2025 செப்டெம்பர் 22, திங்கட்கிழமை

முழுமையான வாழ்க்கை பாதுகாப்பை வழங்கும் ஜனசக்தி லைஃவ் அன்லிமிடட் திட்டம்

A.P.Mathan   / 2014 மே 01 , மு.ப. 06:33 - 0     - {{hitsCtrl.values.hits}}


ஜனசக்தி காப்புறுதி நிறுவனத்தின் விரிவான ஆயுள் காப்புறுதி திட்டமானது, வாழ்நாள் முழுவதும் மருத்துவமனை செலவு, இயற்கை மரணம் மற்றும் விபத்தின் போது 20 வருட உரிமைக்கோரல்களை காப்புறுதிதாரருக்கு வழங்குகிறது.

20 வருடங்களை கொண்ட லைஃவ் அன்லிமிடட் திட்டமானது (Life Unlimited plan) காப்புறுதிதாரருக்கு பல அனுகூலங்களை வழங்குவதுடன், எதிர்பாராத அசம்பாவிதங்களின் போது காப்புறுதிதாரரின் பாதுகாப்பினையும் உறுதி செய்வதாக அமைந்துள்ளது.

'வாழ்க்கை என்பது எளிதில் அழியக்கூடியது. எந்தவொரு நொடியிலும் விபத்துக்கள் நேரலாம்...எனவே தான் பாதுகாப்பு என்பது மிக முக்கியம்' என ஜனசக்தி நிறுவனத்தின் விற்பனை மற்றும் சந்தைப்படுத்தல் பிரிவின் பொது முகாமையாளர் செஹாரா டி சில்வா தெரிவித்தார். 

'இந்த லைஃவ் அன்லிமிடட் திட்டத்தின் கீழ் காப்புறுதிதாரருக்கு மருத்துவமனை செலவு, தீவிர நோய், விபத்து, மரணம் ஆகியவற்றின் போதும், விபத்து மற்றும் நோய் காரணமாக முழுமையாக அங்கவீனமடையும் நிலையிலும் கூட முழுமையான காப்புறுதி தொகை வழங்கப்படுகிறது. இவ் விரிவான காப்புறுதி திட்டமானது நீங்கள் எதிர்பாராத நிலைமைகளில் உங்களுக்கு பாதுகாப்பையும், மன நிம்மதியையும் அளிக்கிறது' என மேலும் அவர் தெரிவித்தார்.

இத் திட்டத்தின் முதிர்வின் பின்னரும் கூட, லைஃவ் அன்லிமிடட் காப்புறுதிதாரர் எவ்வித பணத்தையும் செலுத்தாமலேயே மருத்துவமனை செலவு, விபத்து மற்றும் இயற்கை மரணம் போன்றவற்றிற்கான காப்புறுதி தொகையை பெற்றுக்கொள்ளலாம்.

'எமது லைஃவ் அன்லிமிடட் காப்புறுதிதாரர் தமது தேவைக்கேற்ற வகையில், தமது பாதுகாப்பினை மேம்படுத்திக் கொள்வதற்கான நெகிழ்ச்சித்தன்மை இத் திட்டத்தில் காணப்படுகிறது. மேலும் காப்புறுதிதாரர்  தமக்களித்த அதே மருத்துவ பாதுகாப்பினை தமது வாழ்க்கைத்துணைக்கோ அல்லது குழந்தைகளுக்கோ வழங்கப்படுவதை தீர்மானிக்க முடியும்' என ஜனசக்தி இன்சூரன்ஸ் பிஎல்சியின் ஆயுள் வர்த்தகநாம முகாமையாளர் ஜுட் சில்வா தெரிவித்தார். பொறுப்பு வாய்ந்த முன்னணி காப்புறுதி நிறுவனம் எனும் வகையில் நாம் எமது வாடிக்கையாளருக்கு பாதுகாப்பையும், மன நிம்மதியையும் வழங்குகிறோம். பெரும்பாலான மக்கள் தமது முதிர்வான காலப்பகுதியில் மருத்துவ பாதுகாப்பினை பெற்றுக்கொள்ள முடியாமையினால் லைஃவ் அன்லிமிடட் திட்டமானது தனித்தன்மை வாய்ந்ததாக உள்ளது' என மேலும் அவர் தெரிவித்தார்.

ஜனசக்தி நிறுவனமானது அண்மையில் நீண்டகால உரிமைக்கோரல் வழங்குதலில் RAM ரேடிங் லங்காவின் A தரத்திற்கு உயர்த்தப்பட்டுள்ளது. 2013 ஜூன் மாதத்துடன் முடிவடைந்த ஆறு மாதங்களில் ஆயுள் மற்றும் ஆயுள்; சாரா பிரிவுகளில் 1.9 பில்லியன் ரூபா உரிமைக்கோரல்களை வழங்கியதன் காரணமாக இந் நிறுவனத்தின் கவர்ச்சிகரமான சாதனையை கௌரவப்படுத்தும் வகையில் தரமுயர்த்தப்பட்டுள்ளது. ஜனசக்தியின் நட்சத்திர செயற்திறனுக்கு தேசிய வர்த்தக சிறப்பு விருதுகள் விழாவில் தங்க விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது. இவ் விருதானது, நிறுவனங்களின் புதிய கண்டுபிடிப்பு பயன்பாடு, பணியாளர்களுக்கான பயிற்சிகள் மற்றும் அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுக்கும் நிறுவனத்தின் அர்ப்பணிப்பை கௌரவப்படுத்துவதாக அமைந்துள்ளது. மேலும் இந் நிறுவனத்தின் நிதி செயற்திறன் மூலம் நிறுவனத்தின் கிளை வலையமைப்பு விஸ்தரிக்கப்பட்டுள்ளது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .