2025 செப்டெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

கரடியனாறு பிரதேசத்தில் மின்சார வசதிகளற்ற குடும்பங்களுக்கு சூரிய சக்தி மின்கட்டமைப்பு

A.P.Mathan   / 2013 நவம்பர் 07 , மு.ப. 11:04 - 0     - {{hitsCtrl.values.hits}}


மட்டக்களப்பு மாவட்டத்தில் செங்கலடி பிரதேச செயலகப் பிரிவின் கரடியனாறு பிரதேசத்தில் மின்சார வசதிகளற்ற மக்களுக்கு சூரிய சக்தியினால் இயங்கும் மின்கட்டமைப்புக்களை குளோபல் லைப் ஸ்டைல் லங்கா நிறுவனம் வழங்கியுள்ளது. 
 
மின்சார வசதிகளற்ற இப்பகுதியை சேர்ந்தவர்களுக்கு சூரிய சக்தியினால் இயங்கும் மின்கட்டமைப்புக்கள் வழங்கப்பட்டமையானது அவர்களது அன்றாட கடமைகளுக்கு அத்தியாவசிய உதவியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.  
 
கரடியன்குளத்திலுள்ள 20 பயனாளிகளுக்கு கரடியனாறு மகா வித்தியாலய மண்டபத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் பி.எஸ்.எம்.சாள்ஸ் பிரதம அதிதியாக கலந்துகொண்ட நிகழ்விலேயே இவை கையளிக்கப்பட்டதுடன் நிகழ்வில் குளோபல் லைப் ஸ்டைல் லங்கா நிறுவனத்தின் செயற்பாட்டு முகாமையாளர் எஸ்.சிவராஜா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .