
புதிதாக புனர் நிர்மாணம் செய்யப்பட்டு பெரும் சிறப்புடனும் கரகோசத்திற்கு மத்தியிலும் அண்மையில் திறந்து வைக்கப்பட்ட சுதந்திர சதுக்க நடைச்சாலை கட்டிட (Arcade) தொகுதியின் விலைமதிக்க முடியாத மரவேலைப்பாடுகள் மற்றும் மரத்திலான உட்புறச் சுவர்பரப்பு முழுவதையும் லங்கெம் ரொபியலக்கின் 'அகுவா சீல்;ட்' எனும் நீரை அடிப்படையாகக் கொண்ட மரப் பராமரிப்பு உற்பத்தி வகைகள் பெருமையுடன் பாதுகாத்து, மேலும் பலப்படுத்துகின்றது.
கொழும்பிலான கடந்தகால காலனித்துவ ஆட்சியின் மீதமிருக்கும் நினைவுச் சின்னமாக காணப்படும் இந்தக் கட்டிடம் உண்மையில் சாம்பலில் இருந்து உயிர்த்தெழும் பீனிக்ஸ் பறவையைப் போல மீண்டெழுந்து இன்று, புதிதாக புத்தெழுச்சி பெற்றிருக்கும் தலைநகரின் கம்பீரம் பொருந்திய காவலாளியாக தலைநிமிர்ந்து நிற்கின்றது.
லங்கெம் சிலோன் பி.எல்.சி. நிறுவனத்தின் பணிப்பாளர் றுவான் ரி. வீரசிங்க கூறுகையில், 'எமது நிறுவனம் இவ்வருடம் 30ஆவது ஆண்டு நிறைவை கொண்டாடுகின்ற நிலையில் இந்த வரலாற்றுப் புகழ்மிக்க கம்பீரமான கட்டிடத்தின் உட்புறப் பகுதிக்கு பூசுவதற்கான உத்தியோகபூர்வ வர்ணப்பூச்சு (பெயின்ட்) விநியோகஸ்தராக தேர்ந்தெடுக்கப்பட்டமை தொடர்பில் பெருமிதம் அடைகின்றோம். இப் பாரம்பரிய கட்டிடமானது ஒப்பீட்டளவில் சீர்கெட்ட நிலையில் காணப்பட்ட ஒன்றாக இருந்தது. எனவேதான், அனைத்து உட்புற மேற்பரப்பினதும் நிலைமையை நாம் மிகக் கவனமாக மதிப்பீடு செய்தோம். அதன்படி அதனது வரலாற்றுச் சிறப்பை மேம்படுத்துகின்ற அதேவேளை நீண்டகாலம் நீடித்திருக்கும் தன்மையையும் உறுதிப்படுத்தக் கூடியதுமான தீர்வை நாம் தேர்ந்தெடுத்தோம்' என்றார்.
'இதுபோன்ற பாரம்பரிய கட்டிடங்களில் மரத்திலான மேற்பரப்புக்களைக் கொண்ட ஜன்னல்கள், கதவுகள், படிக்கட்டுக்கள், படிக்கட்டு கைப்பிடிகள், கூரையின் உட்பகுதி மற்றும் வேலைப்பாடுகள் நிறைந்த தரைக்கட்டு போன்ற அதிகளவில் காணப்படும். இவையனைத்தும் தனித்தன்மையான ஆக்கக்கூறுகளை வெளிப்படுத்துவதாக காணப்படுவதுடன், தினசரி பயன்பாட்டில் தேய்வடைவனவாகவும் உள்ளன. ஆகவேதான் சர்வதேச சிறப்புத்துவமிக்க, நீரை அடிப்படையாகக் கொண்ட எமது 'அகுவா சீல்ட்' உற்பத்தித் தொடரில் நம்பிக்கை வைத்தோம். இவற்றுள் - வெளிப்புற நிறப்பூச்சு (பர்மா தேக்கு மற்றும் வல்நட்), வெளிப்புற உயர்ரக மேல்பூச்சு, வெளிப்புற தரையமைப்பு பூச்சு, உட்புற தரையமைப்பு பூச்சு, வூட் புற்றி வர்ணங்கள் மற்றும் அகுவா சீல்ட் வன்மையாக்கும் உற்பத்திகள் போன்றவை உள்ளடங்கும்.'
'இதற்கு மேலதிகமாக, இலங்கை கடற்படையைச் சேர்ந்த திறன்மிக்க வர்ணம் பூசுவோருக்கும்; மற்றும் ஒவ்வொரு மரத்திற்கும் வர்ணங்களை பொருந்தச் செய்வதிலும்; நாம் தொழில்நுட்ப உதவிகளை வழங்கி இருக்கின்றோம்' என்று வீரசிங்க மேலும் குறிப்பிட்டார்.
