2026 மே 02, சனிக்கிழமை

2014இன் முதல் 5 மாதங்களில் கொழும்பு பங்குச்சந்தை சிறந்த பெறுபேறுகள்

A.P.Mathan   / 2014 ஜூன் 10 , மு.ப. 09:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

2013இல் பதிவு செய்திருந்த பெறுபேறுகளுடன் ஒப்பிடுகையில், நடப்பு ஆண்டின் முதல் 5 மாதங்களில் சிறந்த பெறுபேறுகளை கொழும்பு பங்குச்சந்தை பதிவு செய்துள்ளதாக அறிவிக்க்கப்பட்டுள்ளது. மே மாதம் 30ஆம் திகதியுடன் நிறைவடைந்த காலப்பகுதியில் அனைத்து பங்குச் சுட்டெண் 6263.46 ஆக பதிவாகியிருந்ததுடன், இது 5.9 வீத அதிகரிப்பாகும். அதுபோலவே S&P SL 20 சுட்டி 3454.61 ஆக பதிவாகியிருந்தது இது 5.8 வீத அதிகரிப்பாகும்.

மொத்தமாக 46 வீதமான பட்டியலிடப்பட்ட நிறுவனங்கள் சிறப்பான பெறுபேறுகளை பதிவு செய்துள்ளன. 293 பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களில் 137 நிறுவனங்கள் 5 வீத வருமானங்களை பதிவு செய்துள்ளன என கொழும்பு பங்குச்சந்தை அறிவித்துள்ளது.

இதே கொழும்பு பங்குசந்தையில் புதிய நிறுவனங்களை பட்டியலிடுவதற்கான ஆர்வமும் அதிகரித்து காணப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .