2025 செப்டெம்பர் 22, திங்கட்கிழமை

அரசாங்கத்தின் தலையீடு, வங்கிகளின் செயற்பாடுகளை சீரழிக்கக்கூடும்

A.P.Mathan   / 2014 ஓகஸ்ட் 11 , மு.ப. 09:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

தனியார் வங்கிகளின் நிர்வாக செயற்பாடுகளில் அரசாங்கத்தின் தலையீடு என்பது குறித்த வங்கிகளின் செயற்பாடுகளை சீரழிக்கும் வகையில் அமையுமென இந்தியாவின் எச்எஸ்பிசி வங்கியின் தலைமை அதிகாரி நைலா லால் கித்வானி தெரிவித்தார். 
 
கடந்த வாரம் ஹற்றன் நஷனல் வங்கி மற்றும் கொமர்ஷல் வங்கி ஆகியவற்றின் நிர்வாக செயற்குழுவின் அரச தரப்பில் உயர்ந்த பதவிகளைச் சேர்ந்தவர்கள் நியமிக்கப்பட்டிருந்ததை தொடர்ந்து இலங்கை வர்த்தக சம்மேளனத்தில் இடம்பெற்ற செயலமர்வில் கித்வானி கலந்து கொண்டு சொற்பொழிவொன்றை மேற்கொள்கையில் மேற்படி கருத்தை தெரிவித்திருந்தார்.
 
கொமர்ஷல் வங்கியின் எட்டு பணிப்பாளர்களில் ஐந்து பேர் அரசாங்கத்துடன் நேரடியான தொடர்பை கொண்டவர்களாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X