2025 செப்டெம்பர் 22, திங்கட்கிழமை

நீதிமன்ற தீர்ப்பு மீது மேலதிக விளக்கம் கோரும் சிலோன் டொபாக்கோ கம்பனி

A.P.Mathan   / 2014 மே 26 , மு.ப. 08:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுகாதார அமைச்சின் மூலம் சட்டபூர்வமான புகையிலை தயாரிப்புகள் (பொதியிடல் மற்றும் எச்சரிக்கை படங்கள் பொறித்தல்) மீது வெளியிடப்பட்டிருந்த விதிமுறைகள் தொடர்பான, ரீட் ஆணை மீது வழங்கப்படவேண்டிய தீர்ப்பானது, இம்மாதத்தின் முற்பகுதியில் மேன்முறையீட்டு நீதிமன்றத்தால் வழங்கப்பட்டது.

மேன்முறையீட்டு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில், சுகாதார எச்சரிக்கை படங்கள் பொறிப்பது தொடர்பில், பொதியின் 50 - 60 சதவீதம்வரை உள்ளடக்கியதாக அமைந்திருக்க வேண்டும் என சுகாதார அமைச்சுக்கு உத்தரவிட்டிருந்தது. வர்த்தக நாமங்கள் மீது நுகர்வோர் மற்றும் உற்பத்தியாளர்களுக்கு காணப்படும் முக்கியத்துவத்தை கண்டறிந்து, மேன்முறையீட்டு நீதிமன்றம் அதனடிப்படையிலேயே இத் தீர்மானத்தை வழங்கியிருந்தது.

எனினும், இதற்கு மேலதிகமாக ஏனைய விதிமுறையின் கீழ் காணப்படும் தேவைப்பாடுகள் தொடர்பில் போதிய மற்றும் தெளிவான விளக்கங்கள் இத் தீர்மானத்தின் மூலம் வழங்கப்படவில்லை. பொறுப்புள்ள ஒரு கூட்டு நிறுவனம் என்ற வகையில், சிலோன் டொபாக்கோ கம்பனியானது, நாட்டில் நடைமுறையிலுள்ள சகல சட்டவிதிமுறைகளுக்கும் அமைவாக செயற்படுகிறது. இச் சந்தர்ப்பத்தில் ஒழுங்கு விதிமுறைகளின் எஞ்சிய தெளிவற்ற விடயங்கள் தொடர்பாக மேலதிக விளக்கங்களை உச்ச நீதிமன்றத்திடம் கோரும் நிலைக்கு கம்பனி தள்ளப்பட்டுள்ளது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X