2025 செப்டெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

பிரித்தானியாவில் டக்ஸி விளம்பர செயற்பாடுகளை ஆரம்பித்துள்ள இலங்கை சுற்றுலா சபை

A.P.Mathan   / 2014 ஓகஸ்ட் 12 , பி.ப. 02:30 - 0     - {{hitsCtrl.values.hits}}


பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் வழிகாட்டலின் கீழ், பிரித்தானியாவின் 450க்கும் மேற்பட்ட டக்ஸிகளில் இலங்கையில் காணப்படும் சுற்றுலாப் பகுதிகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் விளம்பரங்கள் இலங்கை சுற்றுலா ஊக்குவிப்பு அதிகார சபையின் மூலம் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
 
பிரித்தானியா, பிரான்ஸ், ஜேர்மனி, கொரியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளைச் சேர்ந்த மொத்தமாக 1200 டக்ஸிகளில் இந்த விளம்பரங்களை பதிவு செய்வதற்கான நடவடிக்கைகளை இலங்கை சுற்றுலா ஊக்குவிப்பு அதிகார சபையின் மூலம் மேற்கொள்ளப்படுகின்றன.
 
மென்செஸ்ட்டர், பேர்மிங்ஹம் மற்றும் லண்டன் ஆகிய நகரங்களில் முதற்கட்டமாக இந்த திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் எதிர்வரும் காலங்களில் பிரித்தானியா மற்றும் ஐரோப்பிய நாடுகளிலிருந்து இலங்கைக்கு வருகை தரும் சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X