2026 மே 02, சனிக்கிழமை

பங்குச்சந்தை, தங்கம் விலை மற்றும் நாணயமாற்று வீத நிலைவரங்கள்

A.P.Mathan   / 2014 ஓகஸ்ட் 03 , பி.ப. 05:42 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ச.சேகர்
 
வாரம் முழுவதும் தொடர்ச்சியான உயர் பெறுமதிகளை பதிவு செய்திருந்த கொழும்பு பங்குச்சந்தை, வெள்ளிக்கிழமை சரிவான பெறுமதிகளை பதிவு செய்திருந்தது. பங்குச்சந்தையில் முதலீட்டாளர்களின் ஆர்வம் அதிகளவில் பிசிஎச் ஹோல்டிங்ஸ், யூனியன் அஷ்யூரன்ஸ், அமானா வங்கி போன்ற பங்குகளின் மீது அதிகளவு காணப்பட்டது. அத்துடன் யூனியன் அஷ்யூரன்ஸ் காப்புறுதி நிறுவனத்தின் பொது காப்புறுதி செயற்பாடுகளை வெளிநாட்டு நிறுவனமொன்று கொள்வனவு செய்வதில் ஆர்வம் காண்பித்துள்ளமை குறித்த செய்திகளும் கடந்த வாரம் பங்குச்சந்தை வட்டாரத்தில் பரவலாக பேசப்பட்டிருந்தது. செவ்வாய்க்கிழமை ரமழான் பண்டிகையையிட்டு பங்குச்சந்தை கொடுக்கல் வாங்கல்கள் இடம்பெற்றிருக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. வெள்ளிக்கிழமை நடவடிக்கைகள் நிறைவடைந்த போது அனைத்து பங்கு விலைச் சுட்டெண் 6,810.13 ஆகவும், S&P ஸ்ரீலங்கா 20 சுட்டி 3759.42 ஆகவும் பதிவாகியிருந்தன.
 
ஜூலை 28ஆம் திகதியுடன் ஆரம்பமான கடந்த வாரத்தின் இறுதியில் மொத்த பங்கு புரள்வு பெறுமதியாக ரூ. 3,287,512,646 அமைந்திருந்தது. கடந்த வாரம் மொத்தமாக 31,201 பங்கு கொடுக்கல் வாங்கல்கள் இடம்பெற்றன. இதில் உள்நாட்டு கொடுக்கல் வாங்கல்கள் 30,041 ஆகவும் வெளிநாட்டு கொடுக்கல் வாங்கல்கள் 1,160 ஆகவும் பதிவாகியிருந்தன.
 
திங்கட்கிழமை
சுட்டிகள் கலப்பு பெறுமதியை பதிவு செய்து நிறைவடைந்திருந்தன. இதில் குறைந்த உயர் நிகர பெறுமதி வாய்ந்த நிறுவனசார் செயற்பாடுகள் அதிக பங்களிப்பை வழங்கியிருந்தன. சுpறியளவிலான முதலீட்டாளர்களின் ஈடுபாடு ஃப்ரீ லங்கா கெப்பிட்டல் ஹோல்டிங்ஸ் மற்றும் பிசிஎச் ஹோல்டிங்ஸ் ஆகிய பங்குகள் மீது பதிவாகியிருந்தன. கலப்பு ஈடுபாடு என்பது அக்சஸ் என்ஜினியரிங் பங்குகள் மீது பதிவாகியிருந்தது. வெளிநாட்டவர்கள் நிகர கொள்வனவாளர்களாக பதிவாகியிருந்தனர். அக்சஸ் என்ஜினியரிங், தேசிய அபிவிருத்தி வங்கி மற்றும் லாஃவ்ஸ் காஸ் வாக்குரிமையற்ற பங்குகள் ஆகியன இதில் பங்களிப்பு செய்திருந்தன.
 
புதன்கிழமை
பங்குச்சந்தை நேர்பெறுமதிகளை பதிவு செய்து நிறைவடைந்திருந்தது. குறிப்பாக சிலோன் டொபாக்கோ கம்பனி பங்குகளின் பங்களிப்புடன், அமானா வங்கி, பான் ஏசியா பாங்கிங் கோர்ப்பரேஷன் மற்றும் ரோயல் செரமிக்ஸ் ஆகிய பங்குகள் மீது மொத்த கைமாறல்கள் பதிவாகியிருந்தன. இதன் காரணமாக புரள்வு பெறுமதி 970 மில்லியன் ரூபாவை கடந்திருந்தது. இதேவேளை, லகி லங்கா மற்றும் பிசிஎச் ஹோல்டிங்ஸ் பங்குகள் மீது சிறிளயவிலான முதலீட்டாளர்கள் ஆர்வம் செலுத்தியிருந்தனர். வெளிநாட்டவர்களின் ஈடுபாடு ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் மற்றும் ரோயல் செரமிக்ஸ் பங்குகள் மீது பதிவாகியிருந்தது.
 
வியாழக்கிழமை
யூனியன் அஷ்யூரன்ஸ், சி ரி ஹோல்டிங்ஸ் மற்றும் ஸ்ரீலங்கா ரெலிகொம் பங்குகள் மீது விலை உயர்வு பதிவாகியிருந்தமையின் காரணமாக சுட்டிகள் நேர் பெறுமதியில் நிறைவடைந்திருந்தன. புரள்வு பெறுமதி 1 பில்லியன் ரூபாவை கடந்திருந்தது. அக்சஸ் என்ஜினியரிங், ரோயல் செரமிக்ஸ், ஹற்றன் நஷனல் வங்கி, ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ், கொமர்ஷல் வங்கி மற்றும் செலிங்கோ இன்சூரன்ஸ் வாக்குரிமையற்ற பங்குகள் ஆகியவற்றின் பங்களிப்பு 39 வீதமாக அமைந்திருந்தது. பிசிஎச் ஹோல்டிங்ஸ் பங்குகள் மற்றும் பிரவுண்ஸ் இன்வெஸ்ட்மன்ட்ஸ் ஆகிய பங்குகள் மீது சிறியளவிலான முதலீட்டாளர்களின் ஈடுபாடு பதிவாகியிருந்தது. ஜனசக்தி இன்சூரன்ஸ் பங்குகள் மீது கலப்பு ஈடுபாடு பதிவாகியிருந்தது.
 
வெள்ளிக்கிழமை
சிலோன் டொபாக்கோ கம்பனி மற்றும் ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் ஆகிய பங்குகள் மீது விலைக்குறைவுவின் காரணமாக சுட்டிகள் மறைப் பெறுமதிகளை பதிவு செய்து நிறைவடைந்திருந்தன. லாஃவ்ஸ் காஸ் வாக்குரிமையற்ற பங்குகள், ஹற்றன் நஷனல் வங்கி வாக்குரிமையற்ற பங்குகள் மற்றும் கொமர்ஷல் வங்கி ஆகிய பங்குகள் மீது சந்திப்புகள் பதிவாகியிருந்தன. சென்ரல் இன்வெஸ்ட்மன்ட் அன்ட் ஃபினான்ஸ் மற்றும் பிசி பார்மா ஆகிய பங்குகளின் மீது சிறியளவிலான முதலீட்டாளர்களின் ஈடுபாடு பதிவாகியிருந்தது. சிலோ ஃபினான்ஸ் பங்குகளின் மீது கலப்பு ஈடுபாடு பதிவாகியிருந்தது.
 
கடந்த வார கொடுக்கல் வாங்கல் நடவடிக்கைகளில் சிங்ஹபுத்ர ஃபினான்ஸ், குட் ஹோப், சிங்ஹபுத்ர ஃபினான்ஸ், சிஐஎஃவ்எல் மற்றும் கொம.கிரெடிட் போன்றன முதல் ஐந்து சிறந்த இலாபமீட்டிய பட்டியலிடப்பட்ட கம்பனிகளாக பதிவாகியிருந்தன. 
 
சிலோன் லெதர்(உரிமை), சிலோன் லெதர்(உரிமை), பிசி ஹவுஸ், லங்கா சென்ச்சரி(உரிமை) மற்றும் பசி பார்மா போன்ற நிறுவனங்களின் பங்குகள் அதிகளவு நஷ்டமீட்டியதாக பதிவாகியிருந்தன.

தங்கம் விலை நிலைவரம்
கடந்த வாரம் 24 கெரட் தங்கத்தின் சராசரி விலை 45,200 ரூபாவாகவும், 22 கெரட் தங்கத்தின் விலை 42,400 ரூபாவாகவும் அமைந்திருந்ததாக தங்க நகை வியாபார வட்டாரங்களிலிருந்து அறிந்து கொள்ள முடிந்தது. 
 
நாணய மாற்று விகிதம்
கடந்த வாரம் டொலருக்கு நிகரான ரூபாவின் சராசரி விற்பனை பெறுமதி 131.63 ஆக பதிவாகியிருந்தது. ஐக்கிய இராச்சிய பவுணுக்கு நிகரான சராசரி விற்பனை பெறுமதி 222.83 ஆக காணப்பட்டிருந்தது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .