2025 செப்டெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

தேயிலை செயன்முறையில் ஈடுபடுவதற்கு ஹெரிற்ரன்ஸ் டீ பெக்ரீக்கு சேதன சான்றிதழ்

Super User   / 2014 பெப்ரவரி 06 , மு.ப. 06:36 - 0     - {{hitsCtrl.values.hits}}


இலங்கையில் முதற் தடவையாக ஹெரிற்ரன்ஸ் டீ பெக்ரீ எனும் ஹோட்டேலுக்கு தேயிலை வளர்த்தல், பதப்படுத்தல் ஆகியவற்றிற்கான சேதன சான்றிதழை இலங்கை தர நியமங்கள் நிறுவனத்தினால் அண்மையில் வழங்கப்பட்டது.

கடந்த எட்டு வருட தொடர் முயற்சியின் பின்னர் சேதன கறுப்பு தேயிலை, பச்சை தேயிலை மற்றும் மூலிகை தேயிலை ஆகியவற்றை வளர்த்தல், பதப்படுத்துவதற்கு இந்த ஹோட்டேல் சேதன சான்றிகழ் பெறுவதில் முன்னோடியாக சாதனை படைத்துள்ளது.

ஹெரிற்ரன்ஸ் டீ பெக்ரீ 25 ஏக்கர் பசுமையான தேயிலை பயிர்களினால் சூழப்பட்டுள்ளமை குறிப்பிடத்த்தக்கது.கடந்த 2005ஆம் ஆண்டிலிருந்து 100 சதவீத சேதன அந்தஸ்த்தை பெறுவதற்கான நடவடிக்கைகளை இந்த ஹோட்டேல் தொடங்கியது. இதற்காக இரசாயன பசளை, பூச்சி கொல்லி, களை கொல்லி ஆகியவற்றின் பயன்படுகள் இங்கு நிறுத்தப்பட்டன.

சேதன சான்றிதழ் பெறுவதற்கான செயன்முறையை கடும் உழைப்பையும் அர்ப்பணத்தையும் வேண்டி நின்றன. இதற்கான பரிசோதனை நடவடிக்கைகள் குண்டசாலை விவசாய ஆராய்ச்சி நிறுவனத்திலும் தலவாக்கலை தேயிலை தேயிலை ஆராய்ச்சி நிறுவனத்திலும் மேற்கொள்ளப்பட்டன. 

இதற்கு மேலதிகமாக இலங்கை தர நியமங்கள் நிறுவன பரிசோதகர்கள் மூன்று தடவை நேரில் விஜயம் செய்து பரிசோதனைகளை மேற்கொண்டனர்.ஹெரிற்ரன்ஸ் டீ பெக்ரீ தோட்டத்தை விட்டுப் போன பல பறவைகளும் பூச்சிகளும் திரும்பி வந்ததை பலரும் அவதானித்தனர்.

"இந்த கனவை மெய்ப்படுத்த உழைத்த சகலரையும் பாராட்டுவதாக" ஹெரிற்ரன்ஸ் டீ பெக்ரீயின் பொது முகாமையாளர் ரொஷான் லால் பெரேரா கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .