
சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் உற்பத்தி செயற்பாடுகளை முன்னெடுத்து வரும் சமபோஷ உற்பத்தி செய்யும் CBL நிறுவனத்தின் துணை நிறுவனம் பிளென்டி ஃபூட்ஸ் நிறுவனம் பசுமை விருதினை வென்றுள்ளது. உற்பத்தி நடவடிக்கைகளின் போது இயற்கையை பாதுகாப்பதற்கு வழங்கிய பங்களிப்பை கௌரவிக்கும் வகையில் இம்முறை பசுமை விருது விழாவில் 'உணவு மற்றும் குடிபானம்' பிரிவில் வெண்கல விருதை சமபோஷ தனதாக்கிக் கொண்டுள்ளது.
'பசுமையான தேசம் - அழகிய சுற்றுச்சூழல்' எனும் தொனிப்பொருளின் கீழ் சூழலுக்கு உகந்த முறையில் செயற்பாடுகளை முன்னெடுக்கும் தொழில்கள், நிறுவனங்கள், அமைப்புகள், சேவைகள் மற்றும் பாடசாலை ஆகியவற்றை கௌரவிக்கும் வகையிலும், ஊக்குவிக்கும் வகையிலும் மத்திய சுற்றாடல் அதிகாரசபையால் ஆண்டுதோறும் தேசிய பசுமை விருது வழங்கல் விழா நடத்தப்படுகிறது. இவ் விழாவானது அண்மையில் அதிமேதகு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் தலைமையின் கீழ் கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் மிக கோலாகலமாக இடம்பெற்றது.
இதன்போது CBL பிளென்டி ஃபூட்ஸ் நிறுவனத்தின் பல்லேகல பிரதேசத்தில் அமைந்துள்ள தொழிற்சாலையின் உற்பத்தி செயற்பாடுகளின் சூழலுக்கு பாதுகாப்புக்கு வழங்கும் பங்களிப்பு மற்றும் எரிசக்தி சிக்கன செயற்பாடுகள் ஆகியன விருது தெரிவின் போது கவனத்தில் கொள்ளப்பட்டன. விசேடமாக உற்பத்தி செயற்பாடுகளுக்கு பயன்படுத்தும் மூலப்பொருட்களை பயிரிடுதல் முதல் அறுவடை செய்யும் வரையிலும், பின்னர் உற்பத்தி செயற்பாடுகள் வரை சுற்றுச்சூழலுக்கு தீங்கு ஏற்படாத முறையில் முன்னெடுத்து செல்வதில் CBL பிளென்டி ஃபூட்ஸ் நிறுவனம் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகின்றது. பயிர்ச்செய்கையின் போது உரங்களை பயன்படுத்துவதை தவிர்த்து, இயற்கை உரம் பயன்படுத்த விவசாயிகளை ஊக்குவித்து, அதிக அறுவடையை பெறுவதற்கான இயற்கை வழிமுறைகள் குறித்து கவனம் செலுத்துகிறது.
உற்பத்தி செயற்பாடுகளை சூழல் பாதுகாப்பான முறையில் முன்னெடுத்து செல்வதே இந் நிறுவனத்தின் முக்கிய குறிக்கோளாகும். எந்நேரமும் நிர்வாக சபையினரை நாம் தெளிவுப்படுத்தி வருவதுடன், அவர்களின் பங்களிப்புடன் சுற்றுச்சூழலுக்கு தீங்கிழைக்காத தொழிற்சாலைகளை நிர்மாணிப்பதற்கு CBLபிளென்டி ஃபூட்ஸ் நிறுவனத்தினால் முடிந்துள்ளது. உற்பத்தி செயற்பாடுகளின் போது வெளியேற்றப்படும் கழிவு நீரினை சுத்தப்படுத்தி தொழிற்சாலை மற்றும் அதன் தோட்டத்தின் செயற்பாடுகளுக்கு பயன்படுத்தப்படுவதுடன், தொழிற்சாலையிலிருந்து எந்தவொரு சந்தர்ப்பத்திலும் சூழலுக்கு புகையோ அல்லது ஒலியோ எழுப்பப்படுவதில்லை.
இந்த விருது குறித்து பிளென்டி ஃபூட்ஸ் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று பணிப்பாளர் ஷம்மி கருணாரத்ன கருத்து தெரிவிக்கையில், 'வர்த்தக நோக்கினை தவிர்த்து, சமூகத்திற்கு மிகவும் ஏற்றதும், சிறந்தவற்றையும் வழங்கும் நோக்கில் விசேட மாற்றத்தை உண்டாக்குவதே எமது அபிலாஷையாகும். விவசாயி முதற்கொண்டு உற்பத்தி வரை பங்களிப்பு வழங்கும் அனைவரது மனதிலும் சுற்றுச்சூழலை பாதுகாப்பது தொடர்பான ஓர் உணர்வை ஏற்படுத்துவதே எமது முயற்சியாகும். இதனை வெற்றிக்கொள்வதற்கு எமக்கு 'கொவி பவுல' செயற்திட்டம் பெரும் உறுதுணையாக இருந்தது' என்றார்.
அரிசி, சோயா, பயறு மற்றும் சோளம் ஆகிய அத்தியாவசிய தானியங்களின் போசாக்கு மற்றும் விற்றமின்கள் மற்றும் கனியுப்புகள் 9 இனை ஒன்றிணைத்து அதன் சுவை மற்றும் நிறம் மாறாமல் சமபோஷ உற்பத்தி செய்யப்படுகிறது. சமபோஷ உற்பத்தி செயற்பாடுகளின் உயர்தரம் மற்றும் பாதுகாப்புக்கு SLS-1036, ISO-22000, HACCP மற்றும் GMP போன்ற சர்வதேச தரச் சான்றிதழ்கள் கிடைத்துள்ளன.