2025 செப்டெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

புத்தளத்தில் கழிவு முகாமைத்துவ கட்டமைப்பை நிறுவ அரச அனுமதி

A.P.Mathan   / 2014 ஓகஸ்ட் 15 , மு.ப. 11:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

107 மில்லியன் டொலர்கள் செலவில் புத்தளத்தில் கழிவு முகாமைத்துவ கட்டமைப்பொன்றை நிறுவ அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதன் பிரகாரம் கொழும்பையும் கொழும்பை அண்மித்த பகுதிகளிலும் சேகரிக்கப்படும் குப்பைகளை மீதொட்டமுல்ல பகுதியிலிருந்து புகையிரதம் மூலம் புத்தளம் பகுதிக்கு அனுப்பி, அங்கு இந்த குப்பைகளை சர்வதேச தரங்களுக்கமைய பதப்படுத்தி, அவற்றிலிருந்து ஹொல்சிம் தொழிற்சாலைக்கான எரிபொருளை பெற்றுக் கொடுப்பதற்குரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என ஊடக அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.
 
நாளாந்தம் கொழும்பில் சுமார் 700 மெட்ரிக் தொன் குப்பை சேகரிக்கப்படுவதாகவும், இவற்றை முகாமைத்தவம் செய்வது என்பது மிகவும் சிக்கலான விடயமாக அமைந்திருப்பதாகவும் அவர் கருத்து தெரிவித்திருந்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X