2025 செப்டெம்பர் 22, திங்கட்கிழமை

குழந்தைகளின் ஆரோக்கியமான உடல் மற்றும் உள விருத்திக்கு சமபல போசாக்கு

A.P.Mathan   / 2014 மே 20 , மு.ப. 10:04 - 0     - {{hitsCtrl.values.hits}}


குழந்தைகளின் உடல் மற்றும் உள விருத்திக்கு அவசியமான சோளம், அரிசி, பயறு, சோயா போன்ற தானியங்களின் குணநலன்களை சமபோஷ வழங்குகிறது. குழந்தையானது தன் நாளாந்த செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கு தேவையான சக்தியை பெறுவதற்கு சில போசாக்கான உணவுகளை உட்கொள்ளுதல் வேண்டும். இதற்கு எமது நாளாந்த உணவில் காபோவைதரேட்டு, புரதம், கல்சியம், விற்றமின்கள் மற்றும் கனியுப்புக்கள் உள்ளடங்கியிருத்தல் வேண்டும். இந்த ஊட்டச்சத்துக்களை பெறும் நோக்கிலேயே எமது நாளாந்த உணவு வேளையில் சோறு, மீன், இறைச்சி, பால், முட்டை, காய்கறிகள் மற்றும் கீரை வகைகளை சேர்த்துக் கொள்கின்றோம்.

தற்போதைய பரபரப்பான வாழ்க்கைமுறையில் சமபல போசாக்கு நிறைந்த உணவினை தயாரிப்பது என்பது சில பெற்றோருக்கு முடியாத காரியமாகும். சில சந்தர்ப்பங்களில் குழந்தைகள் சில உணவு வகைகளை தவிர்ப்பதால் சரியான போசாக்கு கிடைக்காமல் போகிறது. மேலும் சில உணவுகளில் காலகாலத்தில் ஏற்படும் சில பிரச்சனைகளால் பெற்றோர்கள் தங்கள் குழந்தையின் போசாக்குத் தேவையை பூர்த்தி செய்வதற்கு சில மாற்று உணவுகளை தேட வேண்டிய நிலை உருவாகியுள்ளது. இந்த பிரச்சனைகளுக்கு நிலையான தீர்வினை சமபோஷ வழங்குகிறது.

எமது நாளாந்த உணவில் சேர்த்துக்கொள்ளும் இறைச்சி, மீன், பால், முட்டை போன்ற ஆகாரங்களுடன் ஒப்பிடுகையில், சமபோஷவில் அதிகப்படியான கலோரி அடங்கியுள்ளது என ஆராய்ச்சிகள் மூலம் கண்டறியப்பட்டுள்ளது. தொழில்நுட்ப மற்றும் ஆராய்ச்சி அமைச்சின் கீழ் இயங்கும் தொழிற்துறை நிலையம் மற்றும் USD National Nutrient Database இன் அறிக்கையின் படி இறைச்சி 50(கி), மீன் 50(கி), பால் குவளையொன்று, முட்டை ஒன்று ஆகியவற்றுடன் ஒப்பிடுகையில், சமபோஷ 50 கிராம் பக்கற்றில் 198கி.கிராம் சக்தி உள்ளடங்கியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. 50 கிராம் சமபோஷ தயாரிப்பில், புரதம்(கி) 9.8, கொழுப்பு(கி) 3.4, காபோவைதரேற்று(கி) 32.2, ஃபைபர்(கி) 0.8, கல்சியம்(கி) 60.0, மற்றும் இரும்பு(கி) 1.5 உள்ளடக்கப்பட்டுள்ளன. 

காலத்திற்கேற்ப மாற்றமடையும் வாழ்க்கை முறையுடன் உட்கொள்வதை குறைத்துக்கொண்ட தானிய வகைகளை மீளவும் உணவில் சேர்த்து கொள்வதை ஊக்கப்படுத்தும் வகையில், கடந்த 1998ஆம் ஆண்டு சமபோஷ அறிமுகம் செய்யப்பட்டது. சோளம், அரிசி, சோயா மற்றும் பயறு போன்ற தானிய வகைகளின் போசாக்குடன் 9 விற்றமின் மற்றும் கனியுப்புகள் கொண்ட ஊட்டச்சத்து ஆகாரமாக சமபோஷ விளங்குகிறது. சுமார் 8000 இற்கும் மேற்பட்ட தேசிய விவசாயிகளிடமிருந்து பெறப்படும் 100% ஆன இயற்கை தானியங்களின் போசாக்கு பாதுகாக்கப்படும் வகையில் சமபோஷ உற்பத்தி செய்யப்படுகிறது. இச் செயற்பாடுகளின் உயர்தரத்தை முதன்மையாக கொண்டு சமபோஷ உற்பத்திக்கு SLS-1036 தரச் சான்றிதழ் மற்றும் ISO-22000, HACCP மற்றும் GMP போன்ற சர்வதேச தரச் சான்றிதழ்களும் வழங்கப்பட்டுள்ளன.

வாடிக்கையாளர்களின் நம்பிக்கையை வென்று கடந்த 15 ஆண்டுகளாக சந்தையில் தனக்கென தனியான ஒர் இடத்தை பிடித்துள்ள சமபோஷ, மேலும் அதன் இருப்பை உறுதிப்படுத்தும் வகையில் கடந்தாண்டு தேசிய விவசாய வியாபார சபை மூலம் ஒழுங்கு செய்யப்பட்ட 'தேசிய விவசாய வியாபார விருதுகள் வழங்கும் நிகழ்வு' இல் சமபோஷ உற்பத்தி செய்யும் சிலோன் பிஸ்கட்ஸ் நிறுவனத்தின் துணை நிறுவனமான பிளென்டி ஃபூட்ஸ் நிறுவனத்தின் உற்பத்தி குறித்த அர்ப்பணிப்பை பாராட்டும் வகையில் தேசியளவில் மூன்றாம் இடத்திற்குரிய வெண்கல விருதையும், மிகப்பெரிய பிரிவின் கீழ் உணவுத் தயாரிப்பு செயல்பாடுகளுக்கான தங்க விருதையும் வென்றெடுத்தது.

இதற்கு மேலதிகமாக, SLIM சிறந்த வர்த்தகநாமங்கள் விருதுகள் வழங்கும் நிகழ்வில், ஆண்டின் சிறந்த தேசிய உற்பத்தி வர்த்தகநாமத்திற்கான வெள்ளி விருது உள்ளடங்கலாக, 3 வெள்ளி விருதுகள் மற்றும் 2 வெண்கல விருதுகளுடன் மொத்தமாக 5 விருதுகளை தனதாக்கிக் கொண்டது. இந்த விருதுகளில் ஆண்டின் சிறந்த அறிமுகத்திற்கான வெள்ளி விருது, சிறந்த சமூக பொறுப்புணர்வு திட்டங்களுக்கான வெள்ளி விருது, ஆண்டின் சிறந்த உற்பத்தி வர்த்தகநாமத்திற்கான வெண்கல விருது, புத்தாக்க உற்பத்தி வர்த்தகநாமத்திற்குரிய வெண்கல விருது ஆகியன உள்ளடங்குகின்றன.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X