
கட்டர்பில்லர் ஆசிய பசுபிக் விநியோக சேவைகள் பிரிவின் உப தலைவர் ஜிம் ஜோன்சன் இலங்கைக்கான விஜயமொன்றை மேற்கொண்டிருந்தார். இவருடன் கட்டர்பில்லர் ஆசிய பசுபிக் பிராந்தியத்தின் முகாமையாளர் ஸ்டீவ் லன்க்டொட் மற்றும் மாவட்ட முகாமையாளர் கெவின் ஸ்ரைடம் ஆகியோர் வருகை தந்திருந்தனர். இலங்கைக்கு விஜயம் செய்திருந்த கட்டர்பில்லரைச் சேர்ந்த சிரேஷ்ட நிறைவேற்று அதிகாரிகளில் ஒருவராக ஜிம் ஜோன்சன் திகழ்கிறார். கட்டர்பில்லர் Indian Districtsச் சேர்ந்த விநியோகத்தர்களை சந்திப்பதற்காக அவர் மேற்கொண்ட விஜயத்தின் முதற்கட்டமாக இந்த இலங்கை விஜயம் அமைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்த ஆண்டு கட்டர்பில்லர் ஆசிய பசுபிக் பிராந்தியத்தின் விநியோக செயற்பாடுகளுக்கான பொறுப்பதிகாரியாக நியமிக்கப்பட்ட ஜிம் ஜோன்சன், இந்த பிராந்தியத்தில் காணப்படும் பாதகமான பொருளாதார சூழ்நிலையிலும் கட்டர்பில்லர் வளர்ச்சியை முன்னெடுக்கும் பொறுப்பை மேற்கொண்டு வருகிறார். இந்தியா மற்றும் சீனா போன்ற நாடுகளின் பொருளாதார வளர்ச்சியின் பின்னடைவை தொடர்ந்தும், இந்தோனேசியா மற்றும் அவுஸ்திரேலியாவில் இடம்பெறும் அகழ்வு நடவடிக்கைகளில் சரிவு ஏற்பட்டுள்ளமையை தொடர்ந்தும். அனைத்து உற்பத்தியாளர்களுக்கும் இந்த சூழ்நிலை பெரும் சவாலை ஏற்படுத்தியுள்ளது. நிர்மாணத்துறையில் 37 வருடங்கள் அனுபவத்தை கொண்டுள்ள ஜோன்சன், இந்த பாதகமான சூழலில் கட்டர்பில்லர் செயற்பாடுகளை சிறப்பாக முன்னெடுத்துச் செல்லக்கூடியவர் என கருதப்படுகிறது. இவரது அனுபவத்தில், கட்டர்பில்லர் நிறுவனத்தில் பல சிரேஷ்ட பதவிகளை வகித்துள்ளார். மேலும், தனது சேவைக்கால பகுதியில் பெருமளவு நேரத்தை பொருட்கள் உதவி நிலைகளில் அதிகளவு செயலாற்றியிருந்தமையின் காரணமாக இவர் ‘Product Support man’ என அழைக்கப்படுகிறார்.
தனது குறுகிய விஜயத்தின் போது, ஜோன்சன் புதிதாக மறுசீரமைக்கப்பட்ட UTE இன் பகுதிக்கு விஜயம் செய்திருந்தார். அத்துடன், UTE யின் புதிய பயிற்சி நிலையத்தையும் பார்வையிட்டிருந்தார். நாட்டின் நிர்மாணத்துறைசார் இயந்திரங்கள் மற்றும் வலுப்பிறப்பாக்கிகள் சார்ந்த தொழில்நுட்ப வல்லுநர்களுக்கு பயிற்சிகளை வழங்குவதில் இந்த நிலையம் முன்னோடியாக திகழ்கின்றது. நவீன சாதனங்கள் மற்றும் பயிற்சி முறைகளின் உதவியுடன் அமைந்த UTE பயிற்சி நிலையம் உலகளாவிய ரீதியில் கட்டர்பில்லர் விநியோகத்தர்களிடம் காணப்படும் பயிற்சி வளங்களையும் வசதிகளையும் கொண்டமைந்துள்ளது.
இந்த விஜயத்தின் பிரதான நோக்கம், இலங்கையைச் சேர்ந்த பிரதான வர்த்தக தலைவர்களை சந்திப்பதாக அமைந்திருந்தது. நிர்மாண இயந்திரங்கள் மற்றும் வலுப்பிறப்பாக்கிகள் துறைகளை சேர்ந்த பெருமளவான தீர்மானம் மேற்கொள்பவர்கள் தமது வேலைப்பளு நிறைந்த நாளில் மதியப்பொழுதை ஒதுக்கி, ஜிம் ஜோன்சன் மற்றும் அவருடன் சமூகமளித்திருந்த சிரேஷ்ட வர்த்தக நிறைவேற்று அதிகாரிகளுடனும் சந்திப்பொன்றை மேற்கொண்டிருந்தனர். தமது உரையாடலின் போது, ஜிம், UTE உடன் நீண்ட கால நோக்கில் வர்த்தக உறவை பேணுவதன் முக்கியத்துவம் குறித்து விளக்கமளித்திருந்ததுடன், விநியோக சங்கிலி வலையமைப்பின் இறுதி நிலைகளில் இந்த உறவின் மூலம் சேர்க்கப்படும் பெறுமதி குறித்தும் விளக்கமளித்திருந்தார்.
இந்த விஜயம் தொடர்பாக UTE நிறுவனத்தின் தலைவர் பிரியாத் பெர்னான்டோ விளக்கமளிக்கையில் '25 வருட காலமாக மிகவும் மெதுவாக பெறுபேறுகளை பதிவு செய்த நிறுவனம், 2009ஆம் ஆண்டு முதல் இரட்டிப்பு மடங்கு புரள்வு பெறுமதிகளை பதிவு செய்துள்ளது. இந்த பெறுபேறுகள் மற்றும் மெருகேற்றங்கள் போன்றன தற்போது கட்டர்பில்லர் நிறுவனத்தினால் அவதானிக்கப்பட்டுள்ளது. சேவைத்தரங்களில் உயர்ந்த நிலைகளையும் பெறுபேறுகளையும் எய்துவதற்கு கட்டர்பில்லர் குறிப்பிடத்தக்க பங்களிப்பை UTE க்கு வழங்கியிருந்தது' என்றார்.
1947ஆம் ஆண்டு முதல் இலங்கையில் கட்டர்பில்லர் வர்த்தக நாமத்தில் அமைந்த நிர்மாண சாதனங்களையும், வலுப் பிறப்பாக்கிகளையும் விநியோகிப்பதில் ஏக அங்கீகாரம் பெற்ற முகவராக UTE திகழ்கிறது. பன்முக வர்த்தக குழமமாக இயங்கும் இந்நிறுவனம், நிர்மாணம் மற்றும் கடின சாதனங்கள், வலுப் பிறப்பாக்கல் மற்றும் விநியோகம், பொருட்களை கையாளல் மற்றும் களஞ்சியப்படுத்தல், வெல்டிங் சாதனம் மற்றும் பொறியியல் சேவைகள் ஆகிய துறைகளில் தமது சேவைகளை வழங்கி வருகிறது. தற்போது சந்தையில் காணப்படும் தேவைகளுக்கு அமைய இலங்கையின் தொழிற்துறைகளுக்கு சிறந்த பொறியியல் தீர்வுகளை வழங்கும் நிறுவனமாக தன்னை நிலை நிறுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.