2025 செப்டெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

விற்பனையாளர்களை கௌரவித்திருந்த அட்லஸ்

A.P.Mathan   / 2014 ஓகஸ்ட் 05 , மு.ப. 11:06 - 0     - {{hitsCtrl.values.hits}}


இலங்கையின் மிகப்பெரிய காகிதாதிகள் உற்பத்தி செய்து சந்தைப்படுத்தும் நிறுவனமான சிலோன் பென்சில் கம்பனி (பிரைவேற்) லிமிடெட் (அட்லஸ்), சிறப்பாக தமது திறமைகளை வெளிப்படுத்தியிருந்த விற்பனையாளர்களை கௌரவிக்கும் வகையில் பாங்கொக் சென்றுவருவதற்கான சுற்றுலாப் பயணங்களை வழங்கியிருந்தது. நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி எம்.ஹம்சா அவர்களின் பங்குபற்றலுடன் கிரிபத்கொட, க்ளாரியன் ஹோட்டலில் இடம்பெற்ற நிகழ்வின் போது இந்த விருதுகள் வழங்கப்பட்டிருந்தன. நாடு முழுவதையும் சேர்ந்த சுமார் 35க்கும் அதிகமான விற்பனையாளர்கள் இந்த நிகழ்வின் போது கௌரவிக்கப்பட்டிருந்தனர். 2013 டிசம்பர் மாதம் அற்லஸ் முன்னெடுத்திருந்த 'Back to School''' ஊக்குவிப்புப் பிரசாரத் திட்டத்தின் மூலம் சிறப்பான முறையில் விற்பனையை மேற்கொண்டிருந்த விற்பனையாளர்களை கௌரவிக்கும் வகையில் இந்த சுற்றுலாப் பயணங்கள் வழங்கப்பட்டிருந்தன. 
 
இந்த நிகழ்வில் சிலோன் பென்சில் கம்பனி லிமிடெட் (அட்லஸ்) நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி எம். ஹம்சா கருத்து தெரிவிக்கையில், 'எமது விற்பனையாளர்களின் அர்ப்பணிப்பான செயற்பாட்டை நாம் கௌரவப்படுத்துவதோடு, அவர்களின் வியாபாரத்தின் விருத்தியினை பற்றி சிந்தித்து செயற்படுகின்ற கம்பனியாக இந்நாட்டின் கம்பனிகளிடையே நாம் தனித்துவமாக திகழ்கிறோம். எப்போதுமே எங்களுடைய விற்பனையாளர்களின் மீதான உயரிய உறவினை கடந்த வருடத்தில் நடைபெற்ற சிறப்பான திறமைகளை வெளிக்காட்டிய விற்பனையாளர்களின் தெரிவின் மூலம் வெளிக்காட்டியிருந்தோம்' என தெரிவித்தார். 
 
இலங்கையின் காகிதாதிகள் சந்தையில் அதிகூடிய சந்தை வாய்ப்பை தன்னகத்தே கொண்டுள்ளமைக்கு மேலதிகமாக, அற்லஸ் இலங்கையின் முதலாவது காகிதாதிகள் அபிவிருத்தி மற்றும் ஆய்வுகூடத்தையும் நிறுவியுள்ளது. ஒவ்வொரு வருடமும் தனது உற்பத்தி தொகுதியில் புதிய உற்பத்திகளை உள்ளடக்கி வருகிறது. இதன் மூலம் நாட்டின் பாடசாலை மாணவர்களுக்கு புத்தாக்க சிந்தனையில் உருவாகிய உற்பத்திகளை சகாய விலையில் பெற்றுக் கொள்வதற்கான வாய்ப்பையும் வழங்குகிறது. 'ATLAS Pass' எனும் பயிற்சி நூல் க.பொ.த சாதாரண பரீட்சைக்கு தம்மை தயார்ப்படுத்தும் மாணவர்களுக்காக முன்னெடுக்கப்படுகிறது. அற்லஸ் உற்பத்தி தொகுதியில் புதிய உள்ளடக்கமாக இது அமைந்துள்ளது. 

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X