2025 செப்டெம்பர் 22, திங்கட்கிழமை

கந்தபொல மகிந்த மகா வித்தியாலயத்திற்கு தகவல் தொழில்நுட்ப ஆய்வுகூடம்

A.P.Mathan   / 2014 மே 07 , பி.ப. 03:41 - 0     - {{hitsCtrl.values.hits}}


தேசத்தின் முன்னணி நிதி நிறுவனமான சிட்டிசன்ஸ் டிவலப்மன்ட் பிஸ்னஸ் பினான்ஸ் பிஎல்சி (CDB) அதன் 'CDB பரிகனக பியஸ' சமூக பொறுப்புணர்வு திட்டத்தின் கீழ், கந்தபொல மகிந்த மகா வித்தியாலயத்தின் அத்தியாவசிய தேவையாக காணப்பட்ட தகவல் தொழில்நுட்ப ஆய்வுகூடம் ஒன்றினை அன்பளிப்பாக வழங்கியிருந்தது.

இந் நிகழ்வில் CDB இன் பணிப்பாளரும், தலைமை நிதி அதிகாரியுமான தமித் தென்னகோன் மற்றும் ஏனைய சிரேஷ்ட அங்கத்தவர்களும் இணைந்து தகவல் தொழில்நுட்ப ஆய்வுகூடத்தை பாடசாலை வசம் ஒப்படைத்தனர். மொத்தமாக 1.5 மில்லியன் ரூபா பெறுமதியான இத் திட்டத்தின் மூலம் CDB நிறுவனம் இதுவரை இம்மாதிரியான 7 ஆய்வுகூடங்களை நன்கொடையாக வழங்கியுள்ளதுடன், இத் திட்டம் நாடுபூராகவும் உள்ள பாடசாலை மாணவர்களின் IT அறிவினை மேம்படுத்தும் வகையில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இத் தகவல் தொழில்நுட்ப ஆய்வுகூடமானது HP கணினிகள், LCD monitors, printers, எழுதுபொருள், ஸ்கேனர்கள், கணினி மேசைகள், கதிரைகள் மற்றும் பிற உட்கட்டமைப்பு வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளது.

நுவரெலியா மாவட்டத்தின் அமைந்துள்ள கந்தபொல மகிந்த மகா வித்தியாலயத்தில் 215 மாணவர்கள் கல்வி கற்று வருவதுடன், க.பொ.த சாதாரண தரம் வரை கற்கைநெறிகள்; காணப்படுகின்றன.

இந் நிகழ்வில் தமது நன்றியை தெரிவித்துக் கொண்ட பாடசாலை அதிபர் டபிள்யு.எச்.எம்.ஜயதிலக, 'இன்றைய காலக்கட்டத்தில் கல்வியானது தொழில்நுட்பத்துடன் ஒன்றிணைக்கப்பட்டுள்ளதுடன், எமது வாழ்வில் ஓர் அங்கமாக மாற்றமடைந்துள்ளது. எமது பிள்ளைகள் நீண்டகாலமாக தகவல் தொழில்நுட்ப அறிவு மற்றும் இணைய வசதிகளின்றி இருந்தனர். CDB நிறுவனமானது எமது சமூகத்தின் IT திறனுக்காக ஆய்வுகூடத்தை நன்கொடையாக வழங்கியுள்ளது. இது எமது பாடசாலை வரலாற்றில் முக்கிய மைல்கல்லாக அமைந்துள்ளது' என தெரிவித்தார்.

'இத் திட்டத்தை முன்னெடுத்த CDB நிறுவனத்திற்கு மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றோம். இத் திட்டமானது எமது பாடசாலையை மாத்திரமன்றி, ஒட்டுமொத்த கந்தபொல சமூகத்தையும் மேம்படுத்துகின்றது. மேலும் கந்தபொல மற்றும் அதனை அண்டிய கிராமங்களில் 150 க்கும் மேலான குடும்பங்கள் வாழ்கின்றன' என ஜயதிலக தெரிவித்தார்.

இந் நிகழ்வில் கருத்த தெரிவித்த CDB நிறுவனத்தின் பணிப்பாளரும், தலைமை நிதி அதிகாரியுமான தமித் தென்னகோன், 'நாம் எமது சமூக பொறுப்புணர்வு திட்டங்களில் ஓர் அங்கமாக கடந்த 5 ஆண்டுகளாக கிராமிய இளைஞர்களின் தகவல் தொழில்நுட்ப அறிவினை மேம்படுத்தும் வகையில் இவ் IT ஆய்வுகூட நன்கொடை திட்டத்தை முன்னெடுத்து வருகின்றோம். இன்றைய உலகம், ஒன்றோடொன்று தொடர்புள்ளதாகவும், போட்டிகரமானதாகவும் மாற்றமடைந்துள்ளது. இதன் காரணமாக, இளம் சமுதாயத்தினர் அப் போட்டியை எதிர்கொள்ளவும், தமது வேலைவாய்ப்புகளை வலுப்படுத்தவும் சிறந்த வலையமைப்புகளை கட்டமைத்துக் கொள்ளல் வேண்டும்' என்றார்.

தமது அன்பளிப்பு குறித்து தென்னகோன் தெரிவிக்கையில், 'கல்வி மற்றும் வேலைவாய்ப்பின் போது முக்கிய தேவையாக கருதப்படும் IT திறன்களை வழங்கும் இத் திட்டத்தினூடாக மகிந்த மகா வித்தியாலயத்தின் மாணவர்கள் தமது எதிர்காலத்தை சிறப்பாக மாற்றியமைத்து கொள்ள முடியும்' எனவும் தெரிவித்தார்.

கடந்த பல ஆண்டுகளாக எமது நிறுவனத்தின் வெற்றியில் CSR திட்டங்கள் முக்கிய அங்கமாக உள்ளது. CDB தகவல் தொழில்நுட்ப நிலையம் அல்லது 'பரிகனக பியஸ' ஆய்வுகூட நன்கொடை வழங்குதலானது அதன் முக்கிய CSR திட்டங்களுடன் ஒன்றிணைக்கப்பட்டுள்ளது. IT அறிவினை மேம்படுத்தும் தேசிய இயக்கியின் ஓர் அங்கமாக, CDB ஆனது நாட்டின் ஏனைய பகுதிகளிலும் இத்தகைய திட்டங்களை முன்னெடுக்க திட்டமிட்டுள்ளது.

இத் திட்டம் தொடர்பான CDBயின் நடத்தை குறித்து தென்னகோன் கருத்து தெரிவிக்கையில், 'நாட்டின் நீண்டகால பொருளாதார முன்னேற்ற செயற்பாடுகள் தவிர்க்க முடியாத வகையில் வாய்ப்புகளுடன் ஒன்றிணைக்கப்பட்டுள்ளது. இவற்றை கருத்தில் கொண்டு எமது சமூக பொறுப்புணர்வு திட்டங்களின் மூலோபாயமாக நாட்டின் கிராமப்புறங்களைச் சேர்ந்த இளம் சமுதாயத்தினரின் தகவல் தொழில்நுட்ப அறிவினை மேம்படுத்தும் செயற்பாடுகளில் நடைமுறை அணுகுமுறைகளை கையாள்வது குறித்து கவனம் செலுத்தி வருகின்றோம். இம் முயற்சியானது மாணவர்களுக்கு உலகத்துடன் ஒன்றிணைந்து செயற்பட உதவும் என நம்புகிறோம்' என தெரிவித்தார்.

இத் திட்டங்களின் விளைவாக, மாணவர்கள் கணினி அறிவினை மேம்படுத்திக் கொள்வதற்கான உகந்த சூழல் ஏற்படுத்தி கொடுக்கப்பட்டுள்ளது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .