2025 செப்டெம்பர் 22, திங்கட்கிழமை

கடந்த வார பங்குச்சந்தை நிலைவரம்

A.P.Mathan   / 2014 ஜூன் 23 , மு.ப. 07:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

திங்கட்கிழமை கொடுக்கல் வாங்கல்களை நேர் பெறுமதியில் ஆரம்பித்திருந்த கொழும்பு பங்குச்சந்தை, உயர் வருமானங்களை பதிவு செய்திருந்தது. திங்கட்கிழமை அ.ப.வி.சு 6.88 புள்ளிகள் அதிகரித்து நிறைவடைந்திருந்தது. S&P SL 20 சுட்டி 15.64 புள்ளிகளால் அதிகரித்திருந்தது. புரள்வு பெறுமதி 957 மில்லியன் ரூபாவாக பதிவாகியிருந்தது. சொஃப்ட்லொஜிக் ஹோல்டிங்ஸ் அதிகளவு பங்களிப்பை வழங்கியிருந்தது.

செவ்வாயன்று கொடுக்கல் வாங்கல்கள் எல்லையளவு உயர் பெறுமதிகளை பதிவு செய்திருந்தன. அ.ப.வி.சு 0.31 புள்ளிகள் உயர்ந்திருந்ததுடன், S&P SL 20 சுட்டி 0.40 புள்ளிகால் அதிகரித்திருந்தது. புரள்வு பெறுமதியாக 1.1 பில்லியன் ரூபா பதிவாகியிருந்தது. ஹேலீஸ் MGT உயர்ந்த பங்களிப்பை வழங்கியிருந்தது.

புதன்கிழமை கொடுக்கல் வாங்கல்கள் சரிவை பதிவு செய்திருந்தன. அ.ப.வி.சு 26.80 புள்ளிகள் சரிவடைந்திருந்தது. S&P SL 20 சுட்டி 21.58 புள்ளிகள் சரிவடைந்திருந்தது. புரள்வு பெறுமதியாக 714 மில்லியன் ரூபாவாக பதிவாகியிருந்தது. களனி டயர்ஸ், செரன்டிப் ஹோட்டல்ஸ், கொமர்ஷல் வங்கி மற்றும் செலிங்கோ இன்சூரன்ஸ் போன்ற பங்குகள் இதில் பங்களிப்பை வழங்கியிருந்தன.

வியாழக்கிழமை கொடுக்கல் வாங்கல்கள் தொடர்ந்தும் சரிவை பதிவு செய்திருந்தன. அ.ப.வி.சு. 4.41 புள்ளிகள் குறைந்திருந்தது. S&P SL 20 சுட்டி 8.82 புள்ளிகள் குறைந்திருந்தது. புரள்வு பெறுமதி 684 மில்லியன் ரூபா பதிவாகியிருந்தது. ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் பங்குகள் அதிகளவு பங்களிப்பை வழங்கியிருந்தன.

மூன்றாவது நாளாகவும் தொடர்ந்து சரிவை பதிவு செய்திருந்த கொழும்பு பங்குச்சந்தை வார இறுதி நாள் கொடுக்கல் வாங்கல்களின் போது, அ.ப.வி.சு 10.75 புள்ளிகள் குறைந்து 6302.45 புள்ளிகளாகவும், S&P SL 20 சுட்டி 11.81 புள்ளிகள் குறைந்து 3478.86 புள்ளிகளாகவும் பதிவாகியிருந்தது. புரள்வு பெறுமதி 1.2 பில்லியன் ரூபாவாக பதிவாகியிருந்தது. அமானா டகாஃபுல், களனி டயர்ஸ், கொமர்ஷல் வங்கி, வலிபல் வன் மற்றும் லங்கா வோல்டைல்ஸ் ஆகியன குறித்த பங்களிப்பை வழங்கியிருந்தன.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X