உண்மையிலேயே, பழைய பாரம்பரிய கட்டிடங்களை புதுப்பொலிவுடன் புனரமைக்கும் விடயத்தில் முதற் தரமான அனுபவத்தை பெற்று வருவதற்காக இளம் மற்றும் துணிச்சலுள்ள கட்டிடக் கலைஞர்கள் குழுவொன்றை அமைச்சு பாரிஸிற்கு அனுப்பியிருந்தது. இந்நிலையில், ரொபியலக் மரப் பராமரிப்பு உற்பத்திகளின் தரம் சர்வதேச நியமங்களுக்கு அமைவாக காணப்படுகின்றமையால் தற்செயலாக அவர்கள் அவ்வகை சார்ந்த உற்பத்திகளை தேர்ந்தெடுத்தனர்.
தரையில் இருந்து உட்புற கூரை வரைக்குமான ஒவ்வொரு மூலை மற்றும் சுவரில் உள்ள சிறிய வெடிப்பும் லங்கெம் உற்பத்திகளினால் மேம்படுத்தப்பட்டு, பாதுகாப்பளிக்கப்பட்டுள்ளது. இவ்வழியாக நடந்து போகின்ற ஒருவர் பார்க்கின்றபோது மிக அற்புதமான தோற்றப்பாட்டை காட்டுவதற்கு இவை பங்களிப்புச் செய்கின்றன.
அயனமண்டல நாடான இலங்கையின் காலநிலை தொடர்பான கேள்விகளுக்கு பொருத்தமான லங்கெம்மின் விஷேட உற்பத்திகளுள் ஒன்றாக வெளிப்புற மேற்பரப்புக்களுக்கான 'அகுவா சீல்ட்' எனும் நீரை அடிப்படையாகக் கொண்ட மரப் பராமரிப்பு உற்பத்தி காணப்படுகின்றது. சூரியனில் இருந்து வெளிப்படும் கடுமையான புறஊதா கதிர்களின் தாக்கத்திற்கு இது தாக்குப்பிடிக்கக் கூடியது என்பதுடன், மழையின் ஈரக்கசிவு மற்றும் கடற்காற்றின் உவர்ப்புத் தன்மையில் இருந்து பாதுகாப்பளிக்கின்ற அதேவேளை, கட்டிட சுவர்கள் மஞ்சள் நிறமாக மாறுவதில் இருந்தும் தடுக்கின்றது. இவ்வகை உற்பத்தியானது கதவுகள், ஜன்னல்கள் மற்றும் தளபாடங்களை கறையான்கள் மற்றும் பங்கசு தாக்கங்களிலிருந்தும் பாதுகாக்கின்றது.
இதிலுள்ள சிறப்பம்சம் என்னவென்றால் அதனது மீள்திறன் ஆகும். இது முதிர்வடைவதை கட்டுப்படுத்துவதுடன் வெடிப்புக்கள் ஏற்படுவதையும் பூச்சு உரிவதையும் தடுக்கின்றது. உலகளவில் மர மேற்பூச்சுகள் உற்பத்தியில் முன்னணியில் திகழ்கின்ற 'வெரின்லெக்னோ' நிறுவனத்தால் இத்தாலியில் தயாரிக்கப்பட்ட 'அகுவா சீல்ட்' ஆனது, இறுக்கமான ஐரோப்பிய தரநியமங்களுக்கு அமைவாக உற்பத்தி செய்யப்பட்டுள்ள அதேநேரம் இலங்கையின் காலநிலைகளுக்கும் பொருந்துவதாக காணப்படுகின்றது.
சிற்ரஸ் வாதுவை ஹோட்டல், கிராண்ட் உடவளவ சபாரி உல்லாச விடுதி, லய வேவ்ஸ் ஹோட்டல், பாசிக்குடாவில் உள்ள றிசோர்ட் அனிலானா மற்றும் நீலா குடா உல்லாச விடுதிகள், தலங்கம நிவசிபுர வீடமைப்புத் திட்டம் மற்றும் காலி லைற் ஹவுஸ் ஹோட்டல் போன்றவை உள்ளிட்ட பல்வேறு கட்டிட நிர்மாணங்களுக்கு மரப் பராமரிப்பு உற்பத்திகளை வழங்கிய பெருமைக்குரிய விநியோகஸ்தராக லங்கெம் ரொபியலக் காணப்படுகின்றது.
'லங்கெம் ரொபியலக் ஆனது, இலங்கையின் முன்னணி வர்ணப்பூச்சு உற்பத்தியாளராகவும் முற்றுமுழுதாக உள்நாட்டிலேயே உருவாகி வளர்ச்சியடைந்த ஒரு நிறுவனமாகவும் திகழ்கின்றது. எமது வாடிக்கையாளர்களுடன் நாம் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சியடைகின்ற தனிச் சிறப்புமிக்க மரபுரிமையாக இது இருக்கின்றது. பல தலைமுறைகள் கடந்து, நாடெங்கும் உள்ள பல்லாயிரக்கணக்கான இலங்கையர்களின் வாழ்க்கைக்கு வர்ணம் தீட்டும் வகையிலமைந்த எமது இந்தப் பயணமானது மிக நீளமானதும் நல்ல பல நிகழ்வுகளால் நிரம்பியதுமாகும்' என்று திரு. வீரசிங்க கூறி முடித்தார்.