2025 செப்டெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

கம்பீரமான வணிகங்களுக்காக அடுத்த தலைமுறை பனசொனிக்

A.P.Mathan   / 2014 ஓகஸ்ட் 07 , பி.ப. 05:48 - 0     - {{hitsCtrl.values.hits}}


சொப்ட்லொஜிக் ஹோல்டிங்ஸ் பி.எல்.சி. நிறுவனத்தின் முதன்மையான துணை நிறுவனமாக திகழும் சொப்ட்லொஜிக் ரீடைல் (பிரைவேட்) லிமிட்டெட் ஆனது இலங்கையின் மிக வேகமாக வளர்ச்சியடைந்து செல்லும் சிறிய, நடுத்தர தொழில்முயற்சி மற்றும் சிறிய, நடுத்தர வணிகங்களில் பிரத்தியேகமான கவனத்தைச் செலுத்தி, IP ஆற்றலுள்ள KX-NS300 எனும் புத்தம்புதிய PBX உபகரணத் தொகுதி மாதிரியை அண்மையில் அறிமுகப்படுத்தியுள்ளது. ஆசிய பசுபிக் பிராந்தியத்தில் புத்தாக்கமான தொழில்நுட்ப தீர்வுகளை உருவாக்குவதுடன் இணைந்தாக, உற்பத்திகளை வகைப்படுத்துவதையும் மையமாகக் கொண்டு பனசொனிக் மற்றும் சொப்ட்லொஜிக் ஆகிய இரு நிறுவனங்களும் மேற்கொண்டு வருகின்ற கூட்டிணைந்த மற்றும் தொடர்ச்சியான முயற்சிகளின் தொடர் விளைவாக இவ் அறிமுகம் அமைகின்றது. 
 
KX-NS300 என்பது செயற்றிறன் கொண்ட ஒரு IP PBX உபகரண தொகுதியாக காணப்படுவதுடன். தொலைத்தொடர்பாடல் விடயத்தில் ஈடிணையற்ற சிறப்பம்சங்களையும் தன்னகத்தே கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. உதவிச் சேவையை வழங்குவதற்காக உள்ளகமாக அமைக்கப்பட்ட ஒரு ACD (அடிப்படை அழைப்பு நிலைய செயற்பாடு), ஒரு in-skin Voice மற்றும் ஒருங்கிணைக்கப்பட்ட தொடர்பாடல் (UC) போன்ற சிறப்பம்சங்களை கொண்டுள்ளது. KX-NS300 உபகரணத்தில் மேலும் பல முன்னேற்றகரமான வசதிகள் காணப்படுகின்றன. 6 அனலொக் ட்ரங்க் தொடர்பிணைப்புகள் மற்றும் 18 வெளியிணைப்புக்கள் தொடக்கம், விரிவாக்க அலகு ஒன்றின் துணையுடன் 192 வரைக்குமான வெளியிணைப்புக்களை (Extensions) மேற்கொள்ளும் வசதியும் இதில் உள்ளது. மொபைல் தொடர்புபடுத்தல், ஒருங்கிணைக்கப்பட்ட வொயிஸ் மெயில் மற்றும் மின்னஞ்சல், உடனடி தகவல் அனுப்புதல் (Chat), தகவலை முன்னிலைப்படுத்தல் போன்ற பல்வேறு மேம்பட்ட IP சிறப்பம்சங்களை இவ்வுற்பத்தி கொண்ருக்கின்றது. 
 
இலங்கையில் இதனை அறிமுகம் செய்து வைக்கும் நிகழ்வு அண்மையில் கொழும்பு ஹில்டன் ஹோட்டலில் இடம்பெற்றது. பனசொனிக் இந்தியா நிறுவனத்தின் பொது முகாமையாளர் திரு. டக்கியோ மொரிசிடா, பனசொனிக் சிஸ்டம் நெற்வேர்க்ஸ் (ஜப்பான்) நிறுவன முகாமையாளர் திரு. சுஹூச்சி டக்கெனோச்சி மற்றும் சொப்ட்லொஜிக் ஒபிஸ் ஒட்டோமேஷன் நிறுவனத்தின் பணிப்பாளர் திரு. சமிந்த டி சில்வா ஆகியோரின் ஆதரவின் கீழ் இந்நிகழ்வு இடம்பெற்றது. 
 
