2025 செப்டெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

பங்குச்சந்தை, தங்கம் விலை மற்றும் நாணயமாற்று வீத நிலைவரங்கள்

Kanagaraj   / 2014 ஜூலை 14 , பி.ப. 04:08 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ச.சேகர்


6500 எனும் புள்ளிகளை 2011 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதத்தின் பின்னர் கடந்த வாரம் செவ்வாய்க்கிழமை பதிவு செய்திருந்தது. இதனைத் தொடர்ந்து புதன்கிழமை இந்த பெறுமதி 6600 எனும் நிலைக்கு உயர்ந்திருந்தது. கொமர்ஷல் வங்கி, ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ், கார்கில்ஸ், லயன் பிரெவரி, நெஸ்லே, ஹேலீஸ் போன்ற நிறுவனங்களின் பங்குகள் இந்த உயர்வான பெறுமதிக்கு பங்களிப்பை செலுத்தியிருந்தன. முதல் நான்கு தினங்களும் உயர்வான பெறுமதிகளை பதிவு செய்த பங்குச்சந்தை, வெள்ளிக்கிழமை சரிவடைந்து நிறைவடைந்திருந்தது. வெள்ளிக்கிழமை நடவடிக்கைகள் நிறைவடைந்த போது அனைத்து பங்கு விலைச் சுட்டெண் 6,661.40 ஆகவும், S&P ஸ்ரீலங்கா 20 சுட்டி 3708.16 ஆகவும் பதிவாகியிருந்தன.

ஜூலை 07ஆம் திகதியுடன் ஆரம்பமான கடந்த வாரத்தின் இறுதியில் மொத்த பங்கு புரள்வு பெறுமதியாக ரூ. 10,000,695,296 அமைந்திருந்தது. கடந்த வாரம் மொத்தமாக 66,341 பங்கு கொடுக்கல் வாங்கல்கள் இடம்பெற்றன. இதில் உள்நாட்டு கொடுக்கல் வாங்கல்கள் 64,058 ஆகவும் வெளிநாட்டு கொடுக்கல் வாங்கல்கள் 2,283 ஆகவும் பதிவாகியிருந்தன.

திங்கட்கிழமை
வாரத்தின் செயற்பாடுகள் லயன் பிரெவரி, ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் மற்றும் டயலொக் ஆக்சியாடா ஆகிய பங்குகள் மீதான விலை உயர்வுகள் காரணமாக உயர் பெறுமதிகளுடன் ஆரம்பமாகியிருந்தது. கார்கில்ஸ், கொமர்ஷல் வங்கி, டயலொக் அக்சியாடா, டிஸ்டிலரீஸ் மற்றும் ஹற்றன் நஷனல் வங்கி ஆகிய பங்குகள் புரள்வு பெறுமதியின் 32 வீத பங்களிப்பை செலுத்தியிருந்தன. பிசி பார்மா, பிசிஎச் ஹோல்டிங்ஸ் ஆகிய பங்குகள் மீது கலப்பு ஈடுபாடு பதிவாகியிருந்தது. சிலோன் கிரெய்ன் எலிவேட்டர்ஸ் பங்குகள் மீது சிறியளவிலான முதலீட்டாளர்கள் ஆர்வம் செலுத்தியிருந்தனர்.

செவ்வாய்க்கிழமை
நிறுவனசார் மற்றும் உயர் நிகர பெறுமதி வாய்ந்த முதலீட்டாளர்களின் மூலம் பதிவாகியிருந்த சந்திப்புகளினால் புரள்வு பெறுமதி உயர்வடைந்திருந்தது. டிஸ்டிலரீஸ், நெஸ்லே, ஹேலீஸ் மற்றும் கொமர்ஷல் வங்கி ஆகிய பங்குகள் உயர் பெறுமதிகளை பதிவு செய்திருந்தன. இதன் காரணமாக புரள்வு பெறுமதி 1.7 பில்லியன் ரூபாவை கடந்திருந்தது. இதேவேளை, அனைத்து பங்கு விலைச் சுட்டெண் 6500 புள்ளிகளைக் கடந்து நிறைவடைந்திருந்தது. சுமார் 12 மாதங்களின் பின்னர் இந்த உயர் பெறுமதி பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது. பிசி பார்மா, பிசிஎச் ஹோல்டிங்ஸ் மற்றும் டெஸ் அக்ரோ ஆகிய பங்குகளின் மீது சிறியளவிலான முதலீட்டாளர்கள் அதிக ஆர்வம் செலுத்தியிருந்தனர். வெளிநாட்டவர்கள் செவ்ரொன் லுப்ரிகன்ட்ஸ் மற்றும் ஹற்றன் நஷனல் வங்கி ஆகிய பங்குகள் மீது அதிகளவு ஈடுபாட்டை காண்பித்திருந்தனர்.

புதன்கிழமை
சுட்டிகள் தொடர்ந்தும் உயர்வான பெறுமதிகளை பதிவு செய்திருந்தன. அபவிசு 6600 புள்ளிகளைக் கடந்திருந்தது. உயர் நிகர பெறுமதி வாய்ந்த நிறுவனசார் ஈடுபாடுகள் பான் ஏசியா வங்கி, டோக்கியோ சீமெந்து வாக்குரிமையற்ற பங்குகள், னுகுஊஊ வங்கி, செலான் வங்கி வாக்குரிமையற்ற பங்குகள், ஹேமாஸ் ஹோல்டிங்ஸ் மற்றும் லங்கா ஹொஸ்பிட்டல்ஸ் மற்றும் எஃவ்எல்சி ஹோல்டிங்ஸ் ஆகிய பங்குகள் மீது பதிவாகியிருந்தன. இவை புரள்வு பெறுமதியை 2.8 பில்லியனை விட உயர்வாக பதிவு செய்ய ஏதுவாக அமைந்திருந்தன. அடம் இன்வெஸ்ட்மன்ட்ஸ் அன்ட் எஃவ்எல்சி ஹோல்டிங்ஸ் ஆகிய பங்குகள் மீது சிறியளவிலான முதலீட்டாளர்களின் ஈடுபாடு பதிவாகியிருந்தது. ஹேமாஸ் ஹோல்டிங்ஸ் மற்றும் அக்சஸ் என்ஜினியரிங் பங்குகள் மீது கலப்பு ஈடுபாடு பதிவாகியிருந்தது. வெளிநாட்டவர்கள் நிகர விற்பனையாளர்களாக பதிவாகியிருந்தனர்.

வியாழக்கிழமை
அபவிசு சுமார் 55 புள்ளிகள் வளர்ச்சியடைவதுடன் நிறைவடைந்திருந்தது. இதில் சிலோன் டொபாக்கோ கம்பனி, லயன் பிரெவரி மற்றும் கார்சன் கம்பர்பட்ச் ஆகிய நிறுவனங்கள் பங்களிப்பை வழங்கியிருந்தன. நிறுவனசார் மற்றும் உயர் நிகர பெறுமதி வாய்ந்த ஈடுபாடு ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ், நெஸ்லே லங்கா, ஹேலீஸ், கொமர்ஷல் வங்கி மற்றும் கொலம்போ ஃபோர்ட் லான்ட் அன்ட் பில்டிங் ஆகிய பங்குகள் மீது பதிவாகியிருந்தன. இதேவேளை சிலோன் கிரெய்ன் எலிவேட்டர்ஸ், கொலம்போ லான்ட் அன்ட் டிவலப்மன்ட் மற்றும் சி ரி லான்ட் டிவலப்மன்ட் ஆகிய பங்குகள் மீது சிறியளவிலான முதலீட்டாளர்கள் ஆர்வம் செலுத்தியிருந்தனர்.

வெள்ளிக்கிழமை
கார்சன் கம்பர்பட்ச், கொமர்ஷல் வங்கி மற்றும் ஹற்றன் நஷனல் வங்கி ஆகிய பங்குகள் மீது விலைச்சரிவு பதிவாகியிருந்தமையின் காரணமாக சுட்டிகள் மறைபெறுமதியில் நிறைவடைந்திருந்தன. நிறுவனசார் மற்றும் உயர் நிகர பெறுமதி வாய்ந்த ஈடுபாடு என்பது னுகுஊஊ வங்கி மற்றும் டெக்ஸ்ச்சர்ட் ஜேர்சி லங்கா ஆகிய பங்குகள் மீது பதிவாகியிருந்தது. சிறியளவிலான முதலீட்டாளர்களின் ஈடுபாடு பிசிஎச் ஹோல்டிங்ஸ் மற்றும் பிசி பார்மா ஆகிய பங்குகள் மீது பதிவாகியிருந்தது. வெளிநாட்டவர்கள் நிகர பங்கு கொள்வனவாளர்களாக பதிவாகியிருந்தனர். இவர்கள் ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ், டெக்ஸ்ச்சர்ட் ஜேர்சி லங்கா மற்றும் சம்பத் வங்கி ஆகிய நிறுவனங்களின் பங்குகளை அதிகளவு கொள்வனவு செய்திருந்தனர்.

கடந்த வார கொடுக்கல் வாங்கல் நடவடிக்கைகளில் சிலோன் பிரின்டர்ஸ், லயன் பிரெவரி, ஹேலீஸ் ஃபைபர், சிட்ரஸ் லெய்ஷர் (உரிமை) மற்றும் எஃவ்எல்சி ஹைட்ரோ பவர் போன்றன முதல் ஐந்து சிறந்த இலாபமீட்டிய பட்டியலிடப்பட்ட கம்பனிகளாக பதிவாகியிருந்தன.

ஹியுஜே, சிலோன் லெதர்(உரிமை), ஹரிஸ்சந்திர, மொரிசன்ஸ் (உரிமை) மற்றும் சம்சன் இன்டர்நஷனல் போன்ற நிறுவனங்களின் பங்குகள் அதிகளவு நஷ்டமீட்டியதாக பதிவாகியிருந்தன.


தங்கம் விலை நிலைவரம்
கடந்த வாரம் 24 கெரட் தங்கத்தின் சராசரி விலை 44,800 ரூபாவாகவும், 22 கெரட் தங்கத்தின் விலை 41,200 ரூபாவாகவும் அமைந்திருந்ததாக தங்க நகை வியாபார வட்டாரங்களிலிருந்து அறிந்து கொள்ள முடிந்தது.

நாணய மாற்று விகிதம்
கடந்த வாரம் டொலருக்கு நிகரான ரூபாவின் சராசரி விற்பனை பெறுமதி 131.66 ஆக பதிவாகியிருந்தது. ஐக்கிய இராச்சிய பவுணுக்கு நிகரான சராசரி விற்பனை பெறுமதி 226.14    ஆக காணப்பட்டிருந்தது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X