2025 செப்டெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

மக்கள் வங்கியின் கடன் திட்டப் பிரிவு திறப்பு

Kogilavani   / 2013 நவம்பர் 07 , மு.ப. 05:45 - 0     - {{hitsCtrl.values.hits}}


-தேவ அச்சுதன்


மட்டக்களப்பு பிரதேச, சிறிய மற்றும் நடுத்தர தொழில்முயற்சியாளர்களை ஊக்குவிக்கும் முகமாகவும் அவர்களது தொழில்முயற்சிகளுக்கான கடன்களை இலகுவான முறையில் வழங்கும் நோக்குடனும் மக்கள் வங்கியின் பிரத்தியேக கிளையொன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மக்கள் வங்கி பிராந்திய தலைமைக் காரியாலயத்தில் 'ளுஆநு ஊநவெசந' எனும் பெயரில் புதன்கிழமை இக்கிளை திறந்து வைக்கப்பட்டது.

மட்டக்களப்பு மக்கள் வங்கியின் பிராந்திய முகாமையாளர் ஜனாப்.ஏ.அப்துல்அசிஸ் தலைமையில் வங்கிக்கிளையின் திறப்பு விழா நடைபெற்றது.

இக்கிளை திறப்பு தொடர்பில் கருத்துத் தெரிவித்த அவர், 

'இக்கிளையின் மூலம், சிறிய மற்றும் நடுத்தர தொழில்முயற்சியாளர்கள், கமத்தொழில், கைத்தொழில், கடற்றொழில், கால்நடை வளர்ப்பு, சுயதொழில் மற்றும் இவர்களுடன் தொடர்பான புதிய தொழில் முயற்சிகள் உருவாக்குவதற்கும், ஏற்கனவே சிறிய அளவில் உள்ள தொழில் முயற்சிகளை விரிவுபடுத்துவதற்கும் குறைந்த வட்டியில் இக்கடன் வசதிகளைப் பெறமுடியும்' என  தெரிவித்தார்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .