2025 செப்டெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

மட்டக்களப்பில் பங்குப்பரிவர்த்தனை தொடர்பான கருத்தரங்கு

Kogilavani   / 2013 நவம்பர் 25 , மு.ப. 10:20 - 0     - {{hitsCtrl.values.hits}}


-தேவ அச்சுதன்


இலங்கைப் பிணையங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணைக்குழுவும் மட்டக்களப்பு மாவட்ட வர்த்தக கைத்தொழில் விவசாய சமமேளனமும் இணைந்து நேற்றைய தினம் பங்குப்பரிவர்த்தனை தொடர்பான கருத்தரங்கு ஒன்றினை கோப் இன் விடுதியில் நடத்தியிருந்தனர்.

சம்மேனளத்தின்  பிரதம நிறைவேற்று அதிகாரி எஸ்.குகதாசன் தலைமையில் நடைபெற்ற இக் கருத்தரங்கில், கொழும்பு பங்குப் பரிவர்த்தனையின் நிறைவேற்று அதிகாரி ஆர்.எம்.சிவானந்தன், கொம் ரஸ்ட் பொது முகாமையாளர் பி.அசோகன், இலங்கைப் பிணையங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணைக்குழு அதிகாரி அகமட் இம்றான் ஆகியோர் விளக்கவுரைகளை வழங்கினர்.

இதில் இலங்கை பிணையங்கள் மற்றும் பங்கு பரிவர்த்தனை, கொழும்பு பங்கு பரிவர்த்தனை, பங்குத்தரகர் நிறுவனங்கள், நம்பிக்கை அலகு ஆகியவை தொடர்பான விளக்கங்கள் முதலீட்டாளர்கள், முதலீட்டு ஆர்வலர்கள், மாணவர்கள் என பலதரப்பட்டவர்களும் கலந்துகொண்டிருந்தனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள முதலீட்டாளர்கள் மத்தியில் பங்குப் பரிவர்த்தனையினை ஊக்குவிக்கும் நோக்கில் இந்த கருத்தரங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சித்திட்டத்திணை இலங்கைப் பிணையங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணைக்குழு மட்டக்களப்பு மாவட்ட வர்த்தக கைத்தொழில் விவசாய சமமேளனத்துடன் இணைந்து இந்தச் செயற்திட்டம் நடைமுறைப்படுத்தியிருந்தது.

சம்மேளன மற்றும் மக்களுக்கு இலங்கையின் பங்கு முதலீடுகள் மற்றும் நம்பிக்கை அலகுகள் தொடர்பான விழிப்புணர்வினை ஏற்படுத்தி முதலீடுகள் தொடர்பான அறிவினை வளர்த்தெடுக்கும் நோக்கில் இந்தக் கருத்தரங்கு ஏற்பாடு செய்யப்பட்டதாக மட்டக்களப்பு மாவட்ட வர்த்தக கைத்தொழில் விவசாய சம்மேனளத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி எஸ்.குகதாசன் தெரிவித்தார்.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .