
கொழும்பு தாஜ் சமுத்திரா ஹோட்டலில் சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் இடம்பெற்ற இலங்கை மருந்துப் பொருள் வர்த்தகத் துறைசார் சம்மேளனத்தின் வருடாந்த பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த அதன் புதிய தலைவர் கேர்னல் சந்திரா ஜயரத்ன, இலங்கை மருந்துப் பொருள் வர்த்தகத் துறைசார் சம்மேளனம் எந்த சந்தர்ப்பத்திலும் மருந்துப் பொருட்களின் விலை கட்டுப்பாட்டு இயக்கமுறை மற்றும் அதற்கு சார்பாகவே இருந்து வருகிறது. 80 மற்றும் 90 காலப்பகுதிகளில் இருந்த விலைக்கட்டுப்பாட்டு இயக்கமுறைக்கு தாம் ஆதரவாகவே இருப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.
அத்துடன் கடந்த 15 வருடகால பகுதிக்குள் மின்சாரம், ஊதியம், எரிபொருள், களஞ்சிய வசதிகள் மற்றும் போக்குவரத்து ஆகிய பிரிவுகளில் இடம்பெற்ற பாரிய விலை அதிகரிப்பை கவனத்தில் கொள்வதற்கு நுகர்வோர் விவகார அதிகார சபை வேண்டுகோள் விடுத்திருந்ததாக தெரிவித்ததுடன் மருந்து கட்டுப்பாட்டு அதிகாரச் சபையினால் அமுல்படுத்தப்பட்டுள்ள பதிவுகள் மற்றும் கட்டுப்பாட்டு விலைகள் மிக அதிகம் என அவர் சுட்டிக்காட்டினார். கடந்த 15 வருடகாலப் பகுதியில் இந்த விலைகள் நூற்றுக்கு 500இனால் அதிகரித்துச் சென்றுள்ளதுடன் இது தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் பின்னர் நுகர்வோர் அதிகாரச் சபைக்கு தமது திட்டங்களை சமர்ப்பித்துள்ளதுடன் அதற்காக நுகர்வோர் அதிகார சபையின் பதிலை எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் கூறினார்.
தமது செயற்பாட்டு நடவடிக்கைகள் சட்டரீதியாக மேற்கொள்வதற்காக விலை, பொதியிடல் மற்றும் பதிவு செய்தல் போன்ற பிரிவுகளினால் மேற்கொள்ள வேண்டிய அனைத்து நடவடிக்கைகளை உரிய விதத்தில் மேற்கொள்வதற்கு சம்மேளனத்திலுள்ள உறுப்பினர்களிடம் வேண்டுகோள் விடுத்ததாகவும் வெளியில் இருந்து வரும் அழுத்தங்களைக் கட்டுப்படுத்துவதற்காக சிறந்த ஆயுதமாக அமைவது உறுப்பினர்களுக்கு இடையில் உள்ள ஐக்கியமே எனவும் அவர் தெரிவித்தார்.
தேசிய மருந்துப் பொருள் கொள்கை தொடர்பாக கருத்து தெரிவித்த புதிய தலைவர், இலங்கை மருந்துப் பொருள் வர்த்தக துறைசார் சம்மேளனம் தேசிய மருந்துக் கொள்கைக்காக தாம் பூரண ஒத்துழைப்பை தெரிவிப்பதாகக் கூறினார். அத்தோடு அதற்கு தேவையான சட்டவிதிகள் மற்றும் விலைப் பயனுள்ள சட்டவிதிகள், தேசிய மருந்தக தொழில்சார் துறையில் ஏற்படுத்தக்கூடிய அழுத்தங்களை அடிப்படையாகக் கொண்டு அதனை மீண்டும் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளுமாறு உரிய அதிகாரிகளிடம் வேண்டுகோள் விடுப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.