
லங்காபெல் லிமிட்டெட் நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளரான பிரசாத் சமரசிங்க அவுஸ்திரேலியாவின் கன்பெர்ரா நகரிலுள்ள அவுஸ்திரேலிய தேசிய பல்கலைக்கழகத்திடம் இருந்து தொலைத்தொடர்பாடல் துறையில் கலாநிதிப் பட்டமொன்றை கடந்த வாரம் பெற்றுக் கொண்டுள்ளார்.
கலாநிதி. சமரசிங்க மின்னணுவியல் மற்றும் தொலைத்தொடர்பாடல் துறையில் முதல் வகுப்பு சிறப்புச் சித்தியுடன் B.sc (Eng.) இளமானிப் பட்டத்தைப் பெற்றவர் என்பதுடன், பொறியியல் துறையில் முதுமானி (M.Sc) பட்டத்தையும் பெற்றவராவார். இவ்விரு பட்டங்களையும் அவர் இலங்கை, மொரட்டுவை பல்கலைக்கழகத்திலிருந்து பெற்றுக் கொண்டார்.
IEEE (மின்னியல் மற்றும் மின்னணுவியல் பொறியியலாளர்கள் நிறுவகம்) மற்றும் IET (பொறியியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவகம்) ஆகியவற்றின் ஒரு உறுப்பினரான இவர், இலங்கை பட்டய கணக்காளர்கள் நிறுவகத்திடம் இருந்து 'பட்டய தகுதிச்சான்று' பத்திரத்தை (பகுதிகள் I மற்றும் II) பெற்றவராவார். இதற்கான பரீட்சையின் போது - நிதியியல் கணக்கீடு, வணிக கணிதம், புள்ளிவிபரவியல் மற்றும் தரவு செயன்முறைப்படுத்தல் போன்ற விடயதானங்களில் நாடளாவிய ரீதியில் மிகச் சிறந்த பெறுபேற்றினை சமரசிங்க பெற்றுக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.
லங்காபெல் நிறுவனத்தின் துணை நிறுவனங்களாக திகழும் டெலிகொம் ஃபுரென்டியர் (பிரைவேட்) லிமிடெட் மற்றும் பெல் சொலியுசன்ஸ் (பிரைவேட்) லிமிட்டெட் ஆகிய இரண்டினதும் முகாமைத்துவ பணிப்பாளராகவும் கலாநிதி. பிரசாத் சமரசிங்க கடமையாற்றுகின்றார்.
உலகத் தரம் வாய்ந்த தொலைத்தொடர்பாடல் சேவை வழங்குனராக லங்காபெல் திகழ்கின்றது. நாடெங்கும் உள்ள நிறுவனங்கள் மற்றும் வீடுகளில் உள்ள வாடிக்கையாளர்களை உள்ளடக்கிய விசாலமான வாடிக்கையாளர் தளத்திற்கு முழுமையான தொலைத்தொடர்பாடல் தீர்வுகளை இந்நிறுவனம் வழங்கி வருகின்றது. பலம் பொருந்தியதும் நவீனமானதுமான ஒரு டிஜிட்டல் வலையமைப்பை லங்காபெல் தம்வசம் கொண்டுள்ளதால் - இணையம், தரவு மற்றும் குரல்வழி சேவைகளில் இது நிபுணத்துவம் பெற்றுள்ளது.
இலங்கையில் FLAG கடலடி கேபிள் வலையமைப்புக்கான (Submarine cable network) 'தள மைய பங்காளியாக' லங்காபெல் நிறுவனம் திகழ்கின்றது. ரூபா 3 பில்லியனை முதலீடு செய்ததன் ஊடாக, முற்றுமுழுதாக சுதந்திரமாக செயற்படும் கேபிள் இணைப்பு தளமேடையை லங்காபெல் சொந்தமாக இயக்கி வருகின்றது. அதன்மூலம் பல்வகைப்பட்ட சர்வதேச தரவு மற்றும் குரல்வழி தீர்வுகளையும் வழங்கி வருகின்றது. இந்த அடிப்படையில் இணையம், சர்வதேச தனியார் குத்தகை ஒப்பந்த சுற்றுத்தொகுதி (International Private Leased Circuit), பூகோள பல்-நெறிமுறை விபர நிலைமாற்றி (Global Multi-Protocol Label Switching) மற்றும் சர்வதேச நேரடி அழைப்பு (IDD) அல்லது ஏனைய சர்வதேச குரல்வழி சேவை போன்ற தீர்;வுகள் வழங்கப்படுகின்றன.
தனது நீண்டகால, முதன்மையான தொழில் வாழ்க்கையில் கலாநிதி. சமரசிங்க அவர்களால் சிக்கல் மிகுந்த வர்த்தக சவால்களை வெற்றிகொள்ள முடிந்தது மட்டுமன்றி அனுபவத்தின் பக்கபலத்தைக் கொண்ட தீர்ப்பு, உறுதிமிக்க பணி நெறிமுறை மற்றும் குறைகாண முடியாத நேர்மை போன்றவற்றைப் பயன்படுத்தி மிகவும் இடர்நிறைந்த தீர்மானங்களை எடுப்பதற்கும் அவருக்கு இயலுமாக இருந்தது. அரசாங்க உயரதிகாரிகள் மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்களுடன் உபாய ரீதியிலான ஒன்றிணைவுகள் மற்றும் பங்காளித்துவங்களை உருவாக்குவதில் அவருக்கு இருந்த ஆற்றலானது, அதிகாரமளித்தல் மற்றம் பொறுப்புக் கூறுவதில் ஒரு முன்னோடியாக மதிக்கப்படுபவராக அவரை மாற்றியமைத்தது.
கலாநிதி சமரசிங்க, பெரிய நிறுவனங்களுக்கான உபாய ரீதியிலான தலைமைத்துவம், வழிகாட்டுதல் மற்றும் திட்டமிடல் போன்ற விடயங்களில் நிரூபிக்கப்பட்ட கடந்தகால சான்றுகளை தம்வசம் கொண்டிருக்கின்ற அதேவேளை வாய்ப்புக்களை பயன்படுத்திக் கொள்ளல், தொழிற்பாடுகளை கட்டமைத்தல், வெற்றிகரமான புதிய வணிக அபிவிருத்தி முன்னெடுப்புக்கள் மற்றும் தொழில் முயற்சிகளை முன்கொண்டு செல்லல் ஆகியவற்றிலும் மிகவும் அனுபவம் பெற்ற ஒருவாரக காணப்படுகின்றார். உயர்மட்ட வருமான உருவாக்கத்திற்கான மூலோபாயங்கள் மற்றும் தந்திரோபாயங்களுக்கு அவசியமான தூரநோக்கு, மனஉறுதி மற்றும் திறன்களை வரமாகப் பெற்ற ஒரு ஆளுமையாக இவர் திகழ்கின்றார்.