2025 செப்டெம்பர் 22, திங்கட்கிழமை

மகா நெகும புலமைபரிசில்

A.P.Mathan   / 2014 ஏப்ரல் 10 , பி.ப. 04:16 - 0     - {{hitsCtrl.values.hits}}


இன, மத வேறுபாடுகளை மறந்து நாட்டை முன்னேற்றுவது மாணவர்கள் கைகளில் உள்ளது. உங்களில் ஒருவரரான நானும் இந்த மகா நெகும புலமைபரிசில் பெற்று கல்வி கற்றவன். முல்லைத்தீவு மாணவர்கள் இன்று கல்வியில் நல்ல வளர்ச்சி பெற்றுள்ளனர் என வன்னி மாவட்ட அபிவிருத்தி குழுவின் தலைவரும் கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சருமான ரிசாட் பதியுதீன் தெரிவித்தார்.

முல்லைதீவு பிரதேச சபையால் நேற்று (09) ஒழுங்கு செய்யப்பட்ட மகா நெகும புலமைபரிசில் வழங்கப்படும் நிகழ்ச்சி திட்டத்தில் விஷேட அதிதியாக கலந்து கொண்டு மாணவர்கள் மத்தியில் உரையாற்றும் போதே அமைச்சர் ரிஷாட், மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அமைச்சர் தொடர்ந்து அங்கு பேசுகையில்:

மாணவர்கள் இன, மத, வேறுபாடு பார்க்காது தமது கல்வியில் மேலும் சிறப்புற வேண்டும். மாணவர்களின் வளர்ச்சியின் பின்னால் அவர்களது பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் துணை நின்றிருப்பார்கள் என்பது யாராலும் மறுக்க முடியாத உண்மை. தமது பிரதேசத்தை முன்னேற்ற வேண்டுமென்றால் மாணவர்கள் தாம் கற்ற மாவட்டத்தில் வந்து பணிபுரிய வேண்டும் எனவும்  அமைச்சர் ரிஷாட் குறிப்பிட்டார்.

இந்த நிகழ்ச்சி திட்டத்தில் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஹுனைஸ் பாரூக்கு பிரதம அதியாக கலந்து கொண்டார்.

இம் மகா நெகும புலமைபரிசில் வழங்கப்படும் நிகழ்ச்சி திட்டத்தினூடாக 98 மாணவர்களுக்கு புலமைபரிசில்கள் வழங்கப்பட்மை குறிப்பிடத்தக்கது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X