இந்நிகழ்வுக்காக வருகை தந்திருந்த பனசொனிக் நிறுவன உயரதிகாரிகளுள் பனசொனிக் சிஸ்டம்ஸ் ஆசியா நிறுவன பொது முகாமையாளர் செல்வி. நஒகோ புகுய், உதவி முகாமையாளர் (PSY) திரு. கிவெக் சின் டெங், பனசொனிக் இந்தியா நிறுவன முகாமையாளர் திரு. பிரியே சௌத்திரி மற்றும் பனசொனிக் இந்தியா நிறுவனத்தின் விற்பனை பொறியியலாளர் (PBX) திரு. கணேஸ் பவிகட்டி போன்றோரும்  உள்ளடங்குகின்றனர். 
 
சொப்ட்லொஜிக் ஒபிஸ் ஒட்டோமேஷன் நிறுவனத்தின் முக்கியமான 50 இற்கும் அதிகமான கூட்டாண்மை நிறுவன வாடிக்கையாளர்களும் 50 விற்பனை பிரதிநிதிகளும் இவ்வுற்பத்தியை அறிமுகப்படுத்தும் நிகழ்வில் கலந்து கொண்டனர். பனசொனிக் நிறுவனத்தில் இருந்து வருகை தந்திருந்த ஜப்பானிய பிரதிநிதிகளால் செய்து காண்பிக்கப்பட்ட இந்த உற்பத்தியின் சிறப்புக்கள் பற்றிய தொழில்நுட்பம்சார் நேரடி செயன்முறை வெளிப்படுத்தலை அனுபவிக்கும் சந்தர்ப்பத்தை இவர்கள் பெற்றுக் கொண்டார்கள். அதுமட்டுமன்றி, இலங்கையில் தற்போது கிடைக்கக் கூடியதாகவுள்ள இத் தீர்வுடன் மேலும் இணைந்து தொழிற்படுவதற்கான வாய்ப்பும் இவர்களுக்கு கிடைத்தது. 
 
சொப்ட்லொஜிக் ஒபிஸ் ஒட்டோமேஷன் நிறுவனத்தின் பணிப்பாளர் திரு. சமிந்த டி சில்வா இப் புதிய உற்பத்தி தொடர்பாக கருத்துத் தெரிவிக்கையில், 'நான்கு தசாப்தங்களுக்கும் மேலாக நாம் முழுமையான அலுவலக தன்னியக்கமாக்கல் தீர்வுகளை வழங்கி வருவதுடன்,  அதன்மூலம் இலங்கையிலுள்ள நூற்றுக்கணக்கான வணிகங்களுக்கு வலுவூட்டியுள்ளோம். பனசொனிக் நிறுவனத்துடனான எமது பங்காளித்துவமும் நான்கு தசாப்தங்களுக்கும் அதிக காலம் பழமை வாய்ந்ததாகும். இலங்கையிலுள்ள கூட்டாண்மை நிறுவனங்களுக்கு பிரத்தியேகமாக்கப்பட்ட தீர்வுகளை வழங்குவதில் நாம் கொண்டுள்ள அர்ப்பணிப்பு மற்றும் செயல் வல்லமையை மேலும் எடுத்துக் காட்டுவதாக இது அமைகின்றது' என்றார். 
 
சொப்ட்லொஜிக் ஒபிஸ் ஒட்டோமேஷன் நிறுவனமானது 08, 24, 60, 120, 600 முதல் 1000 வரையான வெளியிணைப்புக்களை (Extensions) கொண்டவையாக பல்வேறு தொடர்களில் கிடைக்கின்ற அனைத்து விதமான பனசொனிக் PBX முறைமைகளுக்கும் 12 மாத முற்றுமுழுதான உத்தரவாதத்தை அளிக்கின்றது. தொழில்நுட்ப மற்றும் சேவை அடிப்படையிலான மிகச் சிறந்த வாடிக்கையாளர் சேவையின் பக்கபலத்தை இது கொண்டுள்ளது. இவற்றுள் பிளாட்டினம், தங்கம் மற்றும் வெள்ளி போன்ற சேவைப் பொதிகளும் உள்ளடங்குகின்றன. கம்பனி 40 வருடங்களுக்கும் அதிகமான காலம் PBX உபகரண வர்த்தகத்தில் ஈடுபட்டு வரும் அதேவேளை வங்கியியல், தொலைத்தொடர்பாடல், நிதியியல், உற்பத்தியாக்கம், சுகாதாரம் மற்றும் விடுமுறைகால வசதிகள் என பல்வகை துறைகளை பிரதிநிதித்துவம் செய்யும் நிறுவனங்களை உள்ளடக்கிய வாடிக்கையாளர் தளம் ஒன்றையும் கொண்டியங்குகின்றது. 
 
பனசொனிக் சிஸ்டம்ஸ் ஆசியா பசுபிக் (PSY) பொது முகாமையாளர் செல்வி. நஒகோ புகுய் கூறுகையில், 'பனசொனிக் KX-NS300 ஸ்மார்ட் IP PBX உபகரணமானது செலவுச் சிக்கன மரபுரிமைப் பண்பை வெளிப்படுத்துகின்றது. சிறிய மற்றும் நடுத்தர அளவிலான கம்பனிகள் தமது வணிகத்தின் தன்மையைப் பொறுத்து பொருத்தமான IP தொடர்பாடல் முறைமையை நெகிழ்வுத் தன்மையுடன் கட்டமைத்துக் கொள்ளவும், விஸ்தரிக்கவும் முடியும்' என்று தெரிவித்தார். 
 
உறுதிமிக்க தொழில்நுட்பம்சார் பின்னணியைக் கொண்ட சொப்ட்லொஜிக் ஒபிஸ் ஒட்டோமேஷன் நிறுவன ஆதரவுச் சேவை அணியானது – பொருத்துதல், பொருத்துதலுக்கு முன்னரான தொழிற்பாடு, பொறியியல், தொழில்நுட்ப உதவி மற்றும் விற்பனைக்கு பின்னரான உதவி போன்ற நடவடிக்கைகளுக்கான 20 இற்கும் மேற்பட்ட தொழில்வாண்மையாளர்களை தன்னகத்தே கொண்டுள்ளது. தொடர்ச்சியான அறிவுப் பரிமாற்றத்தின் ஊடாக சர்வதேச நிபுணத்துவ சேவையை கம்பனி வழங்கி வருகின்றது. அதன்மூலம், பனசொனிக்கின் உலகளாவிய வாடிக்கையாளர் சேவையின் தேவைப்பாட்டுக்கு அமைவாக வழங்கப்படும் சேவையின் தராதரம் மேலும் மேம்படுத்தப்படுகின்றது. 
 
சொப்ட்லொஜிக் ஹோல்டிங்ஸ் பி.எல்.சி. இற்கு முழுமையாக சொந்தமான துணை நிறுவனமாக திகழும் சொப்ட்லொஜிக் ரீடைல் (பிரைவேட்) லிமிட்டெட் ஆனது பிரதானமாக பனசொனிக், Xerox மற்றும் NEC போன்ற வர்த்தக குறியீடுகளுக்கான அங்கீகாரம் பெற்ற விநியோகஸ்தராக திகழ்கின்றது. ஒரு புகழ்பெற்ற அலுவலக தன்னியக்கமாக்கல் தீர்வுகள் வழங்குனரான இக் கம்பனி, பரந்துபட்ட வகைகளிலான அலுவலக பாவனை உற்பத்திகளை வழங்கி வருகின்றது. குறிப்பாக தொலைநகல், போட்டோ பிரதி இயந்திரங்கள், PBX, கம்பியில்லா தொலைபேசி, காற்றுச்சீராக்கிகள், CCTV, மற்றும் மல்டிமீடியா புரஜெக்டர்கள் உள்ளடங்கலாக இன்றைய காலகட்டத்தில் நிறுவனங்களுக்கு தேவையான பல  உற்பத்திகளை வழங்குகின்றது. 

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X