2026 மே 02, சனிக்கிழமை

ஸ்ரீலங்கன் விமான சேவையின் பயணச்சீட்டு முகவர் அலுவலகம் மட்டக்களப்பில் திறப்பு

Menaka Mookandi   / 2014 ஜூன் 11 , மு.ப. 06:16 - 0     - {{hitsCtrl.values.hits}}


-தேவ அச்சுதன், எம்.எஸ்.
எம்.நூர்தீன்,எஸ். பாக்கியநாதன்

கிழக்கு மாகாணத்தில் அதிகரித்துவரும் சுற்றுலாப்பயணிகளின் நன்மை கருதி ஸ்ரீலங்கன் விமான சேவையின் பயணச்சீட்டு முகவர் அலுவலகம் மட்டக்களப்பில் இன்று புதன்கிழமை (11) காலை திறந்துவைக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் முன்னணி விமானப் பயண முகவரான த ரவலர் குளோபல் நிறுவனத்தின் ஏற்பாட்டில் இந்த ஸ்ரீலங்கன் விமான சேவையின் பயணச்சீட்டு முகவர் அலுவலகம் திருகோணமலை வீதியில் திறந்துவைக்கப்பட்டது.

த ரவலர் குளோபல் நிறுவனத்தின் தலைவர் ரிஸ்மி றியாழ் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் சிரேஸ்ட அமைச்சர் எச்.எம்.பௌசி பிரதம அதிதியாக கலந்துகொண்டதுடன் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் அமீர் அலி, ஸ்ரீலங்கன் விமான சேவையின் தலைவர் நிசாந்த விக்ரமசிங்க, ஸ்ரீலங்கன் விமான சேவையின் சர்வதேச விற்பனை பிரிவு தலைர் லால் பெரேரா, ஸ்ரீலங்கன் விமான சேவையின் பிரதான சந்மைப்படுத்தல் அதிகாரி ஜி.ரி.ஜயசீலன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இதுவரை காலமும் கொழும்பிலேயே ஸ்ரீலங்கன் விமான சேவையின் விமானப் பயணச்சீட்டுகளை பெறமுடிந்த நிலையில் இனிவரும் காலங்களில் அவற்றினை மட்டக்களப்பிலேயே பெற்றுக்கொள்ளும் வகையில் இந்த முகவர் நிலையம் திறந்துவைக்கப்பட்டுள்ளது.

சாதகமான சுற்றுலா வாய்ப்புகளுடனும் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டுவரும் அபிவிருத்தி திட்டங்களினுடாகவும் வளர்ச்சியடைந்துவரும் கிழக்கு மாகாணம் வர்த்தக ரீதியிலும் முக்கியத்துவம் வாய்ந்ததாகவுள்ளது.

சர்வதேச விமான சேவைகள் கூட்டமைப்புடன் இணைந்துள்ள த ரவலர் குளோபல் நிறுவனத்தினர் 150 நாடுகளில் 1000க்கும் மேற்பட்ட விமானத்தளங்களுடன் இணைப்புகளைக் கொண்டிருப்பதனால் இந்த சேவையினை பயணிகள் சிறந்த முறையில் பெற்றுக்கொள்ள முடியும் என இங்கு கருத்து தெரிவிக்கப்பட்டது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .