2026 மே 02, சனிக்கிழமை

சமபோஷ வசந்த உதானய

A.P.Mathan   / 2014 ஜூன் 01 , மு.ப. 07:33 - 0     - {{hitsCtrl.values.hits}}


'தேசிய உற்பத்திகளை மிகக் குறைந்த விலையில் கொள்வனவு செய்வதற்கு குறிப்பிட்ட தரப்பினர் முயற்சிகள் மேற்கொள்ளும் இத் தருணத்தில், விவசாயிகளின் உற்பத்திகளுக்கு பெறுமதி சேர்க்கும் வகையில் CBL இன் துணை நிறுவனமான பிளென்டி ஃபூட்ஸ் நிறுவனம் முன்னெடுத்து வரும் செயற்பாடுகள் மிகவும் பாராட்டத்தக்கது. எமது பாடசாலை மாணவர்களின் பெற்றோர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கான உதவிகளை செய்து வருவதுடன், மாணவர்களின் கல்விக்கும் ஆதரவினை வழங்கி வருகிறது. அது மட்டுமன்றி, அவர்களது களைப்பை போக்கக்கூடிய இத்தகைய களிப்பூட்டும் நிகழ்வுகளை சமபோஷ முன்னெடுப்பதையிட்டு எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்' என 'சமபோஷ வசந்த உதானய' நிகழ்வு பற்றி பதுளை மீகாஹகிவுல தேசிய பாடசாலை அதிபர் எச்.எம்.செனரத் பண்டார கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தேசத்தின் போசாக்குக்கு மிகப்பெரிய பங்களிப்பை வழங்கும் விவசாயிகளை களிப்பூட்டும் வகையில் 'சமபோஷ வசந்த உதானய' புத்தாண்டு களியாட்ட நிகழ்வு தொடர்ந்து 7ஆவது ஆண்டாக அண்மையில் முன்னெடுக்கப்பட்டது. பதுளை மீகாஹகிவுல தேசிய பாடசாலை மைதானத்தில் இடம்பெற்ற இந் நிகழ்வில் மாவட்டத்தைச் சேர்ந்த மீகஹகிவுல, கன்தெகடிய மற்றும் ரிதிமாலியத்த ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளில் வாழும் விவசாயக் குடும்பங்களின் அங்கத்தவர்கள் மற்றும் கிராமவாசிகள் 6000 இற்கும் மேற்பட்டோர் பங்குபற்றியிருந்தனர்.

இந்த புத்தாண்டு களியாட்ட நிகழ்வானது, ஊடீடு நிறுவனத்தின் துணை நிறுவனமான பிளென்டி ஃபூட்ஸ் நிறுவனத்தின் பிரபல வர்த்தகநாமமான 'சமபோஷ' அதன் பிரதான வழங்குனரான விவசாயிகளுக்கான 'கொவி பவுல'(விவசாய குடும்பம்) திட்டத்தின் ஓர் அங்கமான 'கொவி சதுட்ட' செயற்திட்டத்தின் கீழ் ஆண்டுதோறும் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. இம்முறை பாரம்பரிய விளையாட்டுகள் உட்பட ஆண், பெண் இருபாலருக்குமான கரப்பந்தாட்டம், கிராமத்தை சுற்றி ஓடுதல், சைக்கிள் ஓட்டப்போட்டி உள்ளடங்கலாக 42 விளையாட்டு போட்டிகள் நடைபெற்றன. இப் புத்தாண்டு களியாட்ட நிகழ்வில் அவுறுது குமரிய மற்றும் சிங்கிதி அவுறுது குமரிய மற்றும் குமரா தெரிவு செய்யும் நிகழ்வு அனைவரையும் கவரும் வகையில் அமைந்திருந்தது. மேலும் 'சிறந்த விவசாயி' ஐ தேர்ந்தெடுக்கும் நிகழ்வு அனைவரையும் ஈர்த்திருந்தது.

மீகாஹகிவுல, கன்தெகடிய மற்றும் ரிதிமாலியத்த பிரதேச விவசாயிகள், பதுளை மீகாஹகிவுல தேசிய பாடசாலை அதிபர் எச்.எம்.செனரத் பண்டார, விளையாட்டு பொறுப்பு பேராசிரியர்.மனோஜ் சில்வா, பிரதேச சபை தலைவர் உள்ளிட்ட நிர்வாகம், பிரதேச செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகள், கன்தெகடிய பொலிஸ் அத்தியேட்சகர் உள்ளிட்ட பொலீஸ் நிலையத்தின் ஏனைய அதிகாரிகளின் ஒத்துழைப்புடன் இந் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது.

விவசாய மக்களின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்தும் வகையில் CBL குழுமத்தின் துணை நிறுவனமான பிளென்டி ஃபூட்ஸ் நிறுவனத்தின் 'கொவி பவுல'(விவசாயக் குடும்பம்) திட்டத்தின் கீழ் 4 செயற்றிட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. இத் திட்டங்களுள் விவசாயத்துறையின் அபிவிருத்தி மற்றும் வழிகாட்டலுக்கு 'கொவி தெனும' செயற்றிட்டம், அசம்பாவித நிலைமைகளின் போது விவசாயிகளுக்கு கைகொடுக்கும் வகையில் 'கொவி சரண' செயற்றிட்டம், விவசாயிகள் மற்றும் அவர்களின் குடும்ப அங்கத்தவர்களின் குதூகலத்திற்காக 'கொவி சதுட்ட' செயற்றிட்டம், சமய கலாச்சார அபிவிருத்திகளுக்கு 'கொவி அரண'; திட்டம் போன்றன அடங்குகின்றன.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .