2025 செப்டெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

சிறியளவிலான காப்புறுதி நிறுவனங்களை ஒன்றிணைய இலங்கை ஊக்குவிக்கும்: கப்ரால்

A.P.Mathan   / 2014 ஜூன் 18 , பி.ப. 04:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையில் சிறிய மட்டத்தில் இயங்கும் காப்புறுதி நிறுவனங்கள் ஒன்றிணைந்து, பாரிய காப்புறுதி நிறுவனங்களாக தம்மை தரமுயர்த்திக் கொள்வதன் மூலம் வாடிக்கையாளர்கள் மத்தியில் நம்பிக்கை மேம்படுத்திக் கொள்ள முடியும் என்பதுடன், நீண்ட கால அடிப்படையில் அந்நிறுவனங்களின் வர்த்தக செயற்பாடுகளையும் உறுதி செய்து கொள்ள முடியும். இதனை இலங்கை பெருமளவில் ஊக்குவிக்கும் என இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால் தெரிவித்தார்.

”உறுதியான, பெரிய காப்புறுதி நிறுவனங்களை பார்வையிட நான் விரும்புகிறேன். மக்கள் மிகவும் அவதானமாக உள்ளனர். காப்புறுதி நிறுவனமொன்றை தெரிவு செய்கையில் அவர்கள் அதிகளவு சிந்திக்கின்றனர். அவர்கள் ஓய்வூதிய திட்டங்களில் மட்டும் கவனத்தை செலுத்தாமல், தமக்கு சேவைகளை வழங்கும் நிறுவனம் மற்றும் நபர் குறித்தும் தமது கவனத்தை செலுத்துவார்கள்” என்றார்.

”அடுத்த 30 ஆண்டுகளில் இலங்கையில் ஓய்வூதியம் பெறும் வயதை அடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் காணப்படும். இவர்கள் தான் இன்றைய கால கட்டத்தில் காப்புறுதி நிறுவனங்களுக்கு காணப்படும் சிறந்த வாடிக்கையாளர்கள். இவர்களை அணுகுவதற்காக காப்புறுதி நிறுவனங்கள் தம்மை சிறந்த முறையில் தயார்ப்படுத்திக் கொள்ள வேண்டும். சிறியளவில் காணப்படும் காப்புறுதி நிறுவனங்கள் தமது செயற்பாடுகளை முன்னெடுப்பதில் சவால்களை எதிர்கொள்கின்றன. இந்நிலையில் அரசாங்கம், இந்த சிறியளவிலான காப்புறுதி நிறுவனங்களை ஒன்றிணையுமாறு பரிந்துரைக்கிறது” என்றார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X