2025 செப்டெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

ஜனசக்தி நிறுவனத்தின் புதிய பிரதம நிறைவேற்று அதிகாரி

A.P.Mathan   / 2013 நவம்பர் 15 , மு.ப. 08:28 - 0     - {{hitsCtrl.values.hits}}


ஜனசக்தி பிஎல்சி நிறுவனத்தின் புதிய பிரதம நிறைவேற்று அதிகாரியாக சிரேஷ்ட நிபுணர் ஜுட் பெர்னாண்டோ நியமிக்கப்பட்டுள்ளதாக ஜனசக்தி அறிவித்துள்ளது. இந்த புதிய பதவியேற்புடன், ஜுட் அவர்கள் நிறுவனத்தின் செயற்பாடுகளுக்கு தலைமை தாங்கவுள்ளதுடன், நிறுவனத்தின் எதிர்கால இலக்குகளை வெற்றி கொள்வதற்கு ஏற்ப நிறுவனத்தை திறம்பட செயற்படுத்த திட்டமிட்டுள்ளார். ஜனசக்தியின் புதிய பிரதம நிறைவேற்று அதிகாரியாக இவர் பதவியேற்பதற்கு முன்னர், கெல்சி ஹோம்ஸ்; லிமிடெட் நிறுவனத்தில் பணிப்பாளர்/பிரதம நிறைவேற்று அதிகாரியாகவும், கார்கீல்ஸ் மனுபக்டரிங் பிராண்ட்ஸ் இல் விற்பனை மற்றும் விநியோகப் பிரிவின் பிரதம பணிப்பாளராகவும் பதவி வகித்துள்ளார்.
 
தொழில் ரீதியில் ஒரு கணக்காளரான ஜுட் பெர்னாண்டோ அவர்கள் தனது 22 வருட தொழில் வாழ்க்கையில் நிதி, முகாமைத்துவ விநியோக வலையமைப்பு, விற்பனை மற்றும் சந்தைப்படுத்தல் மற்றும் சர்வதேச சந்தைப்படுத்தல் ஆகிய துறைகளில் பல்வேறு உயர் பதவிகளை வகித்துள்ளார்.  கொத்மலை ஹோல்டிங்ஸ் நிறுவனத்தில் பணிப்பாளராகவும், பிரதம நிறைவேற்று அதிகாரியாகவும் பணிபுரிந்த காலத்தில் பல்வேறு பிரிவுகளின் உற்பத்தித்திறன் மற்றும் செயற்திறனை மேம்படுத்தும் நடவடிக்கைகளில் மிக முக்கிய பங்காற்றியுள்ளார். அதற்கு முன்னதாக, ஹேமாஸ் குழும நிர்வாகக் குழுவின் அங்கத்தவராகவும், ஹேமாஸ் மனுபக்டரிங் நிறுவனத்தின் பணிப்பாளர் எனும் ரீதியில், முகாமைத்துவ விநியோக வலையமைப்பின் பிரதான பொறுப்பாளராகவும் இவர் செயற்பட்டுள்ளார். மேலும், டன்னமிஸ் கெபிடெல் பிஎல்சி, கெல்சி ஹோம்ஸ் மற்றும் First Capital ஹோல்டிங் பிஎல்சி ஆகிய பட்டியலிடப்பட்ட நிறுவனங்களின் சபையிலும் இவர் செயலாற்றியுள்ளார். மேலும் இவர் கால்நடை வள அபிவிருத்தி அமைச்சின் கீழ் இயங்கும் தேசிய பால் அபிவிருத்தி சபையின் அங்கத்தவர் ஆவர். 
 
'ஜுட் பெர்னாண்டோ அவர்களை மகிழ்ச்சியோடு வரவேற்கின்றதோடு, எமது செயற்பாடுகளை வழி நடத்துவதற்கான அனைத்து தகுதியும்; ஜுட் அவர்களிடம் காணப்படுகிறது' என ஜனசக்தியின் முகாமைத்துவ பணிப்பாளர் பிரகாஷ் ஷாஃப்ட்டர் தெரிவித்தார். 'அத்தோடு சந்தை குறித்த அவரின் ஆழமான அனுபவம், எமது குழுவினருக்கு ஒரு சொத்தாகவும், காப்புறுதி வர்த்தகத்தின் நீண்டகால வளர்ச்சிக்கும் வித்திடும்' என மேலும் அவர் தெரிவித்தார்.
 
ஜுட் அவர்கள் இலங்கை பட்டயக்கணக்காளர் முகாமைத்துவ கணக்காளர்கள் (UK) நிறுவனத்தின் சக உறுப்பினராகவும், சான்றளிக்கப்பட்ட பட்டயக்கணக்காளர் சங்கத்தின் (UK) இணை உறுப்பினராகவும் மற்றும் சந்தைப்படுத்தல் பட்டயக்கணக்காளர் நிறுவனத்தின் அங்கத்தவராகவும் இருந்துள்ளார். மேலும் இவர் வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் MBA பட்டத்தை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .