2025 செப்டெம்பர் 22, திங்கட்கிழமை

பங்குச்சந்தை சுட்டிகள் சரிவு

A.P.Mathan   / 2014 மே 22 , மு.ப. 07:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

11 மாதங்களில் பதிவாகிய உயர்ந்த பெறுமதிகளை பதிவு செய்திருந்த கொழும்பு பங்குச்சந்தை நேற்று புதன்கிழமை நடவடிக்கைகள் நிறைவடைகையில் மறைபெறுமதியில் நிறைவடைந்திருந்தது.

இலாபமீட்டும் நோக்கில் பெருமளவான பங்குதாரர்கள் பங்குகளை கைமாற்றியிருந்ததன் காரணமாக, இந்த சரிவு சந்தையில் பதிவாகியிருந்தது. புரள்வு பெறுமதி ஆரோக்கியமானதாக பதிவாகிய போதிலும், சந்தையின் பிரதான சுட்டிகள் மறை பெறுமதியில் நிறைவடைந்திருந்தன. ரெலிகொம், கொமர்ஷல் வங்கி மற்றும் செலிங்கோ இன்சூரன்ஸ் ஆகியவற்றின் மீது விலைச்சரிவுகள் பதிவாகியிருந்தன. ஹற்றன் நஷனல் வங்கி மற்றும் யுனைட்டட் மோட்டர்ஸ் ஆகியன புரள்வு பெறுமதியில் 51 வீத பங்களிப்பை வழங்கியிருந்தன. இதேவேளை, லாஃவ்ஸ் காஸ் பங்குகள் மீது சிறியளவிலான முதலீட்டாளர்களின் ஈடுபாடு காணப்பட்டது.

மோட்டார் துறை என்பது சந்தையின் புரள்வு பெறுமதியில் அதிகளவு பங்களிப்பை வழங்கியிருந்தது (யுனைட்டட் மோட்டர்ஸ் பங்களிப்புடன்) இந்த துறையின் சுட்டெண் 0.05% சரிவை பதிவு செய்திருந்தது. யுனைட்டட் மோட்டர்ஸ் பங்கொன்றின் விலை 1.60 ரூபாவால் (1.28%) அதிகரித்து 127.00 ரூபாவாக பதிவாகியிருந்தது. வெளிநாட்டு உரிமையாண்மை 3,253,500 பங்குகளால் அதிகரித்திருந்தது.

வங்கி, நிதியியல் மற்றும் காப்புறுதி துறை என்பது சந்தையின் புரள்வு பெறுமதியில் இரண்டாவது உயர் பங்களிப்பை வழங்கியிருந்தது. (ஹற்றன் நஷனல் வங்கி மற்றும் கொமர்ஷல் வங்கி ஆகியவற்றின் பங்களிப்புடன்) இந்த துறையின் சுட்டெண் 1.01% சரிவை பதிவு செய்திருந்தது. ஹற்றன் நஷனல் வங்கி பங்கொன்றின் விலை 0.90 ரூபாவால் குறைந்து 157.00 ரூபாவாக பதிவாகியிருந்தது. கொமர்ஷல் வங்கி பங்கொன்றின் விலை 1.50 ரூபாவால் (1.17%) குறைந்து 126.50 ரூபாவாக பதிவாகியிருந்தது.

ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் மற்றும் டிஸ்டிலரிஸ் பங்குகளும் புரள்வு பெறுமதியில் அதிகளவு பங்களிப்பை வழங்கியிருந்தன. ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் பங்கொன்றின் விலை 1.00 ரூபாவால் குறைந்து 233.00 ரூபாவாக நிறைவடைந்திருந்தது. வெளிநாட்டு உரிமையாண்மை 171,763 பங்குகளால் அதிகரித்திருந்தது. டிஸ்டிலரிஸ் பங்கொன்றின் விலை 2.00 ரூபாவால் (0.96%) குறைந்து 210.00 ரூபாவாக பதிவாகியிருந்தது.

இதேவேளை, செமானெக்ஸ் தனது இறுதி பங்கிலாபத்தை பங்கொன்றுக்கு 0.50 ரூபா வீதம் அறிவித்திருந்தது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .