2025 செப்டெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

தொடர்ந்தும் சரிவு நிலையில் கொழும்பு பங்குச்சந்தை

Kogilavani   / 2013 நவம்பர் 27 , மு.ப. 08:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொடுக்கல் வாங்கல் நடவடிக்கைகள் நேற்றைய தினமும் தொடர்ந்து சரிவான பெறுமதிகளை பதிவு செய்திருந்தது. பிரதான சுட்டிகள் இரண்டும் மறை பெறுமதிகளை பதிவு செய்து நிறைவடைந்திருந்தன. ஊவு லான்ட் டிவலப்மன்ட் பங்குகள் மீதான மொத்தமாக கைமாற்றத்தை தொடர்ந்து அரை பில்லியன் ரூபாவை விட குறைவான பெறுமதியை மொத்தப்புரள்வு பெறுமதி பதிவு செய்திருந்தது. மேலும் ஹற்றன் நஷனல் வங்கி, கொமர்ஷல் வங்கி மற்றும் எயிட்கன் ஸ்பென்ஸ் ஆகியன அதிகளவு கவனத்தை ஈர்த்திருந்தன. வெலிபல் பவர் பங்கிலாபம் தொடர்பான அறிவிப்பை வெளியிட்டதை தொடர்ந்து அதன் மீது கலப்பு ஈடுபாடு காணப்பட்டது.

வெளிநாட்டவர்கள் பெறுமளவு பங்கு விற்பனையில் ஈடுபட்டிருந்ததை அவதானிக்க முடிந்தது.

வங்கி, நிதியியல் மற்றும் காப்புறுதி துறை மொத்தப்புரள்வு பெறுமதியில் அதிகளவு பங்களிப்பை வழங்கியிருந்தது.

(கொமர்ஷல் வங்கி மற்றும் ஹற்றன் நஷனல் வங்கி பங்களிப்புடன்) இந்த சுட்டி 0.86மூ சரிவை பதிவு செய்திருந்தது. ஹற்றன் நஷனல் வங்கி மற்றும் கொமர்ஷல் வங்கி பங்கொன்றின் விலை 0.50 ரூபாவினால் (2.44மூ) மற்றும்  0.40 ரூபாவினால் (0.35மூ)  சரிவடைந்து முறையே 144.00 மற்றும் 113.00 ரூபாவாக நிறைவடைந்திருந்தது.

சந்தையின் மொத்தப்புரள்வு பெறுமதியில் இரண்டாவது அதிகளவு பங்களிப்பை தொலைத்தொடர்பாடல் துறை வழங்கியிருந்தது. (டயலொக் ஆக்சியாடா பங்களிப்புடன்;) இந்த துறை மாற்றம் எதுவும் பதிவாகவில்லை. டயலொக் ஆக்சியாடா பங்கொன்றின் விலை 9.00 ரூபாவாக மாற்றமின்றி நிறைவடைந்திருந்தது. வெளிநாட்டு உரிமையாண்மை 6,787,364 பங்குகளால் குறைந்திருந்தது.

இதேவேளை, வெலிபல் பவர் தனது இடைக்கால பங்கிலாபத்தை பங்கொன்றுக்கு 0.40 ரூபாவாக அறிவித்திருந்தது.

சந்தை நடவடிக்கைகள் இந்தக்கிழமை முழுவதும் தொடர்ந்து மந்த கதியில் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .