2025 செப்டெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

வாடிக்கையாளர்களை தங்கத்தால் அலங்கரிக்கும் கோயா

A.P.Mathan   / 2014 ஜூலை 29 , பி.ப. 02:23 - 0     - {{hitsCtrl.values.hits}}


அன்பின் நறுமணத்தை பரவச் செய்து கோயா தமது பெருமைக்குரிய வாடிக்கையாளர்களை தங்கத்தால் அலங்கரித்துள்ளது. ஹேமாஸ் மனுபக்டரிங் நிறுவனத்தின் புகழ்பெற்ற கோயா வர்த்தகநாமமானது, அதன் பெருமைக்குரிய வாடிக்கையாளர்களுக்கு தங்க ஆபரணங்களை வெகுமதியாக வழங்கும் வகையில் ஊக்குவிப்பு திட்டமொன்றை முன்னெடுத்திருந்தது. இதன் போது 18 வெற்றியாளர்களுக்கு ஒரு மில்லியனுக்கும் அதிகமான பெறுமதியான தங்க ஆபரணங்கள் கோயா மூலம் வழங்கப்பட்டிருந்தது.
 
இத்திட்டத்தில் வெற்றி பெற்றவர்களுக்கு வெகுமதிகளை வழங்கும் நிகழ்வானது அண்மையில் கொழும்பு 02 பிறேபுறுக் பிளேஸில் அமைந்துள்ள ஹேமாஸ் மனுபக்டரிங் நிறுவனத்தின் தலைமைக் காரியாலயத்தில் இடம்பெற்றது. இதன் போது முதல் பரிசாக தங்கச் சங்கிலி மற்றும் தங்க பதக்கம் உள்ளிட்ட மூன்று வெகுமதிகள் கையளிக்கப்பட்டதுடன், இரண்டாவது பரிசாக 5 பிரேஸ்லட்களும், மூன்றாவது பரிசாக 10 வெற்றியாளருக்கு தங்க பதக்கங்களும் கையளிக்கப்பட்டன.
 
இந்த ஊக்குவிப்பு திட்டமானது ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் முன்னெடுக்கப்பட்டிருந்தது. பத்திரிகைகளில் வெளியான கூப்பனுடன் கோயா கொள்வனவு பற்றுச்சீட்டு மற்றும் பொதியின் ஒரு பகுதியை வெட்டி அனுப்புவதன் ஊடாக இப்போட்டியில் கலந்து கொள்வதற்கான வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டிருந்தது. நாட்டின் அனைத்து பிரதேசங்களிலிருந்தும் அதிகப்படியான கூப்பன்களை அனுப்பி பெரும்பாலானவர்கள் பங்குபற்றியிருந்தனர்.
 
இந்த ஊக்குவிப்பு திட்டம் குறித்து கோயா சிரேஷ்ட வர்த்தகநாம முகாமையாளர் நிரோஷனி பெரேரா கருத்து தெரிவிக்கையில், 'இதற்கு முன்னர், எமது பெருமைக்குரிய வாடிக்கையாளருக்கு பெறுமதியான பரிசில்களை வழங்கிடும் வகையிலான பல ஊக்குவிப்பு திட்டங்களை முன்னெடுத்திருந்தோம். எமது பெறுமதிமிக்க வாடிக்கையாளருக்கு மிகவும் பெறுமதி வாய்ந்த வெகுமதியொன்றை வழங்கிடும் நோக்கில் நாம் இந்த தங்க ஆபரணங்களை வழங்கும் ஊக்குவிப்பு திட்டத்தினை முன்னெடுக்க தீர்மானித்தோம். இதற்கு அமோக வரவேற்பு கிடைத்திருந்ததுடன், இந்த ஊக்குவிப்பு திட்டத்துடன் இணைந்திருந்த வாடிக்கையாளர்களுக்கு ஹேமாஸ் நிறுவனம் மற்றும் கோயா குழுவினர் சார்பாக எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன்' என தெரிவித்தார்.
 
முதல் பரிசினை வென்ற சிலாபத்தைச் சேர்ந்த பிஸ்மா சச்சினியின் தந்தை பீ.ஜி.ரொஹாந்த தன் மகளுக்கு கிடைத்த இந்த பரிசானது அவளது எதிர்காலத்திற்கு மிகப் பெறுமதி வாய்ந்ததொன்றாகும் என்றார். 'குழந்தைகளின் எதிர்காலத்தை வளமாக்குவதில் பெற்றோர் மிகப்பெரிய பொறுப்பை கொண்டுள்ளனர். அந்த பொறுப்பினை நிறைவேற்றுவதில் தந்தைக்கு மிகப்பெரிய பங்குள்ளது. இருப்பினும், கோயா மூலம் வழங்கப்பட்ட இந்த வெகுமதி அந்தச் சுமையை பெருமளவு குறைக்கும்' என மேலும் அவர் தெரிவித்தார்.
 
மேலும் தனது வாடிக்கையாளருக்கு கோயா பேஸ்புக் பக்கத்தின் ஊடாக பல்வேறு போட்டிகள் மற்றும் ஊக்குவிப்பு திட்டங்களை முன்னெடுத்து வருவதுடன், இதனூடாக தமது நண்பர்களுக்கும், நண்பிகளுக்கும் பெறுமதி வாய்ந்த பரிசில்களை வழங்கி தமது நன்றிக்கடனை வெளிப்படுத்தி வருகிறது.





  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X