும் ஒரு பொத்தானை அழுத்தி இயக்க முடியும்.
 
இல்லத்தரசிகளின் நலன் கருதி இந்த புதிய வசதி இந்த சுழலும் படலைக் கதவுகளில் உள்ளடக்கப்பட்டுள்ளது. வீட்டின் உள்ளே பொருத்தப்பட்டுள்ள சிறிய சாதனம் ஒன்றின் மூலமாக இந்த செயற்பாடு மேலும் இலகுபடுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் வீட்டிலிருக்கும் இல்லத்தரசிகள், இந்த சுழலும் படலைக்கதவுகளை தமது வீட்டில் இருந்தவாறே, இரவு வேளையிலும் கூட எவ்வித இடர்களும் இல்லாமல் திறந்து கொள்ள முடியும்.
 
உலகத்தரம் வாய்ந்த தொழில்நுட்பத்திறன்களுக்கு அமைவாக இந்த படலைக்கதவுகள் தயாரிக்கப்பட்டுள்ளன. கம்பனியின் மூலம் உற்பத்தி செய்யப்படும் இந்த ரக படலைக்கதவுகள், வாடிக்கையாளர்களின் தேவைகளை கருத்தில் கொண்டு தயாரிக்கப்படுகின்றன. இந்த கதவுகளை தன்னியக்கமாக இயங்கச் செய்யும் வகையில் அமில் இன்டஸ்ரிஸ் இத்தாலியின் GR (ஜீஆர்) கம்பனியிலிருந்து மோட்டார்களை இறக்குமதி செய்துள்ளது. இந்த மோட்டார்கள் வாடிக்கையாளர்களுக்கு பாதுகாப்பை வழங்கும் வகையில் கடவுச்சொல்லை கொண்டு அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. அத்துடன், தன்னியக்க வசதிகளையும் கொண்டுள்ளது.
 
இந்த ரக கதவுகளை உற்பத்தி செய்ய பலகை (தேக்கு அல்லது கும்புக்) மற்றும் இரும்பு போன்றன பயன்படுத்தப்படுகின்றன. இரண்டு வருட உத்தரவாதத்துடன் இந்த வகை கதவுகள் தயாரிக்கப்படுகின்றன. மேலும், வாடிக்கையாளரின் தேவைக்கு அமைவாக ஒவ்வொரு கதவும் 'எச்சரிக்கை ஒளி' கொண்டு அமைந்துள்ளன. 
 
அமில் இன்டஸ்ரிஸ் முகாமைத்துவ பணிப்பாளர் ஜிஹான் அபேசுந்தர கருத்து தெரிவிக்கையில், 
 
'இல்லத்தரசிகளின் நலன் கருதி இந்த கதவுகள் தயாரிக்கப்பட்டுள்ளன. வீட்டு வேலைகளில் மும்முரமாக இல்லத்தரசி ஒருவர் ஈடுபட்டிருக்கும் போது, கதவை எவரும் தட்டினால், அது அவருக்கும் பெரும் கஷ்டமான காரியமாக அமைந்திருக்கும். அதுபோலவே இரவு வேளைகளிலும் இது பொருந்தும். இரவு வேளைகளில் இந்த வசதி பெரிதும் உதவியாக அமைந்திருக்கும்' என்றார்.
 
'இதனை கருத்தில் கொண்டு, வீட்டினுள் இருந்தவாறே, இலகுவான முறையில் ஒரு பொத்தானை மாத்திரம் அழுத்தி கதவை திறக்கும் வகையில் வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளன. வீட்டின் வெளியே இருந்தவாறே குறித்த வீட்டில் வசிக்கும் நபர் இந்த கதவை இலகுவாக திறந்து கொள்ள முடியும்' என அபேசுந்தர மேலும் தெரிவித்தார்.
 
எமது கம்பனி மற்றுமொரு விசேட சேவையையும் வழங்குகிறது. வாடிக்கையாளர் எனும் வகையில், அனைத்து சந்தர்ப்பங்களிலும், அவர்களின் தெரிவுகளுக்கமைய சுழலும் கதவுகளை தெரிவு செய்து கொள்ள முடியும். இதில் உலகளாவிய ரீதியில் பயன்படுத்தப்படும் புதிய வடிவமைப்புகளும் உள்ளடங்கும். (புதிதாக கொள்ளவனவு செய்ய எதிர்பார்க்கும் வாடிக்கையாளர்கள் இந்த வடிவங்களை www.facebook/AmilGroup எனும் இணையப்பக்கத்தின் மூலம் பார்வையிட முடியும்).
 
'எமது 'டிசைனர் ரோலர் கதவுகள்' குறுகிய காலப்பகுதியில் அதிகளவு கேள்வியை பெற்றுள்ளன. இதன் மூலம் நாம் இந்த கதவுகளை வடிவமைக்க பயன்படுத்தும் தரங்களை வாடிக்கையாளர்கள் அங்கீகரித்துள்ளனர் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது' என அபேசுந்தர மேலும் குறிப்பிட்டார்.
 
எமது வாடிக்கையாளர்களுக்கு அசௌகரியங்களை ஏற்படுவதிலிருந்து தவிர்த்துக் கொள்ளும் வகையில், நாம் விற்பனைக்கு பிந்திய சேவை நிலையங்களை நாட்டின் வடக்கு கிழக்கு உள்ளடங்கலாக அனைத்து மாகாணங்களிலும் நிறுவியுள்ளோம். எமது ஹொட்லைன் இலக்கமான 0773 564000 எனும் இலக்கத்துடன் தொடர்பு கொள்வதன் மூலம் வாடிக்கையாளர்கள் பல அனுகூலங்களை பெற்றுக் கொள்ள முடியும் என அபேசுந்தர தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .