2025 செப்டெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

பைசல் சாலிக்கு அமானா வங்கியின் பிரியாவிடை

A.P.Mathan   / 2014 ஜூலை 07 , பி.ப. 04:18 - 0     - {{hitsCtrl.values.hits}}


அண்மையில் அமானா வங்கியின் முகாமைத்துவப் பணிப்பாளர் / பிரதம நிறைவேற்று அதிகாரியான பைசல் சாலி அவர்கள் தனது பதவியில் இருந்து ஓய்வு பெற்றார். பிரத்தியேகமான ஒரு நிதியியல் எண்ணக்கருவை நடைமுறைப்படுத்தி வந்த நிதி நிறுவனமொன்றின் பொறுப்பை ஏற்று உத்தரவுபெற்ற வர்த்தக வங்கியொன்றாக மாற்றியமைத்து, இந்த துறைக்காக சிறந்த சேவையாற்றிய பெறுமை இவரைச் சேறும்.

திரு. சாலி அவர்கள் 2004ம் ஆண்டில் வரையறுக்கப்பட்ட அமானா முதலீட்டு நிறுவனத்தின் முகாமைப் பணிப்பாளராக இணைந்து கொண்டார். வங்கிச் சேவை அனுமதிப் பத்திரத்தை பெற்று அமானா வங்கியை 2011ம் ஆண்டில் ஆரம்பிப்பதற்காக அவர் நிறுவனத்தை வழிநடத்தினார். இஸ்லாமிய வங்கித் துறைக்கு துணைபுரியக்கூடிய வகையில் நாட்டின் ஒழுங்குவிதி, சட்டம் மற்றும் நிதிசார் சட்டதிட்டங்களில் தகுந்த மாற்றங்களை ஏற்படுத்த உதவுவதற்காக இவர் பிரதான பங்களிப்பை வழங்கினார். வங்கியில் உயர் பதவியில் இருந்த காலத்தில் சாலி அவர்கள், வங்கியின் கிளை வலையமைப்பை விரிவுபடுத்துவதிலும், புதிய உற்பத்திகள் மற்றும் சௌகரிய சேவைகளை அறிமுகப்படுத்துவதிலும் வெற்றி கண்டார். இதன் விளைவாக, வாடிக்கையாளர் முன்னேற்றத்தில் மூன்று இலக்க பெறுமான வளர்ச்சியையும், வாடிக்கையாளர் வைப்புக்களில் ஒரு ஆரோக்கியமான வளர்ச்சியையும் வங்கியால் அடைந்துக்கொள்ள முடிந்தது. ஒழுங்குபடுத்தல் தேவைகளுக்கும், மிகச் சிறந்த துறைசார் நடைமுறைகளுக்கும் இணைவாக நல்லாட்சியையும், இணக்கமான தரநியமங்களையும் உருவாக்குவதில் முக்கிய இடத்தை வகித்தார்.

வங்கியின் நிதி அதிகரிப்பு செயன்முறையிலும், கொழும்பு பங்கு பரிவர்த்தனை நிலைய பட்டியலில் இணைவதிலும் ஒரு முக்கிய பங்களிப்பை திரு. சாலி வழங்கியுள்ளார். மேலும், இலங்கை வங்கிகள் சங்கத்தின் ஆதரவின் கீழ் இஸ்லாமிய வங்கித் துறையை உருவாக்குவது தொடர்பில் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வந்த ஒரு குழுவிற்கும் அவர் தலைமை வகித்துள்ளார். இவரின் தலைமைத்துவத்தின் கீழ் இலங்கையின் மிகச் சிறந்த இஸ்லாமிய வங்கி (IFN விருது),  உலகில் மிகச் சிறப்பாக முன்னேறி வரும் இஸ்லாமிய நிதி நிறுவனம் (குளோபல் பைனான்ஸ் சஞ்சிகை) என பல உள்நாட்டு மற்றும் சர்வதேச விருதுகளை பெற்றுள்ளது. இவர் அமானா வங்கியையும், உள்நாட்டு நிதித் துறையையும் பிரதிநிதித்துவப்படுத்தி பல சர்வதேச மற்றும் உள்நாட்டு மாநாடுகளிலும்;, பொது மன்றங்களிலும் இஸ்லாமிய நிதித்துறை பற்றி உரை நிகழ்த்தியுள்ளார்.

தனது பதவி விலகலைத் தொடர்ந்து சாலி அவர்கள் இலங்கையிலும், வெளிநாடுகளிலும் பாரம்பரிய, அபிவிருத்தி மற்றும் இஸ்லாமிய வங்கித் துறையில் சுமார் 4 தசாப்த கால அர்ப்பணிப்பு சேவையை நிறைவு செய்கின்றார். இவர் கிரின்லேய்ஸ் வங்கி, ANZ வங்கி, தேசிய அபிவிருத்தி வங்கி ஆகியவற்றில் சிரேஷ;ட முகாமைத்துவப் பதவிகளை வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

சாலி அவர்களின் சாதனைகளை பாராட்டுவதற்காக அமானா வங்கி அண்மையில் ஒரு பிரியாவிடை வைபவத்தை நடத்தியது. திரு. சாலி அவர்கள் ஓய்வு பெறுவதைப் பற்றி பேசிய வங்கியின் தலைவர் திரு. ஒஸ்மான் காசிம் அவர்கள் ' பைசலின் 10 வருட கால அர்ப்பணிப்பும், தலைமைத்துவமும் முதலாவது இஸ்லாமிய வங்கியை உருவாக்குவதற்கும், இலங்கையில் இஸ்லாமிய நிதித் துறையின் வளர்ச்சியை ஊக்குவிப்பதற்கும் துணைபுரிந்துள்ளன. வங்கியை இன்று இருக்கும் இந்த நிலைமைக்கு கொண்டு வருவதற்காக பைசல் வழங்கிய மகோன்னதர சேவைகளுக்கு  அமானா வங்கியின் அனைவர் சார்பிலும், நான் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். பல வருடங்களாக திரு. பைசல், வங்கி எதிர்கொள்ள நேரிட்ட பல்வேறு சவால்களை எதிர்கொண்டு, வங்கி சிறந்த பிரதிபலன்களை அடைந்து கொள்வதற்கு துணைபுரிந்தார். அவர் வாழ்க்கையில் ஒரு புதிய அத்தியாயத்தை ஆரம்பித்திருப்பதால், ஒரு சந்தோஷமான பணி ஓய்விற்கு நான் வாழ்த்துகிறேன்.

வங்கியின் பிரதம நிறைவேற்று அதிகாரியாக முஹம்மத் அஸ்மீர் அவர்கள் தற்போது நியமிக்கப்பட்டுள்ளார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X