2025 செப்டெம்பர் 22, திங்கட்கிழமை

'இசை திட்டம்' நிகழ்விற்கு ஜனசக்தி அனுசரணை

A.P.Mathan   / 2014 ஜூன் 23 , பி.ப. 03:13 - 0     - {{hitsCtrl.values.hits}}


ஜனசக்தி நிறுவனம், இனங்களுக்கிடையே இசை மூலம் உறவுப் பாலத்தை கட்டியெழுப்பும் வகையில், இம்மாதம் 04 ஆம் திகதி மலியதேவி பெண்கள் பாடசாலை மண்டபத்தில் இடம்பெற்ற 200 இற்கும் மேற்பட்ட பிள்ளைகள் பங்குபற்றிய விசேட இசை நிகழ்ச்சிக்கு அனுசரணை வழங்கியிருந்தது.
 
இதன் போது இசை திட்டத்தின் மூலம் ஒழுங்கு செய்யப்பட்ட 'Unite 2014' இற்கு முல்லைத்தீவைச் சேர்ந்த 2 பாடசாலைகள் மற்றும் குருநாகலைச் சேர்ந்த 3 பாடசாலைகள் ஒன்றாக இணைந்து பாரம்பரிய இசை கச்சேரியை வழங்கியிருந்தனர். இந்த இரு பிரதேசங்களையும் சேர்ந்த பிள்ளைகள் ஒன்றுசேர்ந்து வழங்கிய ஆர்கெஸ்ட்ராஇ யுத்தத்தின் பின்னரான இலங்கையில் இன ஒற்றுமையை தெளிவுபடுத்தும் முக்கிய அடையாளமாக விளங்கிற்று.
 
வெனிசூலா, El Sistema இல் நடைபெற்ற பகிரங்க நிதி இசை கல்வி திட்டத்தினால் ஈர்க்கப்பட்டு, இலங்கையின் வடக்கு மற்றும்; கிழக்கு ஆகியவற்றுக்கிடையே இசை சமூகங்களை கட்டியெழுப்புவதே இந்த இசை திட்டத்தின் நோக்கமாகும். 
 
El Sistema இனைப் போல, இந்த இசை திட்டத்தின் மூலம் குழந்தைகளின் வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்துவதும் மற்றும் இசையின் குணப்படுத்தும் திறனூடாக சமூகங்களை மேம்படுத்துவதுமே குறிக்கோளாகும். இதனூடாக, குழந்தைகளுக்கு முழுமையான, சிகிச்சை திட்டம் உண்டென்பதை உறுதிசெய்ய முயற்சிக்கிறது.
 
வௌ;வேறு பிரதேசங்களைச் சேர்ந்த பாடசாலை மாணவர்களுக்கு இடையே இணைப்பை எளிதாக்கும் வகையில், ஆங்கிலத்தில் ஒழுங்கு செய்யப்பட்ட விசேட பாடசாலை கழகங்கள் இடம்பெற்ற பின்னரே இந்த திட்டம் முன்னெடுக்கப்பட்டது. இந்த திட்டமானது இனங்களுக்கிடையே நல்லிணக்கம் மற்றும் புனரமைப்பை நீண்டகாலமாக, நிலையாக வழங்கும் குறிக்கோளுடன் மூன்று ஆண்டுகளாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
 
இந்த திட்டத்துடன் தற்போது குருநாகல் மற்றும் துணுக்காய் போன்ற பிரதேசங்களிலுள்ள ஆறு பாடசாலைகள் இணைந்து கொண்டுள்ளன. ரெக்கோடர் ஊடாக குழந்தைகள் இசை அடிப்படைகளை கற்றுக்கொள்கின்றனர். அவர்கள் விரைவாக வயலின், மெலோடிகா மற்றும் தாள கருவிகளில் நிபுணத்துவத்தை நோக்கி கொண்டு செல்ல எதிர்பார்க்கப்படுகிறது. இந்த திட்டமானது அதன் பரந்த ஆர்கெஸ்ட்ரா மற்றும் உருப்படிகள் காரணமாக மிகப்பெரிய மேற்கத்திய இசைகளை உள்ளடக்கியுள்ளது. இந்த திட்டமானது, குழந்தைகளுக்கு அவர்களது தன்னம்பிக்கை மற்றும் சுய மதிப்பை மேம்படுத்திக் கொள்வதற்காக ஊக்குவிக்கப்படுகிறது.
 
நாட்டின் வடக்கு மற்றும் கிழக்கு ஆகியவற்றுக்கிடையே சமரசத்தை ஏற்படுத்தும் இந்த இசை திட்டத்திற்கான எமது அனுசரணையை பெருமையுடன் அறிவித்துக் கொள்கின்றோம். ஜனசக்தி ஆகிய நாம், தேசத்தின் இளைஞர்கள் மத்தியில் தன்னம்பிக்கையை ஊக்குவிப்பதை எமது குறிக்கோளாகக் கொண்டுள்ளோம். இதுவே எமது புதிய சமூக நலனுக்கான திட்டமாகும்' என ஜனசக்தி காப்புறுதி நிறுவனத்தின் விற்பனை மற்றும் சந்தைப்படுத்தல் பிரிவின் பொது முகாமையாளர் செஹாரா டி சில்வா தெரிவித்தார். 
 
'இந்த திட்டத்திற்கு அனுசரணை வழங்குவதற்கான விசேட காரணம் அதன் ஆழம் மற்றும் கருத்து ஆகும். போருக்கு பின்னரான சூழலில், இத்தகைய திட்டங்கள் ஊடாக சமூகங்களிடையே உறவுப்பாலத்தை கட்டியெழுப்பிக் கொள்வது மிக முக்கியமாகும். இந்த முயற்சிக்கு எம்மால் இயன்ற பங்களிப்பை வழங்க முடியும் என எதிர்பார்க்கின்றோம். இந்த இசை திட்டம் வாழ்வை மாற்றுவதற்கான ஆற்றலை கொண்டுள்ளமையினாலேயே, அதன் ஓர் அங்கமாக உள்ளதையிட்டு மிகவும் பெருமிதத்தில் உள்ளோம்' என மேலும் அவர் தